Homeஆன்மிகம்கனவு பலன்கள்தென்னை மரம் கனவில் வந்தால் என்ன பலன் | Thennai maram kanavil vanthal

தென்னை மரம் கனவில் வந்தால் என்ன பலன் | Thennai maram kanavil vanthal

தென்னை மரம் கனவில் வந்தால் என்ன பலன் | Thennai maram kanavil vanthal

வணக்கம் நண்பர்களே அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் அப்படி நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வருவது வழக்கம் அந்த கனவில் நம்மை யாரோ துன்புறுத்துவது போல பாம்பு கடிப்பது போல நமக்கு தீங்கு நடப்பது போல மற்றும் நமக்கு கல்யாணம் நடப்பது போல் நல்லது நடப்பது போல் கனவுகள் வரலாம் இப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

தூங்கும் போது கனவு வருவது என்பது வழக்கமான ஒன்றாகும் அந்தக் கனவில் சாமி பேய் போன்றவைகள் வரும் இதைத்தவிர மரம் வகையில் ஏதேனும் கனவில் வந்தால் என்ன பலன் இருக்கிறது என்பதை இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தென்னை மரம் கனவில் வந்தால் 

தென்னை மரம் கனவில் வந்தால் எதிர்பாராத நல்லது நடக்க உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். எதிர்பாராத சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது அந்த எதிர்பாராத சம்பவம் நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம்.நீங்கள் ஏதேனும் இடங்களுக்கு செல்ல நினைத்து போக முடியவில்லை என்றால் அந்த இடத்திற்கு இனிமேல் போவீர்கள்.நீங்கள் நடக்கும் என நம்பிக் கொண்டிருந்த சில காரியங்கள் இனிமேல் நடக்கும்.

தென்னை மரம் கனவில் வந்தால் என்ன பலன் | Thennai maram kanavil vanthal

தென்னை மரத்தில் தேங்காய் நிறைய இருப்பது போல் கனவில் வந்தால்

நீங்கள் ஒரு அதிகாரத்திற்குச் சென்று மற்றவர்களை வேலை வாங்குவதற்கான அறிகுறியாகும். 

- Advertisement -

உடைந்த தென்னை மரம் கனவில் வந்தால்

உடைந்த தென்னை மரம் கனவில் வந்தால் பிரச்சனைகள் அதிகரித்து நண்பர்கள் உறவினர்களிடமிருந்து பல பிரச்சினைகள் வரும்.

தென்னை மரம் கனவில் வந்தால் என்ன பலன் | Thennai maram kanavil vanthal

- Advertisement -

தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பது போல் கனவில் வந்தால்

தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் வாழ்வில் உயர நினைக்கும் காரியங்களில் உயர முடியாத நிலையில் தள்ளப்படுவீர்கள். உங்களுக்கான வெற்றிகள் எதுவும் உங்களை வந்து சேராது.

தென்னை மரம் வீட்டில் அருகில் வளர்வது போல் கனவில் வந்தால்

தென்னை மரம் வீட்டில் அருகில் வளர்வது போல் கனவில் வந்தால் உங்களுக்கு புதுவிதமான யோசனைகள் வரும் அதன் மூலம் நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள்.

பெண்கள் கையில் தேங்காய் இருப்பது போல் கனவில் வந்தால்

பெண்கள் கையில் தேங்காய் இருப்பது போல் கனவில் வந்தால் வேலை செய்யும் பெண்ணாக இருந்தால் வேலை செய்யும் இடத்தில் அதிக ஆண்கள் வேலைக்கு வருவார்கள். ஆண்களின் உதவிகளால் சந்தோஷமாக இருப்பீர்கள்.

தேங்காய் உடைப்பது போல் கனவில் வந்தால்

தேங்காய் உடைப்பது போல் கனவில் வந்தால் ஆண்கள் பெண்களால் பல பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வார்கள் அதனால் ஆண்கள் பெண்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

தேங்காயில் பூ இருப்பது போல் கனவில் வந்தால்

தேங்காயில் பூ இருப்பது போல் கனவில் வந்தால் நண்பர்களிடம் இருந்து பல உதவிகள் கிடைக்கும் வெற்றிகள் உங்களைத் தேடி வரும் நண்பர்கள் மூலம் உங்களுக்கு பல வெற்றிகள் தேடி வரும்.

தேங்காய் அழுகி இருப்பது போல் கனவில் வந்தால்

தேங்காய் அழுகி இருப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் ஏதேனும் ஒரு செயல் அல்லது ஒருவர் மீது நம்பிக்கை வைத்திருந்தால் அந்த நம்பிக்கை வீண் போகி விடும். புதிதாக ஏதாவது ஒரு காரியம் தொடங்கினாலும் அல்லது முன்னதாக தொடங்கியிருந்தாலும் அந்த காரியம் தோல்வியிலேயே முடியும்.

தேங்காயில் செய்யப்படும் பொருட்களை சாப்பிடுவது போல் கனவில் வந்தால்

தேங்காயில் செய்யப்படும் பொருட்களை சாப்பிடுவது போல் கனவில் வந்தால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் சந்தோஷங்கள் உங்களைத் தேடி வரும்.

தேங்காய் பன் சாப்பிடுவது போல் கனவில் வந்தால்

தேங்காய் பன் சாப்பிடுவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர்கள் தனக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்குவதற்கான அறிகுறி ஆகும்.

தேங்காய் பால் குடிப்பது போல் கனவில் வந்தால்

தேங்காய் பால் குடிப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் தொடங்கிய காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். தொடங்க இருக்கும் காரியங்கள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.

இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.

இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள  இதோ படியுங்கள்கனவு பலன்கள்

 

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR