தேர் கனவில் வந்தால் என்ன பலன் | Ther Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.
ஒரு சில ஊர்களில் வருடத்துக்கு ஒரு முறை திருவிழா போடுவார்கள்.இன்னும் ஒரு சிலர் ஊரில் திருவிழாவின்போது சாமியை தேரில் வைத்து ஊர் சுற்றி வருவார்கள். அப்படிப்பட்ட தேர் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேர் கனவில் வந்தால் என்ன பலன்
தேர் கனவில் வந்தால் கனவு காண்பவர்களுக்கு எதிரிகள் இருந்தால் அவர்கள் உங்களுக்கு எதிராக பல காரியங்கள் செய்வார்கள் அப்படி செய்யும் காரியங்கள் அனைத்தும் அவர்களுக்கு ஆபத்தாக முடியும்.
உங்களின் எதிரிகளால் உங்களுக்கு எந்த பிரச்சனைகளும் இருக்காது. உங்களுக்கு எதிராக செயல்பட்டால் அவர்களுக்கு பல பிரச்சனைகள் வந்துவிடும்.
சாமி சிலை கனவில் வந்தால் என்ன பலன் |
கோவில் தேர் கனவில் வந்தால் என்ன பலன்
கோவில் தேர் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு உறவினர்களுடன் ஏதும் பிரச்சனைகள் இருந்தால் அந்தப் பிரச்சினைகள் எல்லாம் மறந்து நீங்கள் உறவினர்களுடன் சேர்வீர்கள்.உங்கள் உறவின் பகை மறந்து விட்டு அவர்கள் வீட்டிற்கு செல்வீர்கள் அல்லது அவர்கள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள்.
தேரோட்டம் கனவில் வந்தால்
தேரோட்டம் கனவில் வந்தால் கனவு காண்பவரின் உறவினர்கள் யாராவது இறந்து விடுவார்கள்.அந்த செய்தி உங்களிடம் சொல்வார்கள் அல்லது நீங்கள் இறந்து விட்டார் என்று கேள்விப்படுவீர்கள்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
காளியம்மன் கனவில் வந்தால் என்ன பலன் |
கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன் |
அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் |
சிவன் கனவில் வந்தால் என்ன பலன் |