தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன்| Thengai Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!! வாழ்வில் ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். தூங்கும் போது கனவுகள் வரும். நமக்கு வரும் கனவுகளில் நல்லது நடப்பது போல் வரலாம்,கெட்டது நடப்பது போலும் வரலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன்
தேங்காய் கனவில் வந்தால் வாழ்வில் முன்னேற்றம் அடைந்து ஒரு நல்ல நிலைமைக்கு வருவீர்கள். தொழில் செய்பவர்களாக இருந்தால் தொழிலில் ஏற்பட்டுள்ள நஷ்டங்கள் நீங்கி லாபம் கிடைக்கும்.உடல் நிலையில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது கூடிய விரைவில் சரியாகிவிடும்.
அழுகிய தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன்
தேங்காய் நம் வீட்டில் சாமி கும்பிடும் போது அல்லது கோவிலில் படைக்கும் போது அழுகி இருந்தால் மட்டும்தான் கெட்ட சகுனம் என்று சொல்வார்கள். ஆனால் தேங்காய் அழுகிருப்பது போல் கனவில் வந்தால் அது நல்ல சகுனம் தான்.நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும்.
இளநீர் கனவில் வந்தால் என்ன பலன் |
உடைத்த தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன்
உடைத்த தேங்காய் கனவில் வந்தால் நீண்ட நாட்களாக உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் ஏதோ ஒன்று இருக்கும் அந்த ஆசைகள் இப்போது நிறைவேற போகிறது என்று அர்த்தம்.
முழு தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன்
முழு தேங்காய் கனவில் வந்தால் ஒரு புதிய முயற்சியில் இறங்க போகிறீர்கள் அந்த முயற்சியில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைத்து இருந்தால் இப்போது தொடங்கலாம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
தேங்காய் உடைப்பது போல் கனவில் வந்தால்
தேங்காய் உடைப்பது போல் கனவில் வந்தால் உங்களின் நீண்ட நாள் ஆசை ஏதோ ஒன்று நிறைவேற போகிறது என்று அர்த்தம்.அந்த ஆசை எதுவாக வேண்டும் ஆனாலும் இருக்கலாம்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
தென்னை மரம் கனவில் வந்தால் என்ன பலன் |
முருங்கைக்காய் கனவில் வந்தால் என்ன பலன் |
ரோஜா பூ கனவில் வந்தால் என்ன பலன் |
வாழைப்பழம் கனவில் வந்தால் என்ன பலன் |