விக்ரம் தென்னிந்தியா திரைப்படம் மொழிகளில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். 1990 ஆம் ஆண்டில் என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு சேது என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது இந்த படத்தில் இருந்து இவரை சீயான் விக்ரம் என்று இவரின் ரசிகர்கள் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து ஜெமினி,தூள்,சாமி,அந்நியன் போன்ற வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் இன்று வரை தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.தொடர்ந்து தற்பொழுது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.
அந்த திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடல் வெளியானது இந்நிலையில் அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்ட இருந்த நிலையில் திடீரென்று அந்த படத்திற்கு விடிவு காலம் பிறந்து அந்த படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் இந்த படத்தின் முழு படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் விரைவில் திரையில் வரும் எனவும் தெரிவித்து இருந்தார்.
துருவா நட்சத்திர படத்திலிருந்து இரண்டாவது சிங்களாக ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.