திருமண பொருத்தம் |Thirumana porutham
வணக்கம் நண்பர்களே..!ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் திருமணம் என்பது அவசியமான ஒன்றாகும். திருமணம் செய்ய முடிவு எடுத்து விட்டால் மட்டும் பத்தாது ஆண் பெண் இருவரின் ஜாதகங்களில் பொருத்தங்கள் ஒத்துப் போக வேண்டும். ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள மொத்தம் பத்து பொருத்தங்கள் இருக்கிறது அந்த பத்து பொருத்தங்களில் எந்தெந்த பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முழு விவரத்தை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
[codehap_MM]
10 திருமண பொருத்தம் தமிழில்
திருமணத்திற்கான பத்து பொருத்தங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- தினப்பொருத்தம்
- கணப்பொருத்தம்
- மகேந்திரப்பொருத்தம்
- ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
- யோனிப் பொருத்தம்
- ராசிப் பொருத்தம்
- ராசி அதிபதிப் பொருத்தம்
- வசியப் பொருத்தம்
- ரஜ்ஜூ பொருத்தம் (அல்லது) ரச்சுப் பொருத்தம்
- வேதைப் பொருத்தம்
திருமண பொருத்தம் விளக்கம்
தினப்பொருத்தம்
தினப் பொருத்தம் ஆண் பெண் இருவருக்கும் ஆயில் மற்றும் ஆரோக்கியத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக தினம் பொருத்தம் பார்க்கப்படுகிறது.
தினப் பொருத்தம் என்பது திருமணத்திற்கு ஒரு முக்கியமான பொருத்தமாகும். கணவன் சொல்லும் வார்த்தைகளால் மனைவி கஷ்டப்படுவதும் மனைவி சொல்லும் வார்த்தைகளால் கணவன் கஷ்டப்படுவதும் இருக்கக் கூடாது என்பதற்காக தினப்பொருத்தம் பார்க்கப்படும்.
கணப்பொருத்தம்
திருமணம் செய்து கொள்ளும் ஆண் பெண்ணின் குணத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.
மகேந்திரப்பொருத்தம்
திருமணம் செய்து கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் இந்த பொருத்தம் மிகவும் முக்கியமான பொருத்தம் ஆகும். இந்த மகேந்திர பொருத்தம் இருந்தால் மட்டுமே தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் என்பது திருமணம் செய்து கொண்ட பிறகு கணவன் மனைவி வாழ்வில் செல்வங்கள் எவ்வாறு இருப்பது என்று பார்க்கும் பொருத்தம் ஆகும்.அதனால் இந்த பொருத்தமும் திருமணத்திற்கு மிகவும் முக்கியமான பொருத்தமாகும்.
யோனிப் பொருத்தம்
யோனிப் பொருத்தம் என்பது கணவன் மனைவி திருமணத்திற்கு பிறகு தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதற்காக பார்க்கப்படும் பொருத்தமாகும்.
ராசிப் பொருத்தம்
ராசி பொருத்தம் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசி இருந்து நட்சத்திரம் மாறி இருக்க வேண்டும். ராசிப் பொருத்தம் இருந்தால் தான் திருமணத்திற்குப் பிறகு அவர்களின் வம்சம் விருத்தி அடையும்.
ராசி அதிபதிப் பொருத்தம்
ராசி அதிபதி பொருத்தம் திருமணத்திற்குப் பிறகு குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக பார்க்கப்படும் பொருத்தம் தான் ராசி அதிபதி பொருத்தம்.இந்தப் பொருத்தத்தில் ஆண் பெண் இருவருக்கும் பகைத்தவிர நட்பு சமம் ஆகிய இரவு பொருத்தங்கள் இருந்தால் நல்லது.
வசியப் பொருத்தம்
வசிய பொருத்தம் என்பது திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இருவருக்கும் அன்னோன்யம் இருக்குமா என்பதை பார்க்கும் பொருத்தம் ஆகும். இந்த பொருத்தம் கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள ஈர்ப்பை குறிக்கிறது.
ரஜ்ஜூ பொருத்தம் (அல்லது) ரச்சுப் பொருத்தம்
ரஜ்ஜூ பொருத்தம் (அல்லது) ரச்சுப் பொருத்தம் திருமணத்திற்குப் பிறகு கணவனின் ஆயுள் காலம் எவ்வளவு நாள் இருக்கும் என்பதை பார்க்கும் பொருத்தம் ஆகும். இந்த பொருத்தம் பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை குறிக்கிறது. திருமணம் செய்து கொள்வதற்கு இந்த பொருத்தம் மிகவும் அவசியமான பொருத்தமாகும்.
வேதைப் பொருத்தம்
வேதைப் பொருத்தம் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆண் பெண் இருவரும் திருமணத்திற்குப் பிறகு இன்பத் துன்பங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை பார்க்கப்படும் பொருத்தம்.
மிக முக்கிய திருமண பொருத்தம்
ஆண் பெண் திருமணம் செய்து கொள்வதற்கு மொத்தம் பத்து பொருத்தங்கள் இருக்கிறது.அந்த பத்து பொருத்தங்களில் இந்த ஐந்து பொருத்தங்கள் இருந்தால் போதும் திருமணம் செய்து கொள்ளலாம்.
- தினப்பொருத்தம்
- கணப்பொருத்தம்
- யோனிப் பொருத்தம்
- ராசிப் பொருத்தம்
- ரஜ்ஜூ பொருத்தம் (அல்லது) ரச்சுப் பொருத்தம்
திருமண பொருத்தம் எத்தனை இருக்க வேண்டும்
ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு மொத்தம் பத்து பொருத்தங்கள் இருக்கிறது அந்த பத்து பொருத்தங்களில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் ஆனால் பத்துக்கு 9,8 அல்லது 7 பொருத்தங்கள் இருந்தாலும் யோனிப் பொருத்தம்,ரஜ்ஜூ பொருத்தம் (அல்லது) ரச்சுப் பொருத்தம் இந்த இரண்டு பொருத்தங்கள் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.
யோனிப் பொருத்தம்,ரஜ்ஜூ பொருத்தம் (அல்லது) ரச்சுப் பொருத்தம் இந்த பொருத்தங்கள் திருமணத்திற்கு மிகவும் முக்கியமான பொருத்தங்கள் ஆகும். அதனால் யோனிப் பொருத்தம்,ரஜ்ஜூ பொருத்தம் (அல்லது) ரச்சுப் பொருத்தம் இந்த இரண்டு பொருத்தங்கள் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.
- யோனிப் பொருத்தம்
- ராசிப் பொருத்தம்
பிறந்த தேதியின்படி தமிழில் திருமண பொருத்தம்
திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஜாதகம் பார்ப்பது என்பது அவசியம் ஒன்றாகும் ஜாதகம் இல்லை என்றால் பெண்ணின் பிறந்த தேதியும் ஆணின் பிறந்த தேதியும் வைத்து பொருத்தம் பார்த்துக் கொள்ளலாம்.
ஒரு ஆண் ஒன்னாம் தேதி அதற்கு தொடர்புடைய 10,19,28 தேதிகளில் பிறந்தால் 7,9 என்ற எண்ணின் அதிகத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.
இரண்டாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் 2,4,6,9 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.
மூன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் 3,7,9 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.
நான்காம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் 2,4,7 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.
ஐந்தாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் 1,5,7,8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.
ஆறாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் 2,4,6,9 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.
ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் 1,3,7,8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.
எட்டாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் 3,5,7 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.
ஒன்பதாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் 9,3,6 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.
பிறந்த தேதியில் பொருத்தம் வரவில்லை என்றால் பிறந்த தேதி மாதம் வருடத்தை வைத்து பொருத்த பார்த்துக் கொள்ளலாம். பிறந்த மாதம் தெரியவில்லை என்றால் ஆண் மற்றும் பெண் இருவரின் பெயர் எண்னை வைத்து பொருத்தம் பார்த்துக் கொள்ளலாம்.
Marriage Porutham in Tamil
மேரேஜ் பொருத்தம் என்பது ஆங்கில வார்த்தையாகும் திருமணம் பொருத்தம் என்பது அதனுடைய தமிழ் அர்த்தம் ஆகும் கல்யாணம் பண்ணுவதற்கு முன்பு ஜாதகம் பார்ப்பார்கள் அதற்குப் பெயர் திருமண பொருத்தம் என்பார்கள் இந்த திருமண பொருத்தத்தை பார்ப்பதற்கு எங்கள் வலைதளத்தில் நீங்கள் இலவசமாக பார்த்துக் கொள்ள முடியும் இந்த மேரேஜ் பொருத்தம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமையும் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு என்று நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்