துளசி பயன்கள் மற்றும் தீமைகள் | Thulasi Health Benefits
துளசி பயன்கள்
இயற்கை தந்த படைப்புகளில் துளசி ஒரு சிறந்த மருந்தாகும் துளசி செடியில் எல்லா பாகங்களும் மருந்தாகும் முந்தைய காலகட்டத்தில் எல்லா வீட்டிலும் இந்த செடி இருக்கும் ஆனால் இப்போது குறைவாகத்தான் உள்ளது இது சித்த மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வருகிறது நாம் துளசியை சாப்பிட்டால் மட்டுமல்ல சுவாசித்தால் கூட உடலுக்கு நன்மை தரும்.
நம் தினமும் துளசியை உட்கொண்டு வந்தால் காது வலி வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் நம் உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கு துளசி உதவுகிறது துளசி சாறு சளி தொல்லை ஆஸ்துமா ஆகியவை குணப்படுத்துகிறது எலுமிச்சை சாறுடன் துளசி சேர்த்து அரைத்து அதை சொறி சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு பற்று போட்டால் விரைவில் குணமாகும் இடுப்பு வலி உள்ளவர்கள் துளசி சாற்றுடன் இஞ்சி சிறிதளவு தாமரவேர் சிறிதளவு சேர்த்து அரைத்து இடுப்பில் பற்று போட்டால் இடுப்பு வலி குணமாகும் துளசி இலையை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தியை மேம்படுத்தும்.
துளசி செடி
வீட்டில் துளசி செடி இருப்பது எதிர்மறை ஆற்றல்களை ஒழிக்க மற்றும் தீமையை விரட்ட உதவுகிறது துளசி செடிக்கு நோய் தீர்க்கும் சக்தி இருக்கிறது இது மருத்துவ குணம் கொண்டது மற்றும் இருமல் சளி அல்லது பிற நோய்களை எதிர்த்து போராடுகிறது இதனால் நாம் வீட்டில் துளசி செடி வளர்ப்பது நல்லது.
துளசி செடியை செழிப்பாக வளர்க்க
துளசி செடியை நம் வீட்டில் வைத்து வழிபட்டால் நாம் பூஜைக்காகவோ அல்லது வேறு சில தேவைகளுக்காகவோ நம் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் நம் வீட்டிலேயே பசுமையாக செங்குத்தாக வளரசெடியில் இருந்து இளைய பறிக்கும் போது தண்டுடன் பறிக்க வேண்டும் இலைகளை மட்டும் பறிக்கக்கூடாது நாம் இலைகளை மட்டும் பறித்தால் அந்த இடத்தில் வேறு இலை துளிர்க்காது.
இதனால் புதிய கிளைகள் வராது அதனால் செழுமையாகவும் இருக்காது இதனால் நீங்கள் தண்டோடு வெட்டி எடுக்கும் போது புதிய கிளைகள் வளர்ந்து செழிப்பாகவும் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது மிக முக்கியமான ஒன்று நம் தண்ணீரை பொறுமையாகவும் கவனமாகவும் ஊற்ற வேண்டும் எல்லா தாவரங்களுக்கும் சூரிய ஒளி மிக முக்கியமானது அதனால் துளசி செடிக்கும் சூரிய வழி மிக முக்கியமானது.
துளசி மாடம் வைக்கும் திசை
துளசி மாடம் வடக்கு திசை மற்றும் கொல்லைப்புறத்தில் வைப்பது நல்லது கன்னி மூலையில் மற்றும் வீட்டின் வாசல் முன்னாடி வைப்பதும் நல்லது நாம் துளசி செடி வைக்கணும்னா மாடம்கட்டி வைக்காமல் வெறும் பூச்சட்டியில் வைத்தாலும் நல்லது துளசி மாடத்திற்கு மஞ்சள் துணியை கட்டி வந்தால் விட்டு நம் வடகிழக்கு திசையில் நின்று அர்ச்சனை பண்ணி வந்தால் துளசி வழிபாடு விசேஷ வழிபாடு என்று அன்னாள் நன்றாக ஆரம்பிக்கும்.
துளசி இலை தீமைகள்
ஆயுர்வேதத்தில் முக்கிய பங்காக துளசி இருக்கிறது அதே நேரம் துளசியை அதிகமாக பயன்படுத்தினால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம் சர்க்கரை நோயாளிகள் துளசியை சாப்பிடும் போது சர்க்கரை அளவை குறைக்க எடுக்கிறார்கள் ஆனால் நீரழிவு கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் ரத்த சக்கரைகுறைவால் பாதிக்கப்பட்டவர்கள் நீரழிவு கட்டுக்குள் இருக்க சற்று அதிகமான மாத்திரைகள் எடுப்பார்கள் அதனால் துளசியை எடுத்துக் கொள்ளும் போது அது சில பக்க விளைவுகள் ஏற்படுத்தலாம்.
தொடக்கத்தில் சாப்பிடும் போது அது கருப்பை சுருக்கத்தை உண்டாக்கலாம்துளசி நல்லது ஆரோக்கியமானது ஆனால் நோய்க்கான மருந்துகள் எடுக்கும் போது துளசி சாப்பிடக்கூடாது ஏனென்றால் மருந்துகள் எடுக்கும் போது துளசி சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள மருந்துகளின் அளவு அதிகரிக்கச் செய்யலாம் அல்லது குறையலாம் அதற்காக துளசியை முற்றிலும் நிறுத்தி விட கூடாது துளசி அழகாக எடுத்துக் கொள்ள வேண்டும்அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அதை போல் தான் துளசியும்.