சன் டிவி இது 1993இல் ஏப்ரல் 14ஆம் தேதியில் தொடங்கப்பட்டு இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு இந்திய சேனலாகும். படங்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு தற்போது சீரியல் ரசிகர்கள் உள்ளனர். காரணம் படங்களைப் போல சீரியலும் குடும்ப காட்சிகள் காதல் சண்டை போன்ற காட்சிகளை கொடுத்துக் கொண்டு வருகிறார்கள் அதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சீரியலுக்கு பயங்கரமான ரசிகர்கள் உள்ளனர். சீரியல் என்று சொன்னாலே அது சன் டிவி தான் ரொம்ப வருடங்களாகவே டிஆர்பி ரேட்டில் சீரியல் மூலம் கொடி கட்டி பறந்து வரும் ஒரு சேனலாகும்.
ஆரம்பத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்ட வந்த நிலையில் கொஞ்ச நாள் போன பிறகு திங்கள் முதல் சனி என்றும் ஒளிபரப்பானது ஆனால் தற்பொழுது ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகி வாரத்தில் உள்ள அனைத்து நாட்களும் சீரியல்கள் ஒளிபரப்பாகிறது.அந்த வகையில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரையும் மாலை 6:30 மணி முதல் இரவு 11 மணி வரையும் வாரத்தில் உள்ள அனைத்து நாட்களும் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இரவு நேரங்களில் முக்காவாசி வீடுகளில் சீரியல் தான் ஓடிக்கொண்டிருக்கிறது கூப்பிட்டால் கூட காது கேட்காத அளவிற்கு சீரியலில் அனைவரும் கவனம் செலுத்தி வருகிறார்கள் இப்படி இருக்கும் நிலையில் சன் டிவியில் திடீரென்று இரண்டு சீரியல்களின் நேரத்தை மாற்றி உள்ளனர். பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ண,மிஸ்டர் மனைவி போன்ற சீரியல்களின் நேரங்களை மாற்றி உள்ளனர்.
கண்ணான கண்ணே என்ற சீரியல் தின்னால் காலை 9.30 மணி அளவில் ஒரு ஒளிபரப்பாகி வந்தது.இந்நிலையில் இந்த சீரியல் நேரம் மாற்றம் செய்யப்பட்டு 9 மணி அளவில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிஸ்டர் மனைவி என்ற சீரியல் இரவு 8:30 மணியளவில் ஒஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியலை இரவு நடக்கும் காட்சிகளை மறு ஒளிபரப்பாக காலை 9:30 மணி அளவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.