Homeதமிழ் கட்டுரைகள்வள்ளலார் வரலாறு | Vallalar History in Tamil

வள்ளலார் வரலாறு | Vallalar History in Tamil

TAMILDHESAM-GOOGLE-NEWS

வள்ளலார் வரலாறு | Vallalar History in Tamil

Vallalar History in Tamil:வள்ளலார் என்று அழைக்கப்படுபவர் ராமலிங்க அடிகளார் இவர் ஓர் ஆன்மீகவாதி ஆவார்.எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணத்தில் இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டு இருக்கிறார்.

சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமே வாதிகள் கடுமையாக எதிர்த்தார்கள்.இவர் சாதிய பாகுபாடுகளை கடுமையாக கூறினார்.வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் பாடி இருக்கிறார்.1867-இல் கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞான தர்ம சபை என்ற சபையை நிறுவி உள்ளார்.

அங்கு வரும் அனைவருக்கும் மூன்று வேலையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது இன்றளவும் செயல்பட்டு வரும் இந்த தர்மசபை வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றி வருகின்றார்கள்.தர்ம சபைக்கான உணவுப் பொருட்களை தமிழ்நாடு அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகின்றது.

எதிலும் ஒரு நோக்கம் வேண்டும் பசித்தவர்களுக்கு சாதி மதம் இனம் மொழி என்ற வேறுபாடு கருதாமல் உணவளிக்க வேண்டும்.மதவெறி கூடாது ஆகியவை இவரின் முக்கிய கொள்கைகள் ஆகும்.இவர் பாடிய ஆயிரம் பாடல்களின் தொகுப்பு திருவருட்பா என்று அழைக்கப்படுகின்றது.இவர் சேவையை கருத்தில் கொண்டு இந்திய அரசு 2007 ஆம் ஆண்டு இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தார்கள்.

வள்ளலார் பொன்மொழிகள்

vallalar history in tamil

 • ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதின் மூலம் எதையும் இழந்து விடக்கூடாது.அந்த இடத்தில் ஒளி இரண்டு மடங்காக இருக்கும்.அதுபோல நாம் பிறருக்கு உதவுவதால் நாம் இழக்க போவது எதுவும் இல்லை அதனால் நாம் பெரும் இன்பம் இரண்டு மடங்காக இருக்கும்.
 • உண்டியலில் கண்காணிக்க செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்பவருக்கு வயிறு நிறைய உணவு கொடுக்க வேண்டும். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சியை தரும்.
 • பிறர் பசியை மட்டும் போக்குவதோடு ஒருவருடைய ஒழுக்கமும் கடமையும் நின்று விடக்கூடாது.பிறருக்கு ஏற்படும் துன்பங்களையும் ஒவ்வொருவரும் முன் கொண்டு வர வேண்டும்.
 • வாக்கு வேறு,மனம் வேறு,செயல் வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடக்கூடாது.இந்த மூன்றும் ஒன்றே நிலையில் வழிபட வேண்டும்.
 • மனதை அடக்க நினைத்தால் அடங்காது அதை அறிய நினைத்தால் அடங்கிவிடும் தவறு செய்வது மனம் தான்.இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்.
 • அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை.உண்மையை சொன்னால் அது உனது மரியாதையை பாதுகாக்கும்.
 • எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் இருக்கிறார் என்று அறிதலே கடவுள் பக்தியாகும்.
 • புண்ணியம் மற்றும் பாவம் என்பது மனம்,சொல்,செயல் ஆகிய மூன்று வழிகளில் தான் நம்மை வந்தடைகின்றது.
 • சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவர்களை அறிமுகப்படுத்துகின்றது.
 • வெயிலுக்கு ஒதுங்கும் போது மரத்தை தேடுவோம் அதனால் அந்த மரங்களை வெட்டக்கூடாது.

வள்ளலார் கொள்கைகள்

 • கடவுள் ஒருவரே.
 • அவரை ஜோதி வடிவில் உண்மை அன்பால் வழிபட வேண்டும்.
 • சிறு தெய்வ வழிபாடு கூடாது.
 • அந்த தெய்வங்களின் பெயரினால் உயிர் பலி ஆகக்கூடாது.
 • மாமிசம் உண்ணக்கூடாது.
 • சாதி,சமயம் போன்ற வேறுபாடுகள் இருக்கக் கூடாது.
 • எந்த உயிரையும் தம் உயிர் போல் எண்ணி ஒழுகும் ஆன்ம நேய ஒருமைப்பாடு உரிமை கடைபிடிக்க வேண்டும்.
 • ஏழைகளின் பசி தீர்ந்து ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல்.
 • புராணங்களும்,சாத்திரங்களும் முடிவான உண்மையை தெரிவிக்கக் கூடாது.
 • மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும்.
 • இறந்தவர்களை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது.
 • எந்த காரியத்திலும் பொதுநோக்கம் கொள்ள வேண்டும்.

வள்ளலார் எழுதிய நூல்கள்

திருவருட்பா உரைநடை பகுதி என்னும் நூல் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையை பதிப்பகத்தால் வள்ளலார் அவதார தினத்தில் இந்த பதிப்பை வெளியிட்டார்கள்.

வள்ளலார் பதிப்பித்த நூல்கள்

 • சின்மய தீபிகை
 • ஒழிவில் ஒடுக்கம்

வள்ளலார் கூறுவது

வள்ளலார் போதித்த சுத்த சன்மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படை அம்சம் எல்லா ஜீவராசி இடமும் அன்பு காட்ட வேண்டும் எல்லாமே இறைவன் படைப்பு என்பதனால் இறைவனின் குறிப்பிட்ட சில படிப்புகளை அலட்சியப்படுத்தி விட்டோம் வெறுத்துவிட்டு இறைவனை யாரும் அடைய முடியாது.

எனவே எல்லா உயிர்களையும் தன்னுயிராக எண்ணி நடப்பதே உண்மையான ஆன்மீகம் ஆகும்.அதுவே அருட்பெருஞ்ஜோதி அணை இறைவனை அடையும் வழி என்பதனை ஆன்மீகவாதிகளாக தங்களை எண்ணி கொள்பவர்கள் மறக்கக்கூடாது.கடவுள் அனைத்து உயிர்களையும் பொதுவாக படைத்திருக்கின்றனர்.

அதனால் அவரை சாதி சமயம் மதம் என்று குறுகிய வட்டங்களுக்குள் அடர்த்தி விட முயற்சி அறியாமையே ஒழிய ஆன்மீகம் இல்லை.வள்ளலார் அவர்கள் கடவுள் குறித்து கூறிய கருத்துக்கள். எல்லா பிரிவினைகளையும் வள்ளலார் ஆன்மிகம் அல்ல அறிவும் அல்ல என்று மறுத்தார்.

பிரிவினைகள் அழிக்குமே அல்லாமல் நம்மை எதையும் விளைவிக்காது என்று அவர் கூறியிருக்கின்றார்.பிரிவினைகள் இல்லாமல் எல்லா உயிரும் தன்னுயிர் போல் எண்ணி இருப்பவரின் உள்ளமே இறைவன்.

வள்ளலார் வரலாறு தமிழ்

தமிழ் சங்கத்தில் வாழ்ந்த பல ஆன்மீக தலைவர்களில் வள்ளலாரும் ஒருவர்.இவர் உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர்.இந்த உலகில் நல்ல எண்ணங்கள் சிந்தனைகள் பரவ வேண்டும் என்று கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர்.இவரைத் திருவருட்பிரகாச வள்ளலார் என்று போட்டப்படுகின்றார்.இதனைத் தொடர்ந்து இவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

இயற்பெயர் இராமலிங்கம் 
பிறப்பு 5-10-1823
பிறந்த இடம் மருதூர்,கடலூர் மாவட்டம்
வேறுபெயர் வள்ளலார்,திருவருட்பிரகாசர்
பெற்றோர் பெயர் ராமையா பிள்ளை – சின்னம்மையார்
துணைவியர் பெயர் தனக்கோடி
பணி தவயோகி,ஆன்மீக சொற்ப்பொழிவாளர்,சத்திய தரும சாலை நிறுவனர்,சமூக சீர்திருத்தவாதி
இறப்பு 30-01-1874

ராமலிங்கர் அவர்களின் தந்தை இறந்த பிறகு தாயார் குழந்தைகளோடு பொன்னேரி என்ற ஊர் இருக்கு சென்று அங்கு வாழ்ந்து வந்தார்கள்.பிறகு குடும்பத்தில் பொருள் ஈட்டுவதற்காக அண்ணன் சபாபதி சமய சொற்பொழிவு ஆற்றிய வந்தார் அண்ணனுக்கு ராமலிங்க சுவாமிகள் பெரிய அளவில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக சபாபதி அவர்கள் வேலைக்கு செல்வார் ஆனால் வள்ளலார் அவர்களுக்கு படிப்பில் ஆர்வமில்லை.

வள்ளலாரை சபாபதி முதலியாரிடம் கல்வி பயில்வதற்கு அனுப்பி வைத்தார் வள்ளலார் அவர்கள் சரியாக படிக்கவில்லை கந்த கோட்டத்தில் முருகனுக்கு பாடிய பாடலை கேட்ட சபாபதி முதலியார் அவருடைய ஆன்மீக உணர்வை பார்த்து இனி நான் வள்ளலார் அடிகளுக்கு பாடம் சொல்லித் தர மாட்டேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் மேலும் அவர் ஒரு தெய்வப்பிறவி என்று கூறி சென்றுவிட்டார்.பிறகு அண்ணன் சபாபதி அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வள்ளலார் அவர்கள் ஆன்மீக சொற்பொழிவுக்கு சென்று விட்டார்.

அங்கு அவர் பாடிய தேவரா பாடல்கள் மக்கள் அனைவரையும் கவர்ந்துவிட்டார்.இதனை அறிந்த சகோதரர் ராமலிங்க அடிகளாரை படிக்க அனுப்பாமல் அவர் போக்கிலேயே விட்டுவிட்டார்.இதன்பிறகு ராமலிங்க அடிகளார் தன் இறப்பேனையில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கினார்.

இவர் மொத்தம் 40 ஆயிரம் பாடல்கள் பாடி இருக்கின்றார் இதில் இவர் ஏற்றிய முதல் நூல் தெய்வமணிமாலை ஆகும்.பின் அனைவரும் வற்புறுத்தலின்படி வள்ளலாருக்கு திருமணம் செய்து வைத்தனர் ஆனால் அவருக்கு அந்த திருமணத்தில் விருப்பமில்லை இருப்பேனே சகோதரர் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தார்கள்.

தாம்பத்திய உறவில் விருப்பம் இல்லாததால் வள்ளலார் அவர்கள் துறவியாகவே வாழ்ந்தார்.இவர் கடவுளின் பெயரில் செய்யப்படும் உயிர் வலியை தடுத்து நிறுத்தினார் பிறகு மக்களின் பசியை போக்குவதற்காக தர்ம சாலையை தொடங்கி வைத்தார்.சமய சமரச சுத்த சன்மார்க்கம் சத்திய ஞானசபை போன்றவற்றை நிறுவி இருக்கின்றார்.சமத்துவம் கல்வி தியானம் போன்றவற்றை மக்களிடம் பரப்பினார்.

இந்திய அரசு இவருடைய சேவையை கருத்தில் கொண்டு 2007 அஞ்சல் தலை வெளியிட்டு இவரை சிறப்பித்தார்கள்.வள்ளலார் அவர்கள் உலகிற்கு பல சேவைகளையும் தகவல்களையும் தத்துவங்களையும் சொல்லிவிட்டு 1874 ஆம் ஆண்டு இவ்வுலகையை விட்டு மறைந்து விட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

MOST POPULAR

Recent Comments

நல்ல நேரம் இன்று
கனவு பலன்கள் Png