தேன் மருத்துவ பயன்கள் | Then Benefits in Tamil
தேனானது தேன்பூச்சியால் சேகரிக்கப்பட்டு மனிதர்களால் உட்கொள்ளப்படுவது தேன்.எத்தனை வருடங்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருப்பது தேன். தமிழ் மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக மக்கள் பயன்படுத்தி வரும் அரிய உணவானது தேன்.
கொம்புத்தேன், மலைத்தேன், கூட்டுத் தேன், அடுக்குத்தேன் என தேனில் பல வகைகள் இருக்கிறது.தேனில் விட்டமின், மினரல் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
தேன் பயன்கள்
தேனானது சளி மற்றும் இருமல் ஆகியவைக்கு அருமருந்தாக இருக்கிறது.சளி மற்றும் இருமலால் அவதிப்படுபவர்கள் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில்,அரை எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் குணமாகும் இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சளி முற்றிலும் குணமாகும்.
தேனுக்கு அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருப்பதால் தொண்டையில் இருக்கக்கூடிய பாக்டீரியாவை அழித்து தொண்டையில் உண்டாகக்கூடிய கரகரப்பு போக்கும்.
நோய் வராமல் தடுக்க நாம் அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனே சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் வராதுன்னு சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது.
தேனுடன் சிறிது பூண்டு பற்கள் சேர்த்து அதை பத்து நாட்கள் ஊறவைத்து பிறகு தேனுடன் ஊறிய பூண்டை தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் இருதயம் வலுவாகும் மற்றும் இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
உடல் எடையை குறைக்க தேன்
அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள் காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்பை நீக்கி மற்றும் கல்லீரலில் உற்பத்தியாகும் கொழுப்பை கட்டுப்படுத்தும் இதன் மூலமாக உடல் எடை கூடாமல் இருக்கும் மற்றும் உடல் எடையை குறைக்கும்.
தினமும் உணவு சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் எலும்புகளில் கால்சியம் உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். இதன் மூலமாக எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து எலும்புகள் வலுப்படுத்தும் மற்றும் தேனானது இன்சுலேஷன் தடுக்கக் கூடியது என்பதால் மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சினைனால் அவதிப்படுபவர்கள் ஆதிபடுபவர்கள் சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.
தேன் சாப்பிடும் முறை
தேனை மென்று அப்படியே குடிக்கக்கூடாது .தேனை ஒரு சிறிய ஸ்பூனில் எடுத்து கையில் ஊற்றி நன்றாக நாவில் படும்படி வைத்து சாப்பிட வேண்டும்.. தினம்தோறும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேனை கலந்து குடிக்கலாம். தேனை தொடர்ந்து மூன்று மாதம் குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும் மற்றும் சிறுநீரக நோய், கண் சம்பந்தமான நோய்கள் குணமாக்கும்.தேனி நாம் இப்படி சாப்பிட்டு வந்தால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்
தேன் தீமைகள்
தேன் மருந்தாக இருந்தாலும் அதிக அளவு எடுத்துக் கொள்வதால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம்.தேன் அதிக அளவு உட்கொள்ளும் போது தேனில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரையின் அளவு உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.
தேனானது அதிக அளவு உட்கொள்வதால் அதில் உள்ள சர்க்கரை பற்களில் ஒட்டிக்கொண்டு பல் சிதைவு மற்றும் பல் சொத்தைக்கு காரணமாக அமையலாம்.
தேனானது சர்க்கரைக்கு மாற்றாக இருந்தாலும் தேனை அதிக அளவு உட்கொள்ளும் போது அதில் உள்ள மாவுச்சத்து ரத்த சக்கரையே அதிகரிக்கிறது. எனவே நீரழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிட வேண்டும்.