வாராஹி அம்மன் 108 போற்றி | Varahi Amman History In Tamil
Varahi Amman History In Tamil:வணக்கம் நண்பர்களே.!! வராகி அம்மனைவரலாறு மற்றும் அதேபோல் வராகி அம்மன் கனவில் வந்தால் என்ன நன்மைகள் வரும் என்பதை பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Varahi Amman History In Tamil
வராகி அம்மனை அனைத்து மதத்தினரும் வணங்குவார்கள்.வராகி அம்மன் மிகவும் சாதுவான கடவுளாக இருக்கிறது.எதிரிகளை அழிப்பதற்காக கும்பிடப்படும் தெய்வம் தான் வாராகி அம்மன்.வராகி அம்மன் இடம் பொருத்து காட்சி கொடுக்கும். ஒரு சில இடங்களில் இரண்டு கை நான்கு கை ஆறுகை எட்டு கைகளிலும் வராகி அம்மன் காட்சி கொடுக்கும்.வராகி அம்மன் வாகனமாக எருமை மாடு சிங்கம் குதிரை இது போன்ற பல வாகனங்கள் வராகி அம்மனுக்கு உள்ளது.
வராகி அம்மன் கனவில் வந்தால்
வராகி அம்மன் உங்கள் கனவில் வந்தால் நீங்கள் அந்த அம்மனை உங்கள் வீட்டில் வழிபடுவதில்லை என்று அர்த்தம் அதனால் வாராஹி அம்மனின் உருவ படம் வாங்கி வீட்டில் பூஜையறையில் வைத்து அவர்களை வணங்குவது நல்லது.
வராகி அம்மன் வணங்குவதன் மூலம் உங்கள் கஷ்டங்கள் நீங்கி நீங்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வருவீர்கள்.வராகி அம்மன் உங்கள் கனவில் வந்தால் நீங்கள் ஏதோ ஒரு தீர்க்க முடியாத கஷ்டத்தில் இருக்கிறீர்கள். அந்த கஷ்டம் நீங்கி நீங்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வருவீர்கள்.
வாராஹி வழிபாடு பலன்கள்
வாராஹி அம்மனை யார வேண்டுமானாலும் வழிபடலாம். இந்த அம்மன் அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொண்ட கடவுளாக வாராகி அம்மன் இருக்கிறார்.வாராஹி அம்மனை கோவிலில் அனைத்து நேரங்களிலும் வழிபட முடியாது அதற்கான சில நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டும்தான் வாராஹி அம்மனை வழிபட முடியும். வாராஹி அம்மன் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருப்பார்.வாராஹி அம்மனை வழிபடுவதன் மூலம் நமக்கு நிறைய நன்மைகள் இருக்கிறது பொதுவாக எதிரிகளை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாராஹி அம்மனை வழிபடுவார்கள். வாராஹி அம்மனை வழிபடுவதன் மூலம் நமக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
வாராஹி அம்மன் 108 போற்றி
ஓம் வாராஹி போற்றி
ஓம் சக்தியே போற்றி
ஓம் சத்தியமே போற்றி
ஓம் ஸாகாமே போற்றி
ஓம் புத்தியே போற்றி
ஓம் வித்துருவமே போற்றி
ஓம் சித்தாந்தி போற்றி
ஓம் நாதாந்தி போற்றி
ஓம் வேதாந்தி போற்றி
ஓம் சின்மயா போற்றி
ஓம் ஜெகஜோதி போற்றி
ஓம் ஜெகஜனனி போற்றி
ஓம் புஷ்பமே போற்றி
ஓம் மதிவதனீ போற்றி
ஓம் மனோநாசினி போற்றி
ஓம் கலை ஞானமே போற்றி
ஓம் சமத்துவமே போற்றி
ஓம் சம்பத்கரிணி போற்றி
ஓம் பனை நீக்கியே போற்றி
ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி
ஓம் தேஜஸ் வினி போற்றி
ஓம் காம நாசீனி போற்றி
ஓம் யகா தேவி போற்றி
ஓம் மோட்ச தேவி போற்றி
ஓம் நானழிப்பாய் போற்றி
ஓம் ஞானவாரினி போற்றி
ஓம் தேனானாய் போற்றி
ஓம் திகட்டா திருப்பாய் போற்றி
ஓம் தேவ கானமே போற்றி
ஓம் கோலாகலமே போற்றி
ஓம் குதிரை வாகனீ போற்றி
ஓம் பன்றி முகத்தாய் போற்றி
ஓம் ஆதி வாராஹி போற்றி
ஓம் அனாத இரட்சகி போற்றி
ஓம் ஆதாரமாவாய் போற்றி
ஓம் அகாரழித்தாய் போற்றி
ஓம் தேவிக்குதவினாய் போற்றி
ஓம் தேவர்க்கும் தேவி போற்றி
ஓம் ஜுவாலாமுகி போற்றி
ஓம் மாணிக்கவீணோ போற்றி
ஓம் மரகதமணியே போற்றி
ஓம் மாதங்கி போற்றி
ஓம் சியாமளி போற்றி
ஓம் வாக்வாராஹி போற்றி
ஓம் ஞானக்கேணீ போற்றி
ஓம் புஷ்ப பாணீ போற்றி
ஓம் பஞ்சமியே போற்றி
ஓம் தண்டினியே போற்றி
ஓம் சிவாயளி போற்றி
ஓம் சிவந்தரூபி போற்றி
ஓம் மதனோற்சவமே போற்றி
ஓம் ஆத்ம வித்யே போற்றி
ஓம் சமயேஸ்ரபி போற்றி
ஓம் சங்கீதவாணி போற்றி
ஓம் குவளை நிறமே போற்றி
ஓம் உலக்கை தரித்தாய் போற்றி
ஓம் சர்வ ஜனனீ போற்றி
ஓம் மிளாட்பு போற்றி
ஓம் காமாட்சி போற்றி
ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி
ஓம் முக்கால ஞானி போற்றி
ஓம் சர்வ குணாதி போற்றி
ஓம் ஆத்ம வயமே போற்றி
ஓம் ஆனந்தானந்தமே போற்றி
ஓம் நேயமே போற்றி
ஓம் வேத ஞானமே போற்றி
ஓம் அகந்தையழிப்பாய் போற்றி
ஓம் அறிவளிப்பாய் போற்றி
ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி
ஓம் கலையுள்ளமே போற்றி
ஓம் ஆன்ம ஞானமே போற்றி
ஓம் சாட்சியே போற்றி
ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி
ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி
ஓம் மரணமழிப்பாய் போற்றி
ஓம் ஹிருதய வாகீனி போற்றி
ஓம் ஹிமாசல தேவி போற்றி
ஓம் நாத நாமக்கிரியே போற்றி
ஓம் உருகும் கோடியே போற்றி
ஓம் உலுக்கும் மோகினி போற்றி
ஓம் உயிரின் உயிரே போற்றி
ஓம் உறவினூற்றே போற்றி
ஓம் உலகமானாய் போற்றி
ஓம் வித்யாதேவி போற்றி
ஓம் சித்த வாகினீ போற்றி
ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி
ஓம் இலயமாவாய் போற்றி
ஓம் கல்யாணி போற்றி
ஓம் பரஞ்சோதி போற்றி
ஓம் பரப்பிரஹ்மி போற்றி
ஓம் பிரகாச ஜோதி போற்றி
ஓம் யுவன காந்தீ போற்றி
ஓம் மௌன தவமே போற்றி
ஓம் மேதினி நடத்துவாய் போற்றி
ஓம் நவரத்ன மாளிகா போற்றி
ஓம் துக்க நாசினீ போற்றி
ஓம் குண்டலினீ போற்றி
ஓம் குவலய மேனி போற்றி
ஓம் வீணைஒலி யே போற்றி
ஓம் வெற்றி முகமே போற்றி
ஓம் சூதினையழிப்பாய் போற்றி
ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி
ஓம் அண்ட பேரண்டமே போற்றி
ஓம் சகல மறிவாய் போற்றி
ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி
ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி
ஓம் வாராஹி பதமே போற்றி
Read Also:
மாரியம்மன் கனவில் வந்தால் என்ன பலன்
சிவன் கனவில் வந்தால் என்ன பலன்
அப்பா உங்க கனவில் வந்தால் என்ன பலன்
அம்மா கனவில் வந்தால் என்ன பலன்