கனவில் தண்ணீர் வந்தால் என்ன பலன் | Thannir Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.
உணவு என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும் ஆனால் உணவுக்கு மேல் தண்ணீர் தான் மிகவும் அவசியமான ஒன்று உணவு சாப்பிடாமல் கூட இருந்து விடலாம் ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது அந்த அளவுக்கு உணவை விட தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்றாகும் அப்படிப்பட்ட தண்ணீர் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கனவில் தண்ணீர் வந்தால் என்ன பலன்
கனவில் தண்ணீர் வந்தால் கனவு காண்பவருக்கு கிடைக்க இருக்கும் இறை அருள் மற்றும் கனவு காண்பவர் எந்நேரமும் இறைவனின் அருளை வேண்டிக் கொண்டே இருப்பார்.
மழை தண்ணீரில் நனைவது போல் கனவில் வந்தால்
மழை தண்ணீரில் நனைவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவரின் பழைய நினைவுகளால் மனதில் தேங்கி இருக்கும் கவலைகள் போக இருப்பதை இந்த கனவு உணர்த்துகிறது.
தண்ணீரில் குளிப்பது போல் கனவில் வந்தால்
தண்ணீரில் குளிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு மனதில் இருக்கும் பிரச்சினைகளை தானே சரி செய்து கொள்ள இருப்பதை இந்த கனவு உணர்த்துகிறது.
தண்ணீரில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் |
ஆற்று தண்ணீர் கனவில் வந்தால்
ஆற்று தண்ணீர் கனவில் வந்தால் கனவு காண்பவர்களுக்கு இதுவரைக்கும் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்விற்கு முன்னேறுவார்.
சுடுதண்ணீர் கனவில் வந்தால்
சுடு தண்ணீர் கனவில் வந்தால் கனவு காண்பவர் எந்த ஒரு காரியத்தை செய்ய நினைத்தாலும் குழப்பமும் கோபமும் அதிகமாக வரும். பிறர் சிறிதளவு தவறு செய்தாலும் அதை மனது ஏற்றுக் கொள்ளாது.
அழுக்கான தண்ணீர் கனவில் வந்தால்
அழுக்கான தண்ணீர் கனவில் வந்தால் கனவு காண்பவர் எதிர்மறையான எண்ணங்களை மனதில் இருந்து நீக்கிவிட்டு. தனக்கு வரும் பிரச்சனைகள் எதன் மூலமாக வருகிறது என்று ஆலோசனை செய்து அந்த பிரச்சனைகளை முடித்து விட இருப்பதை இந்த கனவு உணர்த்துகிறது.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
கடல் கனவில் வந்தால் என்ன பலன் |
கனவில் வெள்ளம் வந்தால் என்ன பலன் |
கன்று குட்டி கனவில் வந்தால் |
வெள்ளை பூக்கள் கனவில் வந்தால் |