சுவர் இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன் | Suvar Idinthu Viluvathu Pol Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது.
கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.வீட்டில் உள்ள சுவர்கள் அல்லது வீடு இடிந்து கீழே விழுவது போல் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
சுவர் இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
சுவர் இடிந்து விழுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவரின் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் மற்றும் நண்பர்கள் உறவினர்களுடன் சண்டை ஏற்படலாம்.
சுவர் இடிந்து மேலே விழுவது போல் கனவில் வந்தால்
சுவர் இடிந்து மேலே விழுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன சங்கடங்கள் ஏற்படும்.நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
வீட்டின் சுவரை இடிப்பது போல் கனவில் வந்தால்
வீட்டின் சுவரை இடிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் தேவையில்லாத செயலை செய்து அந்த செயலின் மூலம் கஷ்டப்பட போகிறார்கள் என்று இந்த கனவு உணர்த்துகிறது.எந்த ஒரு செயலை செய்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து அந்த செயலை செய்ய வேண்டும்.
சுவரில் விரிசல் ஏற்படுவது போல் கனவில் வந்தால்
சுவரில் விரிசல் ஏற்படுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவரின் குடும்ப நிம்மதி குறையும்.நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் |
கத்தியால் குத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் |
கனவில் வெள்ளம் வந்தால் என்ன பலன் |
ஆடை இல்லாமல் கனவு வந்தால் என்ன பலன் |
Thank you bro