தொண்டையில் உள்ள சளி வெளியேற | thondaiyil sali veliera
வணக்கம் நண்பர்களே.!! சளி பிடித்தாலே நெஞ்சு சளி,இருமல் தொண்டை எரிச்சல்,தொண்டை சளி இது போன்ற அனைத்தும் வரும் இந்த சளி பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது. சளி,இருமல் நோய் வந்தால் என்னென்ன செய்வது என்பதைப் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
தொண்டையில் உள்ள சளி வெளியேற
தொண்டை சளி வெளியேற என்ன பண்ணுவது என்று பார்ப்போம். பொதுவாக தொண்டையில் சளி இருப்பது இல்லை நீங்கள் சளி வரும் போது காரி துப்பும் பொழுது வெளிவரும் பொழுது தொண்டையில் காயம் ஏற்பட்டு விடுகிறது அது அப்படியே தொண்டையில் தங்கி விடுகிறதால் நீங்கள் மீண்டும் மீண்டும் காரி
துப்பும் போது அது புண்ணாகி விடுகிறது அதனால் அந்த புண்ணு சரி ஆகும் வரை உங்களுக்கு தொண்டையில் சளி இருப்பது போல் தெரியும் அதுவே தொண்டை சளி என நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இருந்தாலும் அதை இயற்கையாக சரி செய்ய வேண்டும் என்றால் கச்சாயம் காச்சி குடித்தல், பசு மாட்டு பாலில் மிளகு, சுக்கு இஞ்சி போன்றவற்றைகளை சேர்த்து காட்சி குடித்தால் சரியாகிவிடும்.தொண்டை சளி வெளியேற மாத்திரை மருந்துகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம் முடிந்த அளவுக்கு இயற்கையாகவே வெளியேற்ற வேண்டும். நம் வீட்டில் இருக்கக்கூடிய சின்ன வெங்காயம் தேன் இஞ்சி ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும்.
சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம்
சளி இருமல் வந்தால் மருத்துவமனைக்கு அதிகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் சளி இருமல் என்பது அனைவருக்கும் வருவது வழக்கமான ஒன்று அதனால் நம் வீட்டில் இருந்தபடியே அதை எப்படி போக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
சளி போக வேண்டும் என்றால் வீட்டில் கசாயம் வைத்து குடிக்க வேண்டும் கசாயம் வைப்பதற்கு முதலில் கற்பூரவள்ளி இலை அல்லது துளசி தூதுவளை இது மூன்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட போதும் அதன் பிறகு வெற்றிலை கிள்ளி போட்டுக்கொள்ள வேண்டும் எந்த ஒரு கசாயமாக இருந்தாலும் அது என்னுடன் சீரகம் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் அதன் பிறகு சிறிதளவு மிளகு சேர்த்து அனைத்தையும் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
கொதித்த பின் கசாயம் தயாராகிவிடும் அதை வடிகட்டி பயன்படுத்தினால் சளி இருமல் நோய் வீட்டிலே சரியாகிவிடும்.
சளியினால் காது வலி நீங்க
பொதுவாக மழை காலம் என்றாலே சளி பிடித்து விடும் சளி பிடித்தால் இருமல் நெஞ்செரிச்சல் காது வலி இது போன்ற பல பிரச்சனைகள் நம் உடலுக்கு வந்துவிடும் சளியினால் ஏற்படும் காது வலியை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்.
சளியினால் காது வலி ஏற்பட்டால் சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்து நல்லா சூடு படுத்தி அதில் இரண்டு பல் பூண்டை நசுக்கி போட்டு நன்றாக என்னை சூடேற்ற வேண்டும் பிறகு சிறிது நேரம் கழித்து எடுத்து சூடு தீர்ந்த பிறகு வலிக்கும் காதில் இரண்டு அல்லது மூன்று சொட்டு அந்த எண்ணெய் விட்டால் போதும் உடனடியாக காது வலி சரியாகிவிடும்.
நெஞ்சு சளி கரைய என்ன செய்ய வேண்டும்
பொதுவாக சளி வந்தாலே நெஞ்சு சளி வந்துவிடும். நாம் மருத்துவமனைக்கு செல்வதன் அங்கு பல மாத்திரைகள் மருந்துகள் தருவார்கள் அதை சாப்பிடுவதன் மூலம் நமக்கு சளி தீர்ந்துவிடும் ஆனால் நெஞ்சு சளி அப்படியே தான் இருக்கும். நம் வீட்டில் கசாயம் செய்து குடிக்க வேண்டும் அது மட்டுமில்லாமல் நம் வீட்டின் அருகில் துளசி இருந்தால் அதை சாப்பிட்டு வந்தாலும் சரி ஆகிவிடும்.
தூதுவளை ரசம் வைத்து குடிக்க வேண்டும். இஞ்சி மிளகு சுக்கு இது போன்ற பொருட்களை பாலில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால் நெஞ்சு சளி மட்டுமில்லாமல் நமக்கு சளி பிடித்து இருந்தாலும் அது சரியாகிவிடும்.
சளி நீங்க சூப்
சளி பிடித்திருந்தால் பெரியோர்கள் சூப் குடித்தால் சரியாகிவிடும் என்று சொல்வார்கள் சூப்பில் பல வகைகள் இருக்கிறது பொதுவாக சளி பிடித்திருந்தால் நண்டு சூப் குடித்தால் சரியாகிவிடும் என்று சொல்வார்கள் ஒரு சிலர் நண்டு சூப் குடிக்க மாட்டார்கள் அதனால் பூண்டு மிளகு இதனை சேர்த்து சூப் வைத்து குடித்தால் சளி சரியாகிவிடும்.அல்லது கச்சாயம் குடித்தாலும் சரி ஆகிவிடும்.
நுரையீரல் சளி வெளியேற
நுரையீரலில் சளி இருந்தால் சில உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியாக இருக்கும் உணவுகளை சாப்பிடவே கூடாது. அதாவது ஐஸ் கிரீம், ஜூஸ்,பால்,தயிர் போன்ற உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது.
சுக்கு,மிளகு,திப்பிலி இது மூன்றையும் சேர்த்து காப்பி போட்டு குடித்தால் நுரையீரல் இருக்கும் சளி படிப்படியாக சரியாகிவிடும். துளசி கிடைத்தால் அது தினமும் தின்பது நுரையீரலுக்கு சளிக்கு மட்டும் இல்லாமல் இருமல்,சளி சரி ஆகிவிடும்.
சளி தொண்டை வலி குணமாக
சளி பிடித்தாலே தொண்டையில் எரிச்சல் ஏற்படும் அதற்கு காரணம் சளி பிடித்து இருந்தால் காரி துப்பும் பொழுது தொண்டையில் காயம் ஏற்பட்டு விடும் அதனால் தொண்டை வலி அதிகமாக இருக்கும். தொண்டை வலி சரியாக ஓமம் இலை அல்லது துளசி போன்றவற்றை வெறும் மயில் சாப்பிடலாம் அல்லது தூதுவளியை கசாயம் ரசம் போன்ற ஏதேனும் ஒன்று செய்து சாப்பிட்டால் தொண்டை வலி சரியாகிவிடும்.
தொண்டை சளி காரணம்
தொண்டை சளி என்பது சளி பிடித்திருந்தால் தொண்டை எரிவது தான் நம் தொண்டை சளி என்று சொல்கிறோம் ஆனால் தொண்டையில் சளி இருப்பது இல்லை சளி பிடித்திருக்கும் போது நாம் காரி துப்பும் பொழுது தொண்டையில் காயம் ஏற்பட்டு விடுகிறது அந்த காயத்தை சுற்றி படலம் போல் இருப்பதால் நமக்கு தொண்டை எரிச்சலாக இருக்கும் பொழுதெல்லாம் காரி துப்பிக் கொண்டே இருப்போம். தொண்டையில் இருக்கும் காயம் சரியானால் தான் தொண்டை சளி சரியாகும்.
தொண்டை சளி நீங்க நாட்டு மருந்து
தொண்டையில் இருக்கும் சளி சரி ஆவதற்கு நம் வீட்டுப் பகுதியில் கிடைக்கும் துளசி, ஓமம் இலை போன்றவற்றை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருதல் தூதுவளை சுக்கு மிளகு இதை அனைத்தும் சேர்த்து ரசம் வைத்து குடித்தால் தொண்டை சளி நீங்கி தொண்டைய எரிச்சலும் நீங்கி விடும்.
Read Also:
வெந்தயம் கருஞ்சீரகம் ஓமம் பயன்கள்