அருள்நிதி தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த மறைந்த கருணாநிதியின் பேரனும் மு.க. தமிழரசுவின் மகனும் ஆவார். அருள்நிதி 2010 இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் வம்சம் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து உதயன் மௌனகுரு தகராறு போன்ற பல நடித்தும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியவில்லை.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு டிமான்டி காலனி என்ற திரைப்படத்தில் சீனிவாசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மக்களுக்கு பெரிதலும் பிடித்து இவர் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது டிமான்டி காலனி படம் வெளிவந்து 8 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தின் சூட்டிங் எடுக்கும் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் பெருமாள் மான காட்சிகள் இருட்டான சூழலில் எடுக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே டிமான்டி காலனி முதல் பாக மக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்று இருந்த நிலையில் டிமாண்டி காலனி 2 படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அருள்நிதி நடிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க இருக்கிறார். கூடிய விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.