கே ஜே 2 படத்திற்கு பிறகு அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு படம் என்றால் சலார்.இந்த படத்தில் பிரபாஸ் மற்றும் பிரபாஸ்க்கு ஜோடியாக சுருதிஹாசனும் நடித்துள்ளார்.பிரபாஸ்க்கு பாகுபலி படத்திற்கு பிறகு நடித்த அனைத்து படங்களும் தோல்வியிலேயே முடிந்ததால் இந்த படம் இவருக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே ஜி எஃப் போல மாஸ் வெற்றி கொடுத்த பிரசாந்த் நில் இந்த படத்தை இயக்கியுள்ளார் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தை நிறுவனம் ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்துள்ளது.இந்த நிறுவனம்தான் கே ஜி எஃப் படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.சலார் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம்,மலையாளம் போன்ற மொழிகளில் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.இந்தப் படத்தின் டீசரை பட குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர் அது அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்து போய் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அந்த வகையில் சலார் படம் வெளியாவதற்கு குறைந்த நாட்களாகவே இருப்பதால் அந்த படத்திற்கு அப்டேட் ஆக 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததை போஸ்டராக பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.