தொல்காப்பியம் | Tholkappiyam Varalaru
Tolkappiyam:தொல்காப்பியம் என்பது இன்றும் அதிகம் படிக்க கிடைக்கும் மிக மூத்த தமிழ் இலக்கண நூல் ஆகும்.இது இலக்கிய வடிவில் இருக்கும் ஓர் இலக்கண நூல்.இந்த நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.தொல்காப்பியத்தில் இடைச்செருகல் கள் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றார்கள்.
இது பழங்காலத்து நூலாக இருப்பினும் இன்றுவரை தமிழ் இலக்கணம் விதிகளுக்கு அடிப்படையான நூலாக இருக்கிறது.தொல்காப்பியத்தை முதல் நாளாக கொண்டு காலந்தோறும் பல வழி நூல்கள் தோன்றி வருகின்றன.
குட்டி தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல்
வைத்தியநாத தேசிகர் என்பவர் தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் என்ற தமிழின் மிகத் தொன்மையான இலக்கண நூலினை தழுவி இலக்கண விளக்கம் என்ற இலக்கண நூலினை எழுதி இருக்கின்றார்.இதன் காரணமாக இலக்கண விளக்கம் என்ற நூல் ஆனது குட்டி தொல்காப்பியம் என்று அழைக்கப்படுகின்றது.
தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம்
சங்ககாலப் புலவர் மாமூலாரின் காலம் பற்றி தவறான கணிப்பு கடை சங்க காலம் குறைவாக மதிப்பிட்டு இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.மாமூலனார் பொ.ஊ.மு. நாலாம் நூற்றாண்டில் ஆண்ட நந்தர்கள் பற்றி ஆண்டாள் மௌரியர்களின் தமிழக படையெடுப்பு பற்றி கூறியிருக்கின்றார்.கல்லில் ஆதிரையனார் ஊன்பொதி பசுங்குடையார் மேலும் மூன்று புலவர்கள் இந்த போரினை தன் இலக்கியத்தில் பதிவு செய்திருக்கின்றனர்.
இதன் பிறகு திருவள்ளுவர் போன்றோரின் காலம் பொ.ஊ.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று தெரிகின்றது.இதனால் தொல்காப்பியரின் காலம் பொ.ஊ.மு. பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று தெளிவாகத் தெரிகின்றது.இதன் மூலம் கபிலரின் காலம் பொ.ஊ.மு.3-ஆம் நூற்றாண்டில் நக்கீரர் என்பவர் மூலம் தொல்காப்பியர் இடைச்சங்கத்தில் பிறந்திருக்கிறார்.கபிலர் பாடல் மூலம் தொல்காப்பியர் காலம் பொ.ஊ.மு.21-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று தெரிகிறது.இவர் இடைச்சங்கத்தில் பிறந்தவர் என்று தெளிவாக தெரிகின்றது.
தொல்காப்பியம் வரலாறு
என்ப,என்மனார் புலவர்,யாப்பரிப்புலவர்,தென்மொழிப் புலவர்,குரியறிந்தோர் போன்ற பல ஆசிரியர்கள் தொல்காப்பியரின் காலத்தில் அவர் முந்தைய காலத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்று இந்த நூலை வைத்து கூறப்படுகின்றார்கள்.ஆனால் அவர்களின் நூல்கள் அழிந்துவிட்டது.இது இடைச்சங்கம் மற்றும் தடைச் சங்கத்தில் வாழ்ந்தவர்கள் தொல்காப்பியம் இலக்கணமாக இருந்தது என்று இறையனார் களவியல் ஆசிரியர் அவர்கள் கூறியிருக்கின்றார்.
தொல்காப்பியம் பாடல்கள்
“பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்
பாட்டின் இயல பண்ணத் திய்யே”
“அதுவே தானும் பிசியொடு மானும்.”
“அடிநிமிர் கிளவி யீரா றாகும்.
அடியிகந்து வரினும் கடிவரை யின்றே”
“அவைதாம்
நூலி னான, உரையி னான,
நொடியொடு புணர்ந்த பிசியி னான,
ஏது நுதலிய முதுமொழி யான,
மறைமொழி கிளந்த மந்திரத் தான,
கூற்றிடை வைத்த குறிப்பி னான”
‘அடிநிமிர் கிளவி ஈரா றாகும்
அடியிகந்து வரினுங் கடிவரை யின்றே.’
ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்
தோன்றுவ கிளர்ந்த துணிவினானும்
என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே
நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்
மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்தப் பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏதுநுதலிய முதுமொழி.
தொல்காப்பியம் விளக்க உரை
தொல்காப்பியம் 1610 நூற்பாக்களால் ஆனது.இதில் இருக்கும் உள்ளடக்கம் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருள் அதிகாரம் என்று மூன்று அதிகாரங்களை கொண்டிருக்கிறது.முதலாவதாக இருக்கும் எழுத்ததிகாரம் தனிமொழியிலும் புணர் மொழியிலும் இருக்கும் எழுத்துக்களை பற்றி கூறுகின்றது.இரண்டாவதாக இருக்கும் சொல்லதிகாரம் மொழி தொடர் அமைந்திருக்கும் இடத்தை கூறுகின்றது.மூன்றாவதாக இருக்கும் பொருள் அதிகாரம் எழுதப்படும் நூலில் உள்ள வாழ்க்கை,பொருள் அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு,அணி முதலான பங்குகளை தமிழ் மரபையும் விளக்குகின்றது.
எழுத்ததிகாரம்
- நூல் மரபு
- மொழி மரபு
- பிறப்பியல்
- புணரியல்
- தொகை மரபு
- உருபியல்
- உயிர் மயங்கியல்
- புள்ளி மயங்கியல்
- குற்றியலுகர புணரியல்
எழுத்ததிகாரம் 9 இயல்களை கொண்டிருக்கிறது.
தமிழில் 30 உயிர் மெய் எழுத்துக்களும் குறில் நெடில் வல்லினம் மெல்லினம் இடையினம் போன்ற இலக்கணங்கள் இடம் பெற்று இருக்கிறது.இதில் சொல்லின் முதலும் முடிவும் என்ன என்பது பற்றி விளக்கப்பட்டு இருக்கிறது.தமிழின் ஒளி வடிவத்தையும் வரிவடிவத்தையும் இந்த நூலில் எடுத்துரை இருக்கின்றார்.குற்றியலுகரம் ஒகரம் எகரம் போன்றவை புள்ளி பெரும் என்கின்றார்கள்.சொல்லின் நிலை மொழி வரும் மொழியில் வரும் புணர்ச்சிகளை எடுத்துரைத்திருக்கின்றார்.இதில் உள்ள வேற்றுமைப் புணர்ச்சி,வேற்றுமை அல்லாத புணர்ச்சி,இயல்பு புணர்ச்சி,விகாரப் புணர்ச்சி என்று வகைப்படுத்தி இருக்கின்றார்.எழுத்ததிகாரத்தில் தொல்காப்பியர் பண்டைய தமிழகத்தில் இருந்த இசை இலக்கணத்தை பற்றி கூறியிருக்கின்றார்.அதற்கு நரம்பின் மறை என்று பெயர் இருக்கின்றது.மேலும் இதில் தமிழ் மாதங்களின் பெயர்கள் இகர ஈற்றில் மற்றும் ஐகார ஈற்றிலும் எழுதப்பட்டிருக்கிறது.
சொல்லதிகாரம்
- கிளவியாக்கம்
- வேற்றுமையியல்
- வேற்றுமை மயங்கியல்
- விளி மரபு
- பெயரியல்
- வினையியல்
- இடையியல்
- உரியியல்
- எச்சவியல்
சொல்லதிகாரதில் உள்ள பெயர்கள் உயர்திணை,அஃறிணை அடிப்படையில் உருவாக்கி இரு திணைக்கும் உள்ள ஐந்து பால் மற்றும் பெயர்களை இருக்கின்றன.
இந்த சொல்லதிகாரத்தில்
- சொல் இலக்கணம்
- வேற்றுமை உறுப்புகள்
- வேற்றுமை மயக்கம்
- விழியேற்கும் மரபு
- விழியை ஏற்காத பெயர்கள் போன்றவற்றையும் தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- வினைமுற்று
- வினையெச்சம்
- தெரிவுநிலை
- வினைமுற்று
- குறிப்பு வினைமுற்று
- பெயரெச்சம்
- வியங்கோள்
- எதிர்மறை முற்று போன்ற முற்றுககளும்
- வேற்றுமை தொகை
- உவமைத்தொகை
- வினைத்தொகை போன்ற தொகைகளும்
- இயற்சொல்
- திரிசொல்
- திசை சொல்
- வடசொல் போன்ற சொற்களும்
இதில் இடம்பெற்று இருக்கின்றன.வடசொல் கிழவி வடவெழுத்து ஒர் எழுத்தோடு புணர்ந்த சொல்.நம் மொழியின் ஒலிக்காக பிற மொழிகளிடமிருந்து ஒளியை கடன் பெறக்கூடிய அவ்வாறு கடன் வாங்கிய திராவிட மொழிகள் தமிழ் மொழியில் இருந்து வேறுபட்டு விட்டது என்று கூறுகின்றனர்.
பொருளதிகாரம்
- அகத்திணையியல்
- புறத்திணையியல்
- களவியல்
- கற்பியல்
- பொருளியல்
- மெய்ப்பாட்டியல்
- உவமையியல்
- செய்யுளியல்
- மரபியல்
பொருள் அதிகாரத்தில் ஒரு இலக்கியத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை பற்றி கூறியிருக்கின்றனர்.அகம் புறம் என்ற இருக் கூட்டுகள் இருக்கிறது.இது தமிழின் கவிதை நடையாகும் அரிஸ்டாட்டிலின் கவிதையோடு இதனை ஒப்பிட்டுக் கொள்ள முடியும்.அகத்திணையியல்,புறத்திணையியல் போன்றவை அகத்திணைகளின் ஏழையையும் புறத்திணைகளின் ஏழையையும் விரிவாக விளக்குகிறது.களவியலும்,கற்பியலும் அகத்திணையின் உட்பகுப்பில் இருக்கும் விளக்கங்களை விளக்குகிறது.பொருளியல் இருக்கும் அகபாடல்களுக்கு பொருள் காணும் முறையை விளக்குகின்றது.மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும் புறவொழுக்கத்திலும் புலப்படும் மெய்பாடுகளை விளக்குகின்றன.உவமயியல் உள்ள வாய்மொழியில் பொருளை வெளிப்படுத்தும் முறையை விளக்குகின்றது.செய்யுளியல் என்பது அக செய்திகளையும் ஒரு செய்திகளையும் பண்டைய பாடல்களும் நூல்களும் எவ்வாறு புலப்படுத்தினார் என்பதை விரிவாக விளங்குகின்றது.மரபியலில் உள்ள உயிரினங்களின் பாகுபாடுகள் அவற்றின் இளமை ஆண் பெண் பாகுபாடு வழக்குப் பெயர்களும் விரிவாக விளங்குகின்றது.வெண்பா,அகவல்,வஞ்சி,கலி என்று நான்கு வகையான யாப்பு மற்றும் 26 அகஉறுப்பு,அம்மை,அழகு,தொன்மை,தொல் முதலான எட்டு வகையான புறவொறுப்புகளையும் இருக்கின்றது.சொல்லிற்கு செய்ய இயல் மற்றும் மரபியல் போன்றவைகளை கூறி தமிழர்களின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.ஆறடி வரையிலான பிசி,அங்கதம்,மந்திரம்,முதுமொழி,வாயுறை வாழ்த்து,செவியறிவு போன்ற செய்யுள் வகை வளர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகின்றது.மரம்,புல்,மனிதன்,விலங்கு அனைத்தும் வேறுபடுத்தி மற்றும் அதன் மரபுகளையும் கூறி ஒரு இலக்கியத்தை உருவாக்குவதற்கு தேவையான 32 உத்திகளையும் பயன்படுத்திருக்கின்றார்கள்.ஒரே நூலில் அனைத்து வகையான பேரிலக்கணத்தை எடுத்துக் கூறி தமிழ் மொழி உயர்தனி செம்மொழி என்று பெருமைக்கு விதி வகுத்து இருக்கிறார்.
தொல்காப்பியம் புத்தகம் pdf
மேலும் தொல்காப்பியத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள உங்களுக்கு இலவசமான புத்தகத்தை வழங்கி இருக்கிறோம்.இதனை நீங்கள் இலவசமாக உங்க மொபைலில் டவுன்லோட் செய்து படித்துக் கொள்ள முடியும்.