திருவள்ளுவர் பற்றிய முழு விவரம் | Thiruvalluvar History in Tamil
திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கியத்தில் ஒன்றான திருக்குறளை இயற்றிய தமிழ் புலவர்.இவர் கடைச்சங்க காலமான கிமு 400-100 இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மா மூலனார் மற்றும் மதுரையை ஆரிய படை நெடுஞ்செழியன் இன்னும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவாடியில் குறிப்பிட்டு இருக்கிறது.திருவள்ளுவர் திருக்குறளை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டு உள்ளதாகவும் முடிவில் அவ்வையாரின் துணையோடு மதுரையில் அரங்கேற்றதாகவும் தெரிய வருகின்றது.
இவர் சங்ககாலப் புலவரான ஔவையார் அதியமான் மற்றும் பரணர் மூவரும் சங்க காலத்தவராக இருந்தார்கள் என்ற கருத்து இருக்கிறது.இதன் மூலம் சங்ககாலப் புலவர் மாமூலனார் கிமு 4 நூற்றாண்டுகளில் செய்தியை கூறுவதினால் திருவள்ளுவர் கி மு 5 நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்கலாம்.ஆனாலும் மாமூலனார் பாடல் இடம் பெற்றுள்ள திருவள்ளுவமாலை தொகுக்கப்பட்ட காலம் மிகவும் பழையது என்பதனால் சங்ககால மாமூலனாரும் திருவள்ளுவமாலையில் இடம்பெறும் மாமூலனாரும் ஒருவர் இல்லை என்று கருத்து கூறுகிறது.திருவள்ளுவர் அனைத்து தமிழர்களும் அறிந்து போற்றப்படுவதாக தமிழர்களின் பண்பாட்டு செரிவின் அடையாளமாக திருவள்ளுவர் திகழ்ந்து வருகின்றார்.
திருவள்ளுவர் வரலாறு
இவர் கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் பிறந்ததாகக் கூறப்படுகிறது.ஆங்கில ஆண்டுடன் முப்பத்தொன்றைக் கூட்டினால் திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிடைக்கும்.காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது.
திருவள்ளுவர் பிறந்த வரலாற்றை கூறுவதற்கு ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.இவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக நம்புகின்றார்கள்.இவர் இயற்றி உள்ள திருக்குறளின் அடிப்படையில் இவர் தாயார் பெயர் ஆதி என்றும் தந்தை பெயர் பகவான் என்றும் பலர் கூறுகின்றார்கள்.இவர் வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகின்றது.இவர் உலக பொதுமறை என்று அனைவராலும் ஏற்கப்படும் விதத்தின் மூலம் குரல் வெண்பாக்களால் ஆன செயல்களை இயக்கி உள்ளார்.இதில் மொத்தம் ஆயிரத்து 330 குரல்கள் நூற்று நுப்பத்தி மூன்று அதிகாரங்களை கொண்டிருக்கிறது.இந்த நூல் திருக்குறள் என்று வழங்கப்படுகின்றது.இதில் உள்ள ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு தலைப்பில் அமைந்திருக்கிறது.இதில் ஒரு அதிகாரத்திற்கு 10 பாடல்கள் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இவருக்கு சென்னை மயிலாப்பூரில் வள்ளுவர் கோட்டம் என்ற பெயரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.இதனைப் போல் இந்தியாவின் தென்முனையான குமரி கடலில் 133 அடி உயரத்தில் கல்லில் செய்யப்பட்ட சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது.இவர் பிறந்த ஆண்டு 1921 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ் துறையினர் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்ததாக தெரிய வருகின்றது.இவர் திருக்குறளை தமிழில் எழுதவில்லை,திருவள்ளுவர் என்பவர் தனது வாழ்க்கையில் அனுபவித்த உணர்ந்து அவ்வப்போது ஓலைச்சுவாடிகளில் தயாரிப்பு குறிப்பிட்டு வைத்த சில பட்டறிவு அர்த்த நிகழ்வுகளை மணக்குடவர் என்பவர் தொகுத்து எழுதியிருக்கிறார்.
திருவள்ளுவர் பிறந்த மாவட்டம்
திருவள்ளுவர் பிறந்த இடம் குறித்து சர்ச்சைகள் இன்னும் முடிந்தபாடு இல்லை.ஆனால் அவர் கன்னியாகுமரியில் தான் பிறந்தார் என்று ஒரு பக்கம் இதனை வலுப்படுத்தும் வகையில் புதிய தகவல் ஒன்றை கன்னியாகுமரி மாவட்ட வரலாற்று மற்றும் தலை ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்து இருக்கின்றனர்.இவர் மயிலாப்பூரில் பிறந்தார் என்று ஒரு பக்கமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் பிறந்தார் என்று ஒரு பக்கமும் கருத்துக்கள் நிலவி வருகின்றன.இதன் தொடர்பான ஆய்வுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்த ஆய்வில் கன்னியாகுமரி மாவட்ட வரலாறு மற்றும் கலை ஆராய்ச்சி மையத்தை தொடர்ந்து வருகின்றார்கள்.இது சமீபத்தில் அவர்களுக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.இதனைக் கொண்டு திருவள்ளுவர் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் தான் என்று ஆய்வாளர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்கள் கனி என்ற சமூக மக்களின் தெய்வமாக திருவள்ளுவர் விளங்கி வருகின்றார்.இது கூவைக்காடு பகுதியில் உள்ள வள்ளுவன் கல்பொற்றை வள்ளுவத்தி கல்பொற்றை ஆகிய இரண்டு கொன்று பகுதிகளிலும் அதிக அளவில் கனி சமூக மக்கள் வாசித்து வருகின்றார்கள்.
டாக்டர் பத்மநாதன் தலைமையில் ஆய்வு நடத்திய போது இந்த இரண்டு பாறை பகுதிகளை சுற்றிலும் உள்ள கிராமங்களில் வசித்து வந்த கனி சமூக மக்களிடையே ஆய்வுகளை மேற்கொண்டனர்.இந்த கிராமங்களில் மொத்தம் 32 கணி சமூக குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள்.இவர்கள் வயதில் மூத்தவரான கலியின் கனி என்பவர் கூறிய போது திருவள்ளுவர் மன்னராக இருந்தார் இவர் வள்ளுவ நாடு முழுவதும் ஆண்டு வந்தார்.இந்த மலை குன்றுகளை சுற்றிய காட்டுப் பகுதிகளில் அவர் வேட்டையாட அவ்வப்போது வருவார்.பிறகு வேட்டையை எல்லாம் நிறுத்திவிட்டு தவ யோகியாக மாறிவிட்டார் என்று சமூகத்தில் வழி வழியாய் சொல்லப்பட்டு வந்தது.திருவள்ளுவர் வாழ்ந்த பகுதிகளையும் இரு மலை குன்றுகளையும் நாங்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றோம்.அங்கு பரம்பரையாக வழிபாடுகளும் நடத்தி வருகின்றார்கள்.திருவள்ளுவர் கொடித்தி என்ற பெயரில் நடக்கும் ஒரு சடங்கு நிகழ்ச்சியும் இந்த பகுதியில் புகழ்பெற்றது. திருவள்ளுவர் பாதம் என்ற இடத்தில் இந்த சடங்கு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சடங்கு செய்தால் நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கை இந்தக் கனி சமூக மக்களிடையே நிலவி வருகின்றது.இந்த வழிபாடுகளின் போது செண்டை மேளம் முழங்க திருவள்ளுவருக்கு தேனும் திணையும் படைக்கின்றார்கள்.இதில் கனி சமூகத்தினரின் பழக்க வழக்கங்கள் அவர்கள் சொல்லும் கதைகளை மட்டுமே வைத்து எப்படி திருவள்ளுவரின் பிறப்பிடத்தை நினைக்க முடியும் என்ற கேள்வி வந்தது.இந்த ஆய்வில் இவர்கள் தெரிவிக்கும் வகையில் திருவள்ளுவரின் சில குரல்களில் கனி சமூகத்தினர் குறித்து அவர் மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார்.274 வது திருக்குறள் இதற்கு ஒரு உதாரணமாக கருதப்படுகிறது.இந்தக் குரலில் பறவைகள் போல மாறு குரலில் குவி அவற்றை வரவழைத்து வேட்டையாடுவது குறித்து அந்த குரலில் வள்ளுவர் எளிமையாக குறிப்பிட்டு இருக்கிறார்.இது கனி சமூகத்தினரிடம் காணப்படும் ஒரு பழக்கமாகும்.இதனால் இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் பிறந்தார் என்று பலர் நம்பி வருகின்றார்கள்.
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு தமிழரின் ஆண்டுக்கணக்காக தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்காட்டி முறை ஆகும்.இதில் இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள க்ரிகோரியன் ஆண்டு முறையை ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ளுவர் 31 ஆண்டுகள் கூடியிருக்கலாம்.
திருவள்ளுவர் இயற்றிய நூல்கள்
திருவள்ளுவர் திருக்குறளை எழுதி உலக இலக்கிய அரங்கில் தமிழர்கள் பெருமிதம் அடையுமாறு செய்திருக்கிறார். தன்னுடைய அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள் உலகப் புகழ்பெற்ற இலக்கியமாக மாறி தமிழர்களுக்கு பெருமை தேடி தந்துள்ளது. இந்த நூல் சங்க இலக்கிய வகை பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் 18 நூல்களில் இருக்கிறது. மேலும் இதில் வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம் மொழி பாலினம் போன்ற காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறியுள்ளதால் திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக உலகப் பொதுமறை முப்பால் ஈரடி நூல் உத்தரவேதம் தெய்வ நூல் பொதுமறை பொய்யாமொழி வாயுறை வாழ்த்து தமிழ்மறை திருவள்ளுவம் போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது.
திருவள்ளுவர் வெறும் இரண்டு அடிகளில் உலக தத்துவங்களை சொன்னதனால் இது ஈரடி நூல் இன்று கூறப்படுகிறது இதில் அறம் பொருள் இன்பம் என்ற முப்பெரும் பிரிவுகளை கொண்டிருக்கிறது. முப்பால் என்று அழைக்கப்படும் இந்த நூல் மனிதர்கள் அகவ வாழ்வில் சுமூகமாக கூடி வாழவும் புற வாழ்வியலும் இன்பமுடனும் இசையுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படை பண்புகளை கொண்டிருக்கிறது.
இந்த நூலில் அறத்துப்பால் பொருட்பால் மற்றும் காமத்துப்பால் இன்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.
அறத்துப்பால்
அறத்துப்பாலில் மனசாட்சி மற்றும் மரியாதை நல்ல நிலத்தை போன்றவற்றை பாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள்.
பொருட்பால்
இதில் உலக விவாகரங்களை எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல் அமைச்சியல் அந்தவியல் ஒழிப்பியல் போன்ற பிரிவுகளில் விளங்கி இருக்கிறது.
காமத்துப்பால்
இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையான காதல் மட்டும் இன்பத்தை தெளிவாக கலவியல் கற்பியல் என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கின்றது.
இது மட்டும் இல்லாமல் திருவள்ளுவர் மருத்துவம் பற்றிய இரண்டு நூல்களான ஞானவெட்டியான் மற்றும் பஞ்சரத்தினம் ஆகிய நூல்களை ஏற்றி இருப்பதாக பலர் தெரிவித்து இருக்கின்றனர்.
திருவள்ளுவர் தாய்,தந்தை பெயர்
திருவள்ளுவர் குமரிக்கண்டத்தில் பிறந்தார்.மயிலாப்பூரில் வாழ்ந்தவர் என்ற தகவல்கள் நாம் அறிந்தவை.திருவள்ளுவரின் தந்தையின் பெயர் ‘பேராழி மாமுனிவன்’ என்கிறது 1874ல் யாழ்ப்பாணம் அச்சக தமிழ்மொழி அகராதி.
வள்ளுவர் சமணரே என்று தரவுகள் வைத்து பேசுவோர்க்கு இதோ உகந்த வகையிலிருக்கிறது அவரது தந்தையின் பெயர்.
திருவள்ளுவர் இயற்பெயர்
பொய்யாமொழிப்புலவர்,சென்னாப்போதார்,முதற்பாவலர் நான்முகனார்,மாதானுபங்கி,பெருநாவலர்,தேவர்,நாயனார் என்று பலவிதமான பெயர்களால் திருவள்ளுவர் அழைக்கப்படுகிறார்.
திருவள்ளுவர் புத்தகங்கள்
திருவள்ளுவர் மொத்தம் 11 நூல்கள் எழுதி இருக்கிறார்.அவர் எழுதிய நூல்கள் கீழே இருக்கின்றன.திருக்குறள் தான் இவர் எழுதிய முதல் நூல் அதன் பிறகு வரிசையாக ஞானவெட்டி-1500,நவரத்தின வைத்திய சிந்தாமணி-800,பஞ்சரத்தினம்-500,கற்பம்-300,சூத்திரம்-108,நாதாந்த திறவுகோல்-100,குரு நூல்-51,முப்பு சூத்திரம்-30,வாத சூத்திரம்-16,முப்பு குரு-11 போன்ற பத்து நூல்களையும் எழுதி இருக்கிறார்.
திருவள்ளுவர் பற்றிய கட்டுரை
- முன்னுரை
- திருவள்ளுவரின் வாழ்க்கைக்காலம்
- திருக்குறளின் சிறப்பு
- திருக்குறளின் உள்ளடக்கங்கள்
- திருக்குறள் கற்றுத்தரும் நற்குணங்கள்
- முடிவுரை
முன்னுரை
உலகத்திலேயே மிகவும் பழமையான மொழிகளிலே தமிழ் மொழி.இது மிகச் சிறந்த இலக்கிய செலிமமிக்க மொழியாகவும் காணப்படுகின்றன.இத்தகைய பெருமையை கொண்ட தமிழ் மொழியிலேயே பல்வேறுபட்ட காலகட்டங்களில் பல்லாயிரக்கணக்கான இலக்கியங்களும் நூல்களும் படைக்கப்பட்டிருக்கிறது.இதை தமிழர்களின் வாழ்வியல் அம்சங்களையும் மனிதன் வாழ்வாங்கு வாழ வழி காட்டுவதாக அமைந்திருக்கிறது.இதற்கு உதாரணமாக மகாபாரதம் திருக்குறள் சிலப்பதிகாரம் கம்பராமாயணம் மட்டும் ஆத்திச்சூடி போன்றவை ஆகும்.
திருவள்ளுவரின் வாழ்க்கைக் காலம்
தமிழில் படைக்கப்பட்ட மிகவும் சிறப்பு வாய்ந்த நூல்களாக கருதப்படுவது திருக்குறள் இதனை தமிழில் வரும் புலவராக கருதப்படும் திருவள்ளுவர் இயற்றியிருக்கிறாள்.இவரை பொய்யா மொழி புலவர் தெய்வப் புலவர் முதற் புலவர் என்று பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.இவரது வாழ்க்கை காலம் சரியாக வரவேற்கப்படாத போதும் இவர் சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்த புலவராக கருதப்படுகிறார்.இவருடைய தாய் தந்தையின் பெயர்கள் ஆழ்ந்த இடம் போன்ற அறியப்படாத போதும் இவருடைய மனைவி வாசுகி இவர் வாழ்ந்த வாழ்க்கை கணவன் மனைவிக்கு இடையிலான உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்காக உதாரணமாக கொள்ளப்படுகின்றது.
திருக்குறளின் சிறப்பு
தமிழ் மொழியில் இயற்றிய நூல்களிலே அதிகம் சிறப்பு வாய்ந்தது திருக்குறள்.இது உலகப் பொதுமறை தெய்வ நூல் உத்தரவேதம் மற்றும் வாயுறை வாழ்த்து இன்று பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.திருக்குறளானது தனிமனிதர்கள் எவ்வாறான ஒழுக்கங்களை சமூகத்தில் பேணி வாழ வேண்டும் என்பதனை,மனிதன் செய்யக் கூடிய அறங்கள் இயற்கையோடு இணைந்து அவன் வாழும் வாழ்க்கை என பலவகையான விடயங்களை எடுத்தியம்புகின்றது.இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட திருக்குறளானது,முதன் முதலில் 1812ம் ஆண்டு தமிழ் மொழியில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.தமிழ்மொழியைத் தவிர கிட்டத்தட்ட எண்பது வரையான ஏனைய பிறமொழிகளில் திருக்குறளானது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.உலகரீதியில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களில் திருக்குறளிற்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டு இருக்கிறது.
திருக்குறளின் உள்ளடக்கங்கள்
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என எழுத்துக்கள் எல்லாம் எவ்வாறு அகரத்தை கொண்டு ஆரம்பிக்கின்றனவோ அவ்வாறே இந்த உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டது என கடவுளை போற்றியபடி ஆரம்பிக்கும் திருக்குறளில் மொத்தமாக நூற்றுமுப்பத்துமூன்று அதிகாரங்கள் காணப்படுகின்றன.அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால் என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.ஒவ்வொரு குரலுக்கும் அனுபவ தன்மை வாய்ந்ததாகவும் ஓராயிரம் கருத்துகளை கூறுபவை ஆகவும் காணப்படுகின்றது.இதில் இல்லறவியல்,துறவியல்,அரசியல்,அமைச்சியல்,கலவியல் மற்றும் கற்பியல் என அதற்குள் பல உட்பிரிவுகள் இருக்கின்றது.
திருக்குறள் கற்றுத்தரும் நற்குணங்கள்
ஒருவன் அரசனாக இருந்தாலும் சரி,ஆண்டியாகவிருந்தாலும் சரி அவன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து அறப்பண்புகளையும் திருக்குறள் வலியுறுத்துகின்றது.ஒழுக்கமுடமை அதிகாரத்திலே “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்று ஒழுக்கம் உயிரை விட சிறந்ததாக ஒழுக்கத்தின் மேன்மை எடுத்தியம்பப்படுகின்றது. “இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” என ஒழுக்கம் இல்லையேல் பழிசொல் கேட்க நேரிடும் என்று குறிப்பிடப்படுகின்றது.இதனை “தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னை சுடும்” என்றும், “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” எனவும் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு மனித நற்பண்புகள் பல எடுத்தியம்பப்படுகின்றன.
முடிவுரை
உலகில் வாழ்ந்து மறைந்த அரும்பெரும் புலவராகிய திருவள்ளுவர் இன்றுவரை போற்றப்பட்டு வருகின்றார்.அவரெழுதிய திருக்குறள் இன்றுவரை ஆராய்ச்சி செய்துவரப்படும் ஒரு நூலாகவே காணப்படுகின்றது.இத்தகைய பெருமைவாய்ந்த திருக்குறளைப் பற்றியும் அதனை படைத்த திருவள்ளுவரைப் பற்றியும் அறிந்து அதனை இந்த உலகிற்கு தெரியப்படுத்தி எதிர்கால சந்ததியினரும் பயன்பெற வழிசெய்வேம்.