திருவண்ணாமலை வரலாறு | Tiruvannamalai History Tamil
திருவண்ணாமலை
தமிழ்நாட்டில் அதிகம் இந்துக்கள் இருக்கின்றனர்.அவர்கள் தினந்தோறும் கோவில்களுக்கு செல்வார்கள்.இந்த வகையில் தமிழ்நாட்டில் மிக அதிக பக்தர்கள் வரும் கோயில் திருவண்ணாமலை.இது பண்டைய காலத்தில் அண்ணாமலை என்பது அடைய முடியாத மழை என்று கூறுவார்கள்.பிறகு இந்த மலையின் புனித தன்மையினால் இந்த பெயருடன் திரு என்ற அடைமொழி சேர்த்து திருவண்ணாமலை என்று கூறுகின்றனர்.
திருவண்ணாமலை கோவில் சிறப்புகள்
இந்தியாவில் முக்கிய மற்றும் பாரம்பரியமிக்க ஆன்மீக சைவ தளமாக திருவண்ணாமலை இருக்கின்றது.அண்ணாமலை மலையும் அதன் மலை வளமும் தமிழர்களால் மிகவும் போற்றப்பட்டு வருகின்றது.கட்டடக் கலையில் பெருவிழாக்களிலும் திருவண்ணாமலை கோவில் மிகவும் புகழ்பெற்று இருக்கிறது.வருடந்தோறும் நடக்கும் தீப திருவிழாவை தமிழக மட்டுமில்லாமல் தென்னிந்தியாவில் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சிவனின் அருளை பெற்று செல்கின்றனர்.
மேலும் இந்த கோவிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும் 450 கல்வெட்டுகளும் இருக்கின்றது.இந்த கோவிலில் 100க்கும் மேற்பட்ட சன்னதிகள் இருக்கின்றது.இறை உருவங்கள்,செப்பு திருமேனிகள்,ஓவியங்கள்,அழகிய திருச்சுற்றுகள்,தீர்த்த குளங்கள்,ஆயிரம் கால் மண்டபம்,வானுயர்ந்த கோபுரங்கள் இந்த கோவிலின் சிறப்புகளாக இருக்கிறது.
திருவண்ணாமலை கோவில் யார் கட்டியது
கட்டடக்கலை வடிவமைப்பு | தென்னிந்திய கட்டிடக்கலை |
கட்டப்பட்ட நாள் | பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டு |
அமைத்தவர் | பல்லவர், சோழர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள் |
திருவண்ணாமலை கிரிவலம்
திருவண்ணாமலையை நினைத்தால் முத்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கை ஆகும்.ஆலய அருணாச்சலேஸ்வரர் உண்ணா மலை அம்பிகையும் தரிசிப்பது எவ்வளவு சிறப்பானது ஆனந்தத்தை தரவில்லையே அந்த அளவு இறைவனை மனதில் நினைத்துக் கொண்டு இந்த மலையை கிரிவலம் வந்தால் உள்ளமும் உடலும் நலத்தை பெறும்.கிரிவலம் செல்ல அனைத்து நாட்களும் உகந்த தினம் என்றாலும் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினம் என்று கிரிவலம் சென்றால் அனைத்திலும் விட சிறந்ததாக இருக்கும்.
திருவண்ணாமலை கோவில் கிரிவல மலையின் சுற்றளவு சுமார் 14 கிலோமீட்டர் ஆகும்.
கிரிவலம் செல்லும் பொழுது வழியில் அஷ்ட லிங்கங்கள்
- இந்திர லிங்கம்
- அக்னி லிங்கம்
- எம லிங்கம்
- நிருதி லிங்கம்
- வருண லிங்கம்
- வாயு லிங்கம்
- குபேர லிங்கம்
- ஈஷான்ய லிங்கம்
மேலும் ஒவ்வொரு லிங்கத்திற்கும் ஒரு சிறப்பம்சங்கள் இருக்கின்றது.அது மட்டும் இல்லாமல் வழியில் ஆதி அண்ணாமலை,நீர் அண்ணாமலை,சந்திர,சூரிய லிங்கங்கள்,16 விநாயகர் கோவில்கள்,ஏழு முருகன் கோவில்கள, ஆதி காமாட்சி அம்மன் என்று மொத்தம் 99 கோயில்கள் கொண்ட தெய்வீக கிரிவல பாதையாக அமைந்திருக்கிறது.
திருவண்ணாமலை வரலாறு
மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை.இந்த கோவிலின் இறைவன் சிவபெருமான் ஆவார்.சிவபெருமானை அண்ணாமலையார் அருணாச்சலேஸ்வரர் என்று அழைப்பார்கள்.பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி என்றும் நெருப்பு தன்மை கொண்ட தளமாகவும் கருதப்படுகிறது.இந்தக் கோவில்களை சீரமைத்து கட்டிய பல்லவர்கள் சோழர்கள் ஆவார்.இந்தக் கோவிலின் பூஜைகளுக்கான தானங்களையும் அளித்துள்ளார்கள்.
புராணங்கள்
புராணங்களின் படி ஒரு சமயம் சிவபெருமானின் தோற்றம் மற்றும் முடிவு என்ன என்பதனை பற்றி விரிவாக்கம்.சிவன்,பிரம்மா,விஷ்ணு ஆகிய மூவரும் எழுந்தபோது சிவபெருமான் இந்த அருணாச்சல மலையில் மிகப்பெரும் அக்னி பிழம்பு ஒன்றை உருவாக்கினார்.
அப்பொழுது சிவனின் அடிப்பகுதியை காண வந்த விஷ்ணு அவதாரம் எடுத்து பூமியை குடைந்து கொண்டே சென்றார்.பிரம்மதேவன் ஒரு அன்னை பறவை உருவம் எடுத்து சிவபெருமானின் உச்சி பகுதியைக் காண விண்ணை நோக்கி பறந்தாலும் சிவபெருமானின் தொடக்கம் எதை என்று தெரியாமல் இருந்தனர்.
சிவபெருமானின் உச்சி பகுதியை கண்டதாக பொய்யாய் கூறினார்கள்.இந்த பொய்யை அறிந்த சிவபெருமான் பிரம்ம தேவனுக்கு இந்த பூவுலகில் எங்கும் கோவில் கிடையாது என்று பிரம்ம தேவனை சபித்து விட்டார்.இந்த சம்பவத்திலிருந்து இந்த தளத்தில் சிவபெருமானை அடிமுடி காண முடியாத அண்ணாமலையார் என்று கூறுவார்கள்.
அருணம் என்பது சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு ஆகும்.சலம் என்றால் மலையாகும்.சிவபெருமான் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மை கொண்ட மழையாக இருப்பதனால் இந்த மலைக்கு அருணாச்சலம் என்று பெயர் வந்தது.தன்னுடைய கீழான வாழ்க்கையை எண்ணி அவமானம் அடைந்த அருணகிரிநாதர் தற்கொலை செய்து கொள்ள இந்த புனிதமான திருவண்ணாமலை கோவிலின் கோபுரத்தில் இருந்து கீழே குதித்த பொழுது முருகப்பெருமால் காப்பாற்றினார்.முருகனின் அருளால் தீராத நோயிலிருந்து குணமடைந்தார்.முருகனின் புகழைப் பாடும் திருப்புகழ் இன்னும் பாடலை இயற்றியுள்ளார்.
திருவண்ணாமலை கோவில் நேரம்
அதிகாலை | 5:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை |
மாலை | 3:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை |