Thondai Vali in Tamil | எச்சில் விழுங்கும் போது தொண்டை வலி
வணக்கம் நண்பர்களே.!!எச்சில் விழுங்கும்போது தொண்டை வலி ஏற்படும். தொண்டை வலியை இயற்கையான முறையில் மற்றும் தொண்டை வலியை சரி செய்வது பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
எச்சில் விழுங்கும் போது தொண்டை வலி
தொண்டை வலி ஏற்படும் சளி வரும்பொழுது நம் காரி துப்பும் பொழுது தொண்டையில் புண் ஏற்பட்டு தொண்டை வலி ஏற்படுகிறது.எச்சில் விழுங்கும்பொழுது தொண்டை வலி வந்தால் தொண்டையில் புண் இருக்கிறது என்று அர்த்தம் அதனால் குளிர்ச்சியான பொருட்கள் எதையும் அதிக அளவு சேர்த்துக் கொள்ளக் கூடாது.
எச்சில் துப்பும்போது தொண்டை வலி வந்தால் அது வைரஸ் தொற்று அல்லது பாக்டீரியாவை கூட இருக்கலாம் அதனால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் அவர்களின் அறிவுரைப்படி நடந்து கொள்ள வேண்டும்.
தொண்டை வலி நீங்க பாட்டி வைத்தியம்
தொண்டையில் ஏற்படும் புண் மற்றும் தொண்டை வலி சரியாக மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே எளிய முறையில் சரி செய்து கொள்ளலாம். குங்குமப்பூவை வெற்றிலையில் மடித்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் தொண்டை புண் சரியாகிவிடும் இது குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
ஒரு சின்ன வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதனுடன் கற்பூரவள்ளி(ஓமம்) இலையை சேர்த்து நன்றாக அரைத்து வருகின்ற சாரை குடித்தால் தொண்டை வலி நீங்கிவிடும்.
தொண்டை வலி எதனால் வருகிறது
பொதுவாக நமக்கு சளி பிடித்திருந்தால் தொண்டை வலி வருவது வழக்கமான ஒன்றாகும் அதாவது நம் சளி பிடித்திருக்கும்போது காரி துப்புவோம் அப்பொழுது தொண்டையில் புண் ஏற்பட்டு தொண்டை வலி ஏற்படும் ஒரு சில நேரங்களில் நம் எச்சில் முழுங்கும் பொழுதே தொண்டையில் வலி ஏற்படும் அதற்கு காரணம் வைரஸ் அல்லது பாக்டீரியா கூட இருக்கலாம் இதுபோன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடி மருத்துவர்களை அணுக வேண்டும்.
தொண்டை வலி மருந்து
தொண்டை வலி வந்தால் நம் வீட்டிலே சரி செய்து கொள்ளலாம். தொண்டை வலி வந்தால் துளசி, கற்பூரவள்ளி இலை (ஓமம்) தினந்தோறும் இதன் சாறுகளை குடித்து வந்தால் தொண்டை வலி சரியாகும் இது மட்டுமல்லாமல் தூதுவளை ரசம் வைத்துக் சாப்பிட்டாலும் தொண்டை வலி சரியாகிவிடும்.
Read Also:
மயோசைட்டிஸ் | Myositis In Tamil