Thiripala Suranam Benefits in Tamil | திரிபலா சூரணம் பக்க விளைவுகள்
வணக்கம் நண்பர்களே.!! திரிபலா சூரணம் என்றால் என்ன அதில் உள்ள பயன்கள் மற்றும் மருத்துவ பயன்களை பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
திரிபலா சூரணம் பக்க விளைவுகள்
திரிபலா சூரணத்தில் பல நன்மைகள் இருந்தாலும் ஒரு சில தீமைகள் இருக்கத்தான் செய்கிறது. திரிபலா சூரணத்தை அனைவரும் பயன்படுத்தலாம். திரிபலா சூரணத்தை பயன்படுத்தி வயிற்றுப்போக்கு ஏதேனும் வந்தால் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
திரிபலா சூரணத்தை முதலில் பயன்படுத்தும் ஒரு சிலருக்கு வயிற்று எரிச்சல் வரலாம். உங்கள் அருகில் உள்ள சித்த வேதா மருத்துவரின் பரிந்துரைப்படி நீங்கள் மீண்டும் திரிபலா சூரணத்தை பயன்படுத்தலாம்.
திரிபலா சூரணம் யார் சாப்பிட கூடாது
திரிபலா சூரணம் மன அழுத்தம் இருந்து அதற்கு மருந்து ஏதேனும் சாப்பிட்டு வந்தால் திரிபலா சூரணம் சாப்பிடக்கூடாது மீறி சாப்பிட்டால் இன்னும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடும்.இதய நோயாளிகள் மற்றும் இதய நோய்க்கு மருந்துகளை எடுத்துக்கொண்டு இருப்பவர்களும் திரிபலா சூரணம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
கர்ப்பமாக இருக்கும் பெண்களும் திரிபலா சூரணம் சாப்பிடக்கூடாது. ஐந்து வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகளுக்கும் திரிபலா சூரணம் கொடுக்கக் கூடாது.தூக்கம் இல்லாமல் தவிக்கும் நபர்கள் இந்த திரிபலா சூரணத்தை எடுத்துக் கொள்ளவே கூடாது.
திரிபலா சூரணம் பயன்கள்
திரிபலா சூரணம் என்பது மூன்று முக்கியமான மூலிகைகளை சேர்த்து செய்யப்படும் மருந்தாகும்.கடுக்காய்,நெல்லிக்காய்,தான்றிக்காய் என்ற மூன்று மூலிகைகளை சேர்த்து செய்யப்படும் மருந்தாகும்.திரிபலா சூரணத்தில் பல மருத்துவ பயன்கள் உள்ளது.
ஐந்து வயதுக்கு மேல் இருக்கும் அனைவரும் சாப்பிடலாம் ஏற்கனவே மருந்துகள் ஏதேனும் நோய்களுக்கு சாப்பிட்டு வந்தால் அவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.திரிபலா சூரணத்தை முடி கொட்டுவதற்கும் முடியில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தாலும் அதற்கு பயன்படுத்தலாம்.
திரிபலா சூரணம் அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்தாக இருக்கிறது. திரிபலா சூரணத்தை பயன்படுத்தும் பொழுது சித்த வேதா மருத்துவர் அல்லது மருத்துவரை அணுகி ஆலோசனைக்குப் பிறகு பயன்படுத்த வேண்டும்.
வெறும் வயிற்றில் திரிபலா
திரிபலா சூரணத்தை வெறும் வயிற்றில் எப்படி சாப்பிடுவது என்பதை பற்றி பார்ப்போம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்பவர்கள். இரவு தூங்குவதற்கு முன்பாகதண்ணீரில் சிறிதளவு திரிபலா சூரணத்தை போட்டு ஊற வைத்து விட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
திரிபலா சூரணம் எப்படி சாப்பிடுவது
திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்தும் குடிக்கலாம். லவங்கப்பட்டை உடன் திரிபலா சூரணத்தின் பவுடரையும் சிறிதளவு சேர்த்தும் சாப்பிடலாம்.தண்ணீரில் கலந்து சாப்பிடும் பொழுது அதை இரவிலே தண்ணீரில் சிறிதளவு திரி பல சூரணம் பவுடரை போட்டு ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்லது .உடல் எடை குறைப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தவும்.
திரிபலா சூரணம் வயிற்றுப்புண்
திரிபலா சூரணம் சாப்பிடுவதன் மூலம் வாய்ப்புண் வயிற்று புண் சரியாகும். திரிபலா சூரணத்துடன் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயில் இருக்கும் புண்ணும் வயிற்றில் இருக்கும் புண்ணும் சரியாகிவிடும்.
திரிபலா சூரணம் நன்மைகள்
திரிபலா சூரணம் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது இது முக்கிய மூன்று மூலிகைப் பொருட்களில் செய்யப்படுவதால் இது பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. திரிபலா சூரணத்தை இரவில் தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் நமக்கு பல நன்மைகள் இருக்கிறது.
திரிபலா சூரணம் பவுடரை தினமும் சாப்பிட்டு வருபவர்களுக்கு முதுமை என்பது சீக்கிரமாக வராமல் இளமையாகவே இருப்பார்கள்.திரிபலா சூரணம் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இது மிகவும் உதவியாக இருக்கிறது.மலச்சிக்கல் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் திரிபலா சூரணம் பவுடரை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்ந்துவிடும்.
Read Also:
தேங்காய் பால் நன்மைகள் தீமைகள்