தூதுவளை பயன்கள்
தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய கொடியாகும் தூதுவளையில் இலை பூ காய் வேர் அனைத்தும் மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது ஜலதோஷம் காய்ச்சல் சுவாச நோய்கள் பித்தம் விஷக்கடி நீரழிவு புற்றுநோய் என பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்பட்டு வந்தாலும் நெஞ்சில் உள்ள சளியை கரைப்பதில் தூதுவளை முதலிடமாக அமைகிறது இப்படி பல்வேறு நோய்களுக்கு மருந்தாக தூதுவளை பயன்படுகிறது இந்த தூதுவளை செடி சித்த மருத்துவத்தில் மிக முக்கிய இடத்தில் உள்ளது.
தூதுவளை இலை
தூதுவளை இலையை பறித்து நன்றாக சுத்தம் செய்து அதனுடன் பூண்டு மிளகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருமல் சளி நீங்கும்.
தூதுவளை இலையை சூப் வைத்து தினமும் குடித்து வரும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தூதுவளை இலையை பறித்து நன்கு சுத்தம் செய்து பருப்புடன் சேர்த்து சமைத்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும் மற்றும் பற்கள் உறுதியாகும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும்
தூதுவளை நன்மைகள் | Thuthuvalai Benefits in Tamil
தூதுவளையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் அடிக்கடி தூதுவளையை பயன்படுத்தினால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் எலும்புகள் பற்களையும் வலுப்படுத்தும் நரம்பு வளர்ச்சி உள்ளவர்கள் தூதுவளைக் கீரை ஒரு மாதத்திற்கு மூன்று முறையாவது சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வளம் பெரும் மற்றும் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
தூதுவளையை துவையலாக செய்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நீங்கும் மற்றும் நோய் வராமல் தடுக்கும் உடலில் பித்தம் அதிகரிப்பதால் சிலருக்கு தலைவலி தலைச்சுற்று மயக்கம் போன்றவை ஏற்படும் அது சரி செய்ய தூதுவளை சிறப்பாக செயல்படுகிறது.
தூதுவளை பொடி சாப்பிடும் முறை
தூதுவளை இலையை பறித்து நிழலில் உலர்த்தி நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும் தூதுவளை பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன்ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குலைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நின்றுவிடும் ஒரு டம்ளர் எருமை மோரில் ஒரு டேபிள் ஸ்பூன் தூதுவளை பொடியை கலந்து குடித்து வந்தால் ரத்த சோக நீக்கி ரத்தம் விருத்தி உண்டாகும்.
தூதுவளை தீமைகள்
சிறிய முள்ளாக இருக்கக்கூடிய கொடி வகை தான் தூதுவளை நம் இலையை பறிக்கும்போது கவனமாக பறிக்க வேண்டும் தூதுவளையால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு அதனால் தூதுவளையை வதக்கும் போது நெய் அல்லது பால் சேர்த்துக் கொண்டால் நல்லது.