Homeதமிழ்நாடுThanjavur Big Temple History | தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு

Thanjavur Big Temple History | தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு

தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு | Thanjavur Big Temple History

தஞ்சை பெரிய கோவில் | Thanjavur Big Temple

தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் தலம் தஞ்சாவூரில் உள்ள சோழநாட்டு காவிரி ஆற்றின் தென்கரை பகுதியில் அமைந்திருக்கிறது.இது திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோவில் ஆகும்.

- Advertisement -

இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னத்தில் ஒன்றாகும்.இது இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் தமிழர் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில் அற்புதமான கலை கட்டிடங்களை அம்சத்தை கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.

இது பத்தாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற இராசராச சோழன் என்ற அரசர் இந்த கோவிலை கட்டினார்.இந்தக் கோவில் 1003-1004 ஆண்டுகளில் தொடங்கி ‌1010 ஆண்டு இந்த கோவிலை கட்டி முடித்தனர்.இந்தக் கோவில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தளமாக விளங்குகின்றது.

1987 ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பன்னாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.இதில் அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இந்தக் கோவில் கங்கைகொண்ட சோழி சுவரர் கோயில் தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில் ஆகிய மூன்றும் USESCO நிறுவனத்தினால் பொது ஊழி உலக பாரம்பரிய கலைப்பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது.

தஞ்சாவூர் அரண்மனை தேவதானத்திற்கு உட்பட்ட 88 கோயில்கள் இந்த கோவிலிலும் ஒன்றாகும்.இது திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

- Advertisement -

தஞ்சை பெரிய கோவில் பற்றி 10 வரிகள்

 • 1997ஆம் ஆண்டிற்குப் பின் அதாவது 23 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை பெரிய கோயிலுக்கு திருக்குடமுழுக்கு 2020 பிப்ரவரியில் நடைபெற்றது.1997க்கு முன் 1980ல் குடமுழுக்கு நடைபெற்றது.
 • தஞ்சாவூரில் உள்ள காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலை ராஜராஜேச்சரம்,பெருவுடையார் கோயில்,பிரஹதீஸ்வரர் ஆலயம் என்று பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்றன.
 • 1003-1010ஆம் ஆண்டிற்கு இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவில் திராவிடக் கோவில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகின்றது.
 • இந்த கோவிலின் சில பகுதிகள் பிற்காலப் பாண்டியர்கள்,விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டன.முன்தாழ்வாரம்,நந்தி மண்டபம்,அம்மன் சன்னிதி,சுப்ரமணியர் சன்னிதி போன்ற பகுதிகளைத் தவிர இந்த கோவிலில் உள்ள மற்ற பகுதிகள் ராஜராஜ சோழன் காலத்திலேயே கட்டப்பட்டவை ஆகும்.
 • UNESCO உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை பெற்று இருக்கிறது.இந்தக் கோவில் இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.இந்தக் கோவிலின் 1000-வது ஆண்டு விழா கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்றது.
 • இந்த கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுயிருக்கிறது.
 • பிற்காலக் கோயில்களில் கோபுரங்கள் உயரமாக அமைந்திருக்கும்.இந்தக் கோவிலில் உள்ள கோபுரம் மிக உயரமாக அமைக்கப்பட்டு இருக்கிறது.
 • இந்த கோவிலின் கோபுரத்தின் உச்சியில் கலசத்திற்கு கீழே உள்ள பகுதி ஒரே கல்லால் செய்யப்பட்டது.இந்த கோவிலின் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்றெல்லாம் கூறப்பட்டாலும் அது உண்மையல்ல.
 • தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்று பலர் வழக்குத் தொடர்ந்ததால்,தமிழ் – சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
 • தஞ்சாவூர் பெரிய கோவிலின் உயரமானது 216 அடி கொண்டிருக்கிறது.இந்த கோவிலின் மேலே உள்ள கோபுரத்தின் கீழ் இருக்கும் பகுதி 80 டன் எடையை கொண்டிருக்கிறது.இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய லிங்கம் என்று வரலாறு கூறப்படுகின்றது.

தஞ்சை பெரிய கோவில் தலைமை சிற்பி

குஞ்சர மல்லன் என்பவர்தான் பெரியகோயிலைக் கட்டிய தலைமை கட்டடப் பொறியாளர் ஆவார்.இவருக்கு ராஜராஜப் பெருந்தச்சன் என்று பட்டம் கொடுத்திருக்கிறார் ராஜராஜன் சோழன்.கோவிலின் மற்ற வேலைகளைச் செய்தவர்களையும் சமமாகவே மதித்திருக்கிறார்.கோயிலில் நாவிதராக வேலை பார்த்தவருக்குக் கொடுக்கப்பட்ட பட்டம், ராஜராஜப் பெரு நாவிதன்.

இவர்கள் இதனை மட்டும் இல்லாமல் தாஜ்மஹால் உள்ளிட்ட நாட்டின் பல பிரமாண்ட கட்டுமானங்களை கட்டினார்கள் அப்போதைய அரசர்களால்  போர் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை கொண்டு இதை கட்டினார்கள். ஆனால் பெரிய கோவில் முழுக்க முழுக்க இறைப்பணியில் ஆர்வம் உள்ளவர்களை கொண்டு மட்டுமே கட்டப்பட்டது.

- Advertisement -

கோவிலில் உருவத்திற்கு நிதியாக கொட்டி கொடுத்தவர்கள் முதல் ஒரே ஒரு செப்பு காசு கொடுத்தவர் வரை அத்தனை பேர் பெயர்களையும் என் பெயருக்கு கொடுக்கப்படும் அதை முக்கியத்துவத்துடன் கல்வெட்டில் குறிப்பிட வேண்டும்.ராஜராஜ சோழன் கூறிய முதல் உத்தரவின்படி அனைவருடைய பெயர்களும் கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டன.

பெரிய கோவிலில் இருக்கும் லிங்கத்தின் பீடம் மூணு அடி உயரம் 55 அடி சுற்றளவு 6 அடிக்கு கோமுகமும் கொண்டிருக்கிறது. இது ஒரே கல்லில்  செதுக்கப்பட்டது. இந்த விஸ்வரூப பீடத்தை செய்வதற்கு குறைந்தபட்சம் 500 டன் எடையுள்ள பாறையை மலையிலிருந்து விட்டு நகர்த்திக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

தஞ்சை பெரிய கோவில் எத்தனை அடி

தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு
தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு
 • இந்தக் கோவிலின்கோபுரம் 216 அடி உயரம் எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம் இருக்கும்.வெளியே பெரிய கோபுரங்கள் இருக்கும்.தஞ்சையிலோ கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கோபுரம்.
 • பெரிய சிவலிங்கம்,சிவலிங்கம் என்பதன் பொருள் கடவுள் உருவமற்றவர் என்பதாகும்.இது 13 அடி உயரம் கொண்டது.
 • கர்ப்பகிரகத்துக்கு நேராக மிகப் பெரிய நந்தி,சிவபெருமானின் வாஹனம்.12 அடி உயரம்.எடை 12 டன்.
 • கோபுரத்தின் உச்சியில் வட்டவடிவ சிகரம்.அங்குள்ள கல்லின் எடை 81 டன்.
 • இறுதியாக 1000 ஆண்டு பழமையான அற்புத ஓவியங்கள் இருக்கின்றது.

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்

தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை 985 முதல் 2014 வரை ஆட்சி செய்தவர் அருள்மொழிவர்மன். இவர் சோழ தேசத்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கியவர்களை வளமாக வாழ செய்த அருள்மொழி வருமனுக்கு ராஜராஜ சோழன் என்ற பெயர் வரலாற்றை கம்பீரமாக நிலைத்து நின்றது.

பிறகு ராஜராஜ சோழன் காலத்தில் ஏராளமான ஆலயங்கள் கட்டப்பட்டிருந்தாலும் அவருடைய புகழ் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் உலகறிய செய்து வருவது பெருவுடையார் கோயில் தான். இது அனைத்து ஆலயங்களிலும் ராஜகோபுரங்களில் முதன்மை பெற்றிருக்கிறது.

ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் மூலவர் வீற்றிருக்கும் தட்சண மேரு என்ற கோபுரமே முதன்மையாக திகழ்கின்றது. இந்த கோவில் பூமியிலிருந்து 216 ஐடி உயரம் உள்ள கோபுரம் பூமியில் பாடப்பட்டிருக்கும் அடித்தளம் பெறும் ஆறடி மட்டுமே ஆகும்.

தஞ்சையின் மையப்பகுதியில் காட்சி தரும் பெரிய கோவிலில் பிற்காலத்தில் மராட்டியர்கள் எழுப்பிய நுழைவு வாயில் முதன்மையாக காட்சி தருகின்றது. இதனை கடந்து சென்றாள் ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் கூடிய கேரளாந்தகன வாயில் இருக்கிறது.

Thanjavur Temple History in Tamil

இதற்கு அடுத்து மூன்று நிலைகள் கொண்டதாக இழந்து நிற்கும் ராஜராஜ சோழன் கட்டிய கோபுர வாசல் நம்மை வரவேற்கின்றது. ராஜ ராஜ சோழன் வாசலில் இருபுறமும் உள்ள யானையை விளங்கும் பாம்பு துவார பாலர்களின் கால்களை சுற்றி இருக்கும் பாம்பு ஆகியவை சிறப்பு வாய்ந்த சிற்பங்களாக அமைந்திருக்கிறது.

கோவிலின் உள்ளே இருக்கும் தனி மண்டபத்தில் 20 டன் எடை 2 மீட்டர் உயரம் 6 மீட்டர் நீளம் 2½ மீட்டர் அகலத்துடன் மிகப்பெரிய நந்தி சிலை அமைந்திருக்கிறது. நந்தி மண்டபத்தை அடுத்து சில படிகள் ஏறினால் மகா மண்டபம் இருக்கிறது. இதன் வலது புறம் விநாயகரும் இடது புறம் துர்கா தேவியும் இருக்கின்றனர்.

அரங்கம் போல அமைந்த இந்த மகா மண்டபத்தில் தான் தெய்வங்களின் சிறப்பு சிலைகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட ராஜராஜன் ஐம்பொன் சிலையும் இங்கு வைத்து வழிபடுகிறது.கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே  பெரியதாக திகழ்கிறது இது ஆறு அடி உயரமும் 54 அடி சுற்றளவு உள்ள ஆவுடையாரின் மேல் 13 அடி உயரமும் 23 அரை அடி சுற்றளவு உள்ள லிங்கம் பிரம்மாண்டமாய்  இருக்கின்றது. கருவறையில் உள்ள வண்ண வண்ண ஓவியங்கள் சித்திரக்கலையின் சிற்பத்தை சித்தரிக்கின்றது.

மேல் தள சுற்று பல வகையான நடன பாவங்கள் சிற்பங்களாக இருக்கின்றது. பரந்த விழிகளுடன் உயர்ந்த கோட்டை மதில்  சுவர்களும் நீர் நிறைந்த அகழியும் சூழ்ந்த இந்த அற்புதமான ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமல்ல வெளிநாட்டு பலரும் தினம் சுற்றுலாவாக வழிபாட்டிற்காகவும் வந்து மகிழ்கின்றனர். தரணி போற்றும் தஞ்சை பெரிய கோவிலில் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நின்று தமிழனின் பெருமையை பறைசாற்று கொண்டு இருக்கின்றது.

தஞ்சை பெரிய கோவில் குறிப்புகள்

தஞ்சை பெரிய கோவில் என்பதின் வடமொழியாக்கம் செய்து பிரகதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில் மேலும் ராஜராஜேஸ்வரர் கோவில்,ராஜராஜேஸ்வரம்  என்று அழைக்கப்படுகின்றது.

இது முதலாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோவில்  துவக்கத்தில்  ராஜராஜேஸ்வரம் என்றும்  பிறகு தஞ்சை பெரிய கோவில் என்றும் 17 ஆம் மற்றும் பதினெட்டாம் களில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

தஞ்சை பெரிய கோவிலின் தல வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம் காஞ்சியில் ராஜசிம்மன் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது இதே போல் ஒரு கோவிலை கட்ட ராஜ ராஜ சோழன் விரும்பினார் அதுவும் கோவில் யாரும் கட்டாத அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக கட்ட வேண்டும் என்று நினைத்தார் அப்படி கட்டப்பட்ட கோவில்தான் தஞ்சாவூர் பெரிய கோவில். இந்த உலகம் இயங்கும் உன்னதமான கோவில்.

இந்த கோவிலை கட்டுவதற்கு வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டது. இதுவும் கற்களை செதுக்கி ஒரு வடிவத்திற்கு கொண்டு வருவதற்கு 25 ஆண்டுகள் ஆனது பின் செதுக்கிய கற்களை ஒன்றாக சேர்வதற்கு 9 ஆண்டுகள் ஆனது மொத்தம் 34 ஆண்டுகள் இதற்கு ஆனது. கோபுரம் மட்டும் தடை தளத்திலிருந்து 216 அடி உயரத்தில் இருந்ததாம் இதன் உச்சியில் உள்ள வட்ட வடிவ பிரம்ம மந்திரங்கள் 80 டன் எடை உள்ள ஒரே கல்லில் ஆனது.

ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு அருகில் உள்ள சாரப்பள்ளம் என்ற ஊர் வரை மணல் கொட்டி அதை ஒரே ஒரு கல்லை மட்டுமே மேலே கொண்டு சென்றனர். தஞ்சாவூர் கோவில் கோபுர  கலசத்தில் உள்ள நிலை கீழே விழாதபடி கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோவில் உலகின் பல நாடுகளின் கட்டிடக்கலை வல்லுநர்கள் வந்து பார்த்து வியந்து போன கோவிலாக கருதப்படுகிறது.

தஞ்சை பெரிய கோவில் வரலாறு

தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு
தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் கடவுளை வழிபடுவது கோவில்களுக்கு செல்வது என்று ஒரு வாழ்க்கை முறையை நம்புகின்றார்கள் எனவே கோவில்கள் மனித தன்மைகளை புனித படுத்துகின்றனர் மற்றும் தூய்மைப்படுத்துகின்றன என்று நம்பப்படுவதனால் அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

ஆன்மீக முக்கியத்துவத்தை விட வரலாற்று கோவில்கள் எப்பொழுதுமே முக்கியத்துவத்தை பகிர்ந்து கொள்கின்றது.மேலும் இந்த பதிவின் நோக்கம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றின் வரலாற்றை விவரிப்பதாகவும் இந்திய வரலாற்றை பிரகதீஸ்வரர் கோயில் கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தில் சாமான பங்கு கொண்டிருக்கிறது.

 • பிரகதீஸ்வரர் கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூரில் அமைந்திருக்கும் சிவன் கோயிலாகும்.இது பெரிய கோவில் ராஜராஜேஸ்வரன் கோவில் மற்றும் இராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்படுகின்றது.
 • இது இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக திகழ்கின்றது. சோழர் காலத்தில் திராவிட கட்டிடக்கலைக்கு முறைய எடுத்துக்காட்டாக இருக்கிறது. பேரரசர் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு கிபி 1010இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த கோவில் 2010ல் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
 • இந்த கோவில் UNESCO உலக பாரம்பரிய தளமான பெரிய கோவில்கள் என்று அழைக்கப்படுகிறது. மற்ற இரண்டு பிரகதீஸ்வரர் கோவில் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் ஐராவதேஸ்வரர் கோவில் ஆகும்.
 • இது பதினாறாம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்ட கோட்டை சுவர் களுக்கு இடையே இந்த கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலின் கோபுரம் 216 அடி உயரம் மற்றும் உலகிலேயே மிக உயரமானது. இந்த கோவிலின் குடும்பம் ஒரு பாறையில் செதுக்கப்பட்டு சுமார் 80 டன் எடையை கொண்டது.
 • இந்தக் கோயிலின் நுழைவாயில் ஒரு பெரிய நந்தி ஒரு பாறையில் இருந்து செதுக்கப்பட்டது.இது சுமார் 16 அடி நீளமும் 13 அடி உயரமும் கொண்டிருக்கிறது.இந்தக் கோயிலின் முழு அமைப்பும் கிரானைட் கற்களால் செய்யப்பட்டது கோவிலுக்கு மேல் சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தமிழகத்தின்  சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த கோவில் அமைந்திருக்கிறது.
 • முதலாம் இராஜராஜ சோழன் என்று அழைக்கப்படும் தமிழ் பேரரசர் அருள்மொழி வருமன் கிபி 1002 இல் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியிருந்தார் தமிழ் சோழர்களின் மற்ற பெரிய கட்டுமான திட்டங்களில் இதுவே முதன்மையானது.
 • இந்தக் கோயிலின் அமைப்பை ஒரு சமச்சீர் மட்டும் அச்சு வடிவில் நிர்வகிக்கின்றது இதே காலகட்டத்திலும் அதற்கு அடுத்த இரண்டு நூற்றாண்டுகளிலும் உள்ள கோயில்கள் தமிழர்களின் சோழர்களின் சக்தி கலை நிபுணத்துவ மற்றும் செல்வத்தின் வழிபாடு ஆகும்.
 • இந்தக் கோயிலில் சதுர தலையெழுத்துக்களை கொண்ட பன்முகத்துண்கள் ஒன்றாம்சங்களின் தோற்றம் சோழர் வாணியின் வகையில் குறித்து இருக்கிறது இது அக்காலத்தில் புதிதாக இருந்தது.
 • இது ஒரு கட்டிடக்கலை உதாரணம் இது கோவில்களில் திராவிட கட்டிடக்கலையின் உண்மையான வடிவத்தை தருகின்றது மற்றும் சோழப்பேரரசு மற்றும் தென்னிந்தியாவின் தமிழ் நாகரீகத்தின் மூலம் பிரதிநிதியாக இருக்கிறது.
 • இந்த கோவிலின் நுழைவாயிலில் கிழக்கே உடையார் சாலையில் அக்னி தேவர் சன்னதி இருக்கிறது சுமார் 240 சிவயோகிகள் உடையார் வீதியில் தங்கி ஒரு நாளைக்கு ஒருமுறை உணவருந்தியதாகவும் அவர்களுக்கு 10 குழுக்களாக பிரிந்து 24 திருவிழாக்களில் கொண்டாடியதாகவும் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றது.
 • கோவிலின் முக்கிய தெய்வம் சிவபெருமான் லிங்கம் சுமார் 12 அடி உயரம் மற்றும் தென்னிந்தியாவின் மிக உயரமான சிலைகளில் ஒன்றாக இருக்கிறது. மற்றும் முக்கிய தெய்வங்கள் பார்வதி விநாயகர் கார்த்திகேயன் தட்சிணாமூர்த்தி மற்றும் வாரசி ஆகியோர் இருக்கின்றனர்.
 • மகாநந்தி ராஜராஜ நுழைவாயிலின் 16 கால் மண்டபத்தில் அமைந்து இருக்கிறது சிவபெருமானின் வாகனம் சுமார் 80 டன் எடையுள்ள ஒற்றைக்கல் பாறையில் சிதைக்கப்பட்டு இருக்கிறது.
 • இந்த கோவில்களிலேயே மிக உயரமான நந்திகளில் ஒன்றாக இருக்கிறது இந்த நந்தி சிலை கிபி 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர வம்சத்தை சேர்ந்த நாயக் பேராசர்களால் செதுக்கப்பட்டு உள்ளது.16 கால்கள் கொண்ட இந்த மண்டபத்தின் தென்திசையில் அமைந்துள்ள நந்தியே இந்த கோயிலுக்கு எடுக்கப்பட்டிருக்கிறது.
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR