வலது கண் துடித்தால் என்ன பலன் | Valathu Kan Thudithal
வணக்கம் நண்பர்களே.!!உடல் பாகங்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்து நம் முன்னோர்கள் பல பலன்களை கூறியுள்ளார்கள். அந்த வரிசையில் உள்ளங்கை அரித்தால் பண வரவு அதிகரிக்கும் என்றும் இடது கண் துடித்தால் பயணம் செல்வோம் வலது கண் துடித்தால் நம் வீட்டிற்கு விருந்தாளிகள் வருவார்கள் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.அதை நாம் இன்று வரை கடைபிடித்து வருகிறோம்.
பொதுவாக கண்கள் துடித்தால் நமக்கு பல பலன்கள் கிடைக்கிறது என்று நம்பப்படுகிறது குறிப்பாக சொல்லப் போனால் வலது கண் துடித்தால் நமக்கு நன்மைகள் அதிகமாக நடக்கும் என்றும் நம் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும் என்றும் பலரால் நம்பப்படுகிறது.வலது கண் துடித்தால் உண்மையில் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
வலது கண் துடித்தால் என்ன பலன்
பொதுவாக ஆண்களுக்கு வலது கண்ணும் பெண்களுக்கு இடது கண்ணும் துடித்தால் நல்லது நடக்கும் என்றும் ஆண்களுக்கு இடது கண்ணும் பெண்களுக்கு வலது கண் துடித்தால் பிரச்சனைகள் ஏற்படும் என்று பலரால் நம்பப்படுகிறது.
இடது கண் துடித்தால் என்ன பலன் |
ஆண்களுக்கு வலது கண் துடித்தால் என்ன பலன்
பொதுவாக கண்கள் துடித்தால் பல பலன்கள் இருக்கிறது என்றும் பலரால் நம்பப்படுகிறது. அந்த வகையில் ஆண்களுக்கு வலது கண் துடித்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம். ஆண்களுக்கு வலது கண்கள் துடித்தால் புகழ், பெருமை கிடைக்கும்.
ஆண்களின் வலது கண்ணின் இமை துடித்தால் இதுவரை இருந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கி ஒரு நல்ல நிலைமைக்கு வருவார்கள்.அதே போல் கண்களின் கீழ் சதை பகுதி துடித்தால் செல்வம்,புகழ்,பெருமை ஆகியவை உங்களைத் தேடி வரும்.
பெண்கள் வலது கண் துடித்தால் என்ன பலன்
பொதுவாக பெண்களுக்கு வலது கண் துடித்தால் பிரச்சனைகள் என்று நம்பப்படுகிறது. பெண்களின் வலது கீழ் இமை துடித்தால் திருமணம் ஆன பெண்களாக இருந்தால் அவர்களின் கணவரின் உடல்நிலை பாதிப்பு ஏற்படும்.
அதுவே திருமணமாகாத பெண்களாக இருந்தால் குடும்பத்தில் யாரோ ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும்.பெண்களின் வலது கண் துடித்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எந்த ஒரு செயலை செய்தாலும் அதை கவனத்துடன் செய்ய வேண்டும்.
கண் துடித்தால் என்ன பலன்
பொதுவாக ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்லது என்று பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது என்றும் அனைவராலும் நம்பப்படுகிறது.அதேபோல் ஆண்களுக்கு இடது கண் இடது கண் துடித்தால் கெட்டது என்றும் பெண்களுக்கு வலது கண் துடித்தால் கேட்டதும் என்றும் பலரால் நம்பப்படுகிறது.
கண்கள் துடித்தால் நமக்கு கெடுதல் நடக்கப்போகிறது என்று யாரும் பயப்பட வேண்டாம் கண் துடிப்பதற்கு காரணம் ரத்தத்தின் வேகம் அதிகரித்து கண்களில் உள்ள தசைகளில் இருக்கும் நரம்புகள் இழுப்பு ஏற்பட்டு கண் துடிப்பு ஏற்படுகிறது.
கனவுகளின் பலன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
மகாலட்சுமி கனவில் வந்தால் என்ன பலன் |
கன்று குட்டி கனவில் வந்தால் |
உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
சிவன் கனவில் வந்தால் என்ன பலன் |