Vellai Pambu Kanavu Palangal | வெள்ளை பாம்பு கனவில் வந்தால்
வணக்கம் நண்பர்களே.!! தூங்கும் போது கனவு வருவது என்பது வழக்கமான ஒன்றாகும் அந்த கனவிற்கு பல பலன்களும் உண்டு வெள்ளை பாம்பு துரத்துவது கடிப்பது அல்லது வெள்ளை பாம்பை பார்த்து ஓடுவது போல் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
வெள்ளை பாம்பு கனவில் வந்தால்
வெள்ளை நிறப் பாம்பு கனவில் வந்தால் தூய்மையை குறிக்கும். நீங்கள் நல்ல குணங்களுடன் நல்ல நோக்கத்துடன் செயல்படுவீர்கள்.
பெரிய வெள்ளை பாம்பு கனவில் வந்தால்
பெரிய வெள்ளை பாம்பு கனவில் வந்தால் கடவுள் பக்தி அதிகரிக்கும். குடும்பம் மற்றும் உறவினர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். குடும்பத்தினர் மீது அதிகம் கவனம் கொள்வீர்கள்.
வெள்ளை பாம்பு கடிப்பது போல் கனவில் வந்தால்
வெள்ளைப் பாம்பு கடிப்பது போல் கனவில் வந்தால் உடல் நலக்குறைவு ஏற்படும் அதனால் உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் முன்னேற்றம் அடைந்து செல்வங்கள் அதிகரிக்கும்.
வெள்ளைப் பாம்பு வீட்டில் இருப்பது போல் கனவில் வந்தால்
வெள்ளை பாம்பு வீட்டில் இருப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் வீட்டில் இல்லாத போது உங்கள் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனைகள் வரக்கூடும் அதனால் வெளியில் ஏதேனும் வேலை இருந்தால் மட்டும் செல்லுங்கள் இல்லை என்றால் வீட்டில் குடும்பத்தினரிடம் நேரம் செலவிட்டு அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நிறைய வெள்ளை பாம்பு கனவில் வந்தால்
நிறைய வெள்ளை பாம்பு கனவில் வந்தால் உங்களுக்கு எதிரானவர்கள் உங்களுக்கு எதிரான சூழ்ச்சி செய்ய இருக்கிறார்கள் உங்களைப் பற்றி தவறாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
சின்ன வெள்ளை பாம்பு கனவில் வந்தால்
சின்ன வெள்ளை பாம்பு கனவில் வந்தால் உங்கள் முன்னேற்றம் பொறுக்காமல் இருப்பவர்கள் உங்களை தவறான செயலில் ஈடுபட செய்வார்கள் அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தெரியாதவர்களிடம் அதிகம் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது.
வெள்ளைப் பாம்புடன் விளையாடுவது போல் கனவில் வந்தால்
வெள்ளைப் பாம்புடன் விளையாடுவது போல் கனவில் வந்தால் தனது நண்பர்கள் தனக்கு சூழ்ச்சி செய்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டே இருப்பீர்கள்.
வெள்ளை நிற பாம்பு குழந்தைகளை கடிப்பது போல் கனவில் வந்தால்
வெள்ளை நிறப் பாம்பு குழந்தைகளை கடிப்பது போல் கனவில் வந்தால் இது அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும் அதாவது வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும். அந்தக் குழந்தைகளுக்கு வருங்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனைகள் வரவிருக்கிறது அதனால் அவர்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெள்ளை பாம்பு சுருண்டு இருப்பது போல் கனவில் வந்தால்
வெள்ளைப் பாம்பு சுருண்டு இருப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் ஒரு செயலை செய்ய நினைத்திருப்பீர்கள் அல்லது ஒரு செயல் நடக்க வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள் அந்த செயல் நல்லபடியாக முடிந்து உங்களுக்கு அது சந்தோஷத்தை கொடுக்கும்.
வெள்ளைப் பாம்பு துரத்துவது போல் கனவில் வந்தால்
வெள்ளை பாம்பு துரத்துவது போல் கனவில் வந்தால் எந்த ஒரு காரியங்கள் இருந்தாலும் மற்றவர்களின் விருப்பத்திற்கு மாறாகவே செய்வீர்கள் அல்லது உங்கள் விருப்பத்திற்கு மாறாக மற்றவர்கள் செய்வார்கள்.
வெள்ளைப் பாம்பு தண்ணீரில் இருப்பது போல் கனவில் வந்தால்
வெள்ளைப் பாம்பு தண்ணீரில் இருப்பது போல் கனவில் வந்தால் தொழிலில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடி வரும். தொழில் வெற்றி மூலமாக உங்களுக்கு செல்வங்கள் கிடைக்கும்.வெற்றி உங்களுக்கு கிடைத்தாலும் அந்த வெற்றியில் மகிழ்ச்சி இல்லாமல் சிறிதளவு கவலையும் கூடவே இருக்கும்.
வெள்ளைப் பாம்பை கொல்வதைப் போல் கனவில் வந்தால்
வெள்ளைப் பாம்பை கொல்வதைப் போல் கனவில் வந்தால் இது ஒரு நல்ல கனவாகும்.உங்கள் எதிரிகளுக்கு எதிராக நீங்கள் வெற்றி பெறுவீர்கள் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள்.
வெள்ளை பாம்பு குறுக்கே செல்வது போல் கனவில் வந்தால்
வெள்ளை பாம்பு குறுக்கே செல்வது போல் கனவில் வந்தால் நீங்கள் நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு ஒரு விஷயத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் அது நீங்கள் இதுவரை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள்.
Read Also:
பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன்
பிணத்தை கனவில் கண்டால் என்ன பலன்
வீட்டிற்குள் பூரான் வந்தால் என்ன பலன்
கருடன் கனவில் வந்தால் என்ன பலன்