Homeதமிழ்Tamil Thai Valthu Lyrics In Tamil | தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்

Tamil Thai Valthu Lyrics In Tamil | தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகள் Tamil Thai Valthu

Tamil Thai Valthu: தமிழ் தாய் வாழ்த்து என்பது இந்திய மாநில அரசின் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டு பாடபெரும் வாழ்த்து பாடல் ஆகும்.இது தமிழ் தாயை வாழ்த்தி வணக்கம் சொல்வதாக அமைந்திருக்கிறது.இந்தப் பாடல் அரசு விழாக்கள் பள்ளிகளின் காலை இறைவணக்கம் போன்ற நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் இந்த பாடலை பாடுகின்றனர்.இந்திய தேசிய கீதம் இறுதியில் பாடப்படும்.தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ சுந்தரனார் என்பவர் ஆவார்.இவர் 1891 இல் எழுதி வெளியிட்டு புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் என்ற நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ் தெய்வ வணக்கம் என்னும் தலைப்பில் ஒரு பகுதியாக இந்த பாடல் அமைந்திருக்கிறது.

- Advertisement -

Tamil Thai Valthu Written By

தமிழ் தாய் வாழ்த்து என்பது இந்திய மாநில அரசின் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டு பாடபெரும் வாழ்த்து பாடல் ஆகும்.இது தமிழ் தாயை வாழ்த்தி வணக்கம் சொல்வதாக அமைந்திருக்கிறது.இந்தப் பாடல் அரசு விழாக்கள் பள்ளிகளின் காலை இறைவணக்கம் போன்ற நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் இந்த பாடலை பாடுகின்றனர்.

இந்திய தேசிய கீதம் இறுதியில் பாடப்படும்.தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ சுந்தரனார் என்பவர் ஆவார்.இவர் 1891 இல் எழுதி வெளியிட்டு புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் என்ற நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ் தெய்வ வணக்கம் என்னும் தலைப்பில் ஒரு பகுதியாக இந்த பாடல் அமைந்திருக்கிறது.

tamil thai valthu

Tamil Thai Valthu Lyrics In Tamil

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

- Advertisement -

தெக்கணமும் அதிசிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!

- Advertisement -

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!

தமிழ் தாய் வாழ்த்து முழு பாடல் Lyrics

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிசிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

tamil thai valthu

தமிழ் தாய் வாழ்த்து முழு பாடல் விளக்கம்

நீர் நிறைந்த கடல் என்னும் ஆடைய உடுத்திய நிலமென்னும் பொண்ணுக்கு அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்திய கண்டத்தில் தென்னாடும்.அதில் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடும் பொருத்தமான பிறை போன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மனம் வீசும் திலகமாகவும் இருக்கின்றது.அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் பெறும் வகையில் எல்லா திசையிலும் புகழ் மணக்கும் படி இருக்கின்ற.பெருமைமிக்க தமிழ் பெண்ணே தமிழ் பெண்ணே இன்றும் இளமையாக இருக்கின்ற.உன் சிறப்பான திறமையை வியந்து எங்களின் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR