Homeதமிழ்நாடுதிருவிடைமருதூர் கோவில் வரலாறு | Thiruvidaimarudur Temple History In Tamil

திருவிடைமருதூர் கோவில் வரலாறு | Thiruvidaimarudur Temple History In Tamil

திருவிடைமருதூர் கோவில் வரலாறு Thiruvidaimarudur Temple History In Tamil

வணக்கம் நண்பர்களே சோழநாடு தென் காவேரி தளங்களில் காவேரி கரையில் அமைந்துள்ள 30 ஆவது சிவத்தலமாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.கருவூர் தேவர்,மாணிக்கவாசகர் ,பட்டினத்தார் ஆகியோரும் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளனர். திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

- Advertisement -

திருவிடைமருதூர் கோவில்

தஞ்சை மாவட்ட திருவிடைமருதூரில் மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.சம்பந்தர், அப்பர், சுந்தரர் தேவாரப் பாடல் பெற்ற சோழநாடு காவிரி கரையில் அமைந்துள்ள 30ஆவது சிவதாலமாகும்.திருவிடைமருதூர் கோயில் கிழக்கு வாயிலாக உள்ளே சென்று மேற்கு வாயிலாக வெளியே வந்தால் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

திருவிடைமருதூர் கோவில் நேரம்

திருவிடைமருதூர் கோவில் நடை திறப்பு

திறக்கப்படும் நேரம் மூடப்படும் நேரம்
காலை 5.30 மணி நண்பகல் 12.30 மணி
மாலை 4.30 மணி இரவு 09.00 மணி

திருவிடை மருதூர் கோவில் செல்லும் வழி

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் கும்பகோணத்திலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

Read Also

- Advertisement -
சங்கரன்கோவில் வரலாறு

திருவிடைமருதூர் கோவில் சிறப்பு

மருத மரத்தை தல மரமாக கொண்டு சிறப்பு விளங்குகின்ற சிவன் கோயில்களில் இந்தியாவிலேயே மூன்றாவது கோயிலாக உள்ளது.தளம் வருகுன பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட கோயிலாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

வருகுன பாண்டியன் அருகில் உள்ள காட்டிற்கு ஒருமுறை வேட்டைக்குச் சென்றான் மீண்டும் திரும்புவதற்கு இரவு ஆகிவிட்டதால் அரசன் தனது குதிரை மீது ஏறி திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது வழியில் அந்தணன் உறங்கிக் கொண்டிருந்தபோது குதிரையின் காலில் மிதிபட்டு இறந்து விட்டான்.

- Advertisement -

தன்னை அறியாமல் தான் இந்த சம்பவம் நடந்தது இருந்தாலும் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது அந்தணனின் ஆவியும் அரசனை பற்றி கொண்டது. இதிலிருந்து வெளி வருவதற்காக அரசன் மதுரை சோமசுந்தரசாமியை வணங்கி வந்தார் அப்பொழுது அரசனின் கனவில் சோமசுந்தர கடவுள் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்பாடி கூறினார்.

திருவிடைமருதூர் கோவில் வரலாறு|Thiruvidaimarudur Temple History In Tamil
திருவிடைமருதூர் கோவில் வரலாறு|

பாண்டிய மன்னனின் எதிரி நாடான சோழ நாட்டு திருவிடைமருதூருக்கு எப்படி செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. பாண்டிய மன்னன் சோழ மன்னனை தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான் அப்பொழுது திருவிடைமருதூர் சென்று அங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்திற்குள் கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான்.

அப்பொழுது பாண்டிய மன்னனின் பட்டியிருந்த பிரம்மஹத்தி தோஷம்  அந்தணனின் ஆவியும் அரசனை தொடர்ந்து கோயிலுக்குள் செல்ல தைரியமின்றி வெளியே தங்கிவிட்டன. அரசன் வெளியே வரும்பொழுது திரும்பும் பிடித்துக் கொள்ளலாம் என்று காத்துக் கொண்டிருந்த பொழுது திருவிடைமருதூர் இறைவனோ பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறி செல்லும்படி ஆணையிட்டு மன்னனுக்கு அருள் புரிந்தார்.

அரசனும் பிரம்மஹத்தி தோஷம்  மற்றும் அந்தணன் ஆவியிடம் இருந்து விடுபட்டு பாண்டியநாடு திரும்பினான். இதை நினைவு கூறும் வகையில் இன்றளவும் பக்தர்கள் கிழக்கு வாயிலாக உள் சென்று மேற்கில் உள்ள அம்மன் சன்னதி கோபுர வாயில் வழியாக வெளியே செல்லும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

திருவிடைமருதூர் கோவில் வரலாறு

காசிக்கு சமமான கருதப்படும் தளங்களில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். திருவிடைமருதூரில் உள்ள சிவலயம் சுமார் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயமாகும். மருத மரத்தை தல விருட்சமாக கொண்ட மூன்று கோவில்களில் திருவிடைமருதூர் சிவாலயமும் ஒன்றாகும்.

இந்த கோவில்களை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் வரலாறு
திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றிய முழு தகவல்
தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு
சேலம் முருகன் கோவில்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR