தமிழ் சினிமாவின் நடிகரும் மற்றும் தமிழகத்தின் எம்எல்ஏவும் ஆன உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது நடித்திருக்கும் திரைப்படம் மாமன்னன்.இவருடைய சினிமா வாழ்க்கையில் கடைசி படமாக இதுவாக தான் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக வடிவேலு நடித்திருக்கின்றார். உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வில்லனாக பகத் பாஸில் நடித்திருக்கின்றனர்.மாமன்னன் திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
இந்த திரைப்படமானது திரையரங்கில் வெளியிடுவதற்கு முன் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது.ஆனால் தற்போது இந்த திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது.மேலும் இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் பதிவிட்டு வருகின்றார்கள்.குறிப்பாக அதிமுக ஆட்சி காலத்தில் சபாநாயகர் ஆக இருந்த தனபாலின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை பற்றி இந்த படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
ஆனால் இதையெல்லாம் கடந்து மாரி செல்வராஜ் போன்ற சமூக பொறுப்பு மிக்க இயக்குனர்கள் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் தமிழ்நாட்டின் மேற்கு மண்டல கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களை பற்றி படமாக்கி இருப்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது.இது தன்னுடைய முதல் இரண்டு திரைப்படங்களில் பிறந்து வளர்ந்த தென் தமிழ்நாட்டின் சிறிய அசைவையும் அழகாக படமாக்கி உள்ளார் மாரி செல்வராஜ்.கொங்கு மண்டலம் குறித்து கதையில் கொஞ்சம் கோட்டை விட்டு விட்டார் என்பதை ஒப்புக்கொள்கின்றன.தென் தமிழகத்தில் சாதியை ஆதிகத்தில் பாதிக்கப்பட்ட மாரி செல்வராஜ் தனக்கென்று சவாலான கொங்கு மண்டலம் குறித்து இந்த படம் எடுத்திருப்பது பாராட்டுக்குரியதாக இருக்கிறது.
சமூகத்தில் சாதி இரண்டு வரிசையில் செயல்படும் என்பதை இந்த திரைப்படம் சுட்டி காட்டுகிறது.ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு ஓட்டும் அவர்களுக்கு தனித்தொகுதியும் இருப்பதால் ஆதிக்க சாதி மனநிலையில் இருக்கும் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறவு பேணுகின்றார்கள் என்பதனை தவிர அனைவரும் சமம் என்னும் தத்துவ அடிப்படையில் ஒரு நாளும் அந்த மக்களை பார்ப்பதில்லை.இதனை மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்ட பிறகு நியாயத்திற்கு ஆதிக்கம் சாதி மனநிலையில் இருக்கும் கட்சிக்காரர்கள் முறையிடும் வடிவேலு காட்சி தொடங்கி படத்தின் இறுதி காட்சி வரை தெளிவாக விளக்கியுள்ளார் மாரி செல்வராஜ்.
அரசியல் கட்சியில் மாவட்ட அளவில் பணம் வாய்ந்த பொறுப்பு என்றால் அது மாவட்ட செயலாளர்தான் மாவட்ட செயலாளர் ரத்தினவேலு வேறு கட்சிக்கு மாறும்பொழுது சேலம் மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக மாமன்னன் நியமிக்கப்படுகிறார் படத்தின் கதையை சுவாரஸ் படுத்துவதற்கு கூட அப்படியான ஒரு காட்சியை கூட வைக்கப்படவில்லை.ஏற்கனவே இந்த திரைப்படம் கொஞ்சம் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்று இயக்குனர் கூறியுள்ளார்.மேலும் கட்சிக்கும் கட்சியின் கொள்கைக்கும் மிகவும் நேர்மையாக இருப்பவரை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்கு தனித்தொகுதியில் மட்டும் போட்டியிட வைக்கும் திராவிட கட்சிகளின் அரசியலில் மிக நேர்த்தியாக விலகி இருக்கின்றார் மாரி செல்வராஜ்.தனித்தொகுதி தலித்துக்களுக்கானது என்றாலும் பொது தொகுதி அனைவருக்கும் பொது இல்லை என்று தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் அமைந்து இருக்கிறது.
மாமன்னன் குடும்பத்தை சேர்ந்தவர்களை கொலை செய்து வரும் ஆதிக்க சாதி கும்பல் தடுக்கப்படுவது போல் தன்னுடைய வன்மத்தை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அதிவீரன் வளர்க்கும் பன்றிகளை நாய்களை விட்டு கொலை செய்வதும் தர்மபுரி இளவரசன் திவ்யா சம்பவம் போல் சாதியத்தின் பல நிகழ்வுகளை நியாயப்படுத்தி வருகின்றது இந்த திரைப்படம்.இதனைப் போல் கல் வீசியை கிணற்று நீரில் மூழ்கடித்து சிறுவர்களை கொல்லப்படும் காட்சி ஆதிக்க சாதி சிந்தனையில் அரியலூர் மாவட்டத்தில் மின்சாரத்தை கிணற்றில் பயிற்சி சிறுவர்கள் கொல்லப்பட்டதையும் தாமிரபரணி ஆற்று நீரில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை காவல்துறை கல்வி செய்யும் லத்தியால் அடித்து கொலை செய்த நிகழ்வுகளையும் நெஞ்சில் நிறுத்தி உள்ளது மாமன்னன் திரைப்படம்.