Homeதமிழ்நாடுநாமக்கலில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு.

நாமக்கலில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள மாவு ரெட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (42) என்பவர் பரமத்தி யில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார் இவரின் கடையின் அருகே இலங்கை தமிழர் சுதாகரன் (35) செல்போன் மற்றும் செல்போனை பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை சுதாகரன் கடை திறக்கவில்லை.இந்நிலையில் சுப்பிரமணி வழக்கம் போல் தன் கடையை இரவு பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

மறுநாள் காலையில் சுப்பிரமணி தனது கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பின்னர் கடைக்குள் சென்று பார்த்தால் கடையில் வைக்கப்பட்டிருந்த 80 ஆயிரம் ரூபாய் பணமும் மல்லிகை பொருட்களையும் காணவில்லை. மளிகை கடையின் அருகே இருந்த செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததால் சுதாகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.செல்போன் கடையில் வைக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் ரூபாய் பணமும் 20க்கும் மேற்பட்ட புதிய செல்போன்களும் காணவில்லை இதன் அடுத்து மர்ம நபர்கள் கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

- Advertisement -

நாமக்கலில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு.

சுப்பிரமணி மற்றும் சுதாகரன் இருவரும் பரமத்தி காவலர் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் காவலர் இருவரின் கடையின் சோதனையை மேற்கொண்டு அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் பார்த்தபோது மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து காவலர் விசாரணை மேற்கொண்டு வருகிறார் இதை அடுத்து கை ரேகை நிபுணர்களும் திருட்டு நடந்த கடையில் பதிந்திருக்கும் கைரேகையை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR