கனவில் வெள்ளம் வந்தால் என்ன பலன்| Vellam kanavil vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.
அப்படி உங்கள் கனவில் வெள்ளம் அதாவது ஆற்றில் அதிக நீர் வருவது கடலில் இருந்து தண்ணி ஊருக்குள் வருவது போல் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கனவில் வெள்ளம் வந்தால் என்ன பலன்
பொதுவாக வெள்ளம் கனவில் வந்தால் யாரும் பயப்படத் தேவையில்லை. எல்லாம் கனவில் வந்த அதே போல நேரில் நடந்து விடுமோ என்று அனைவரும் பயப்படுவோம் அதற்காக யாரும் பயப்பட தேவையில்லை வெள்ளம் கனவில் வந்தால் உங்கள் வாழ்வில் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.
பண வரவுகள் அதிகரிக்கும்.வெள்ளம் கனவில் வந்தால் தடைப்பட்ட விஷயங்கள் நடைபெறும் அதாவது நீண்ட நாட்களாக திருமணம் நடக்காமல் தடைபட்டு வந்தால் கூடிய விரைவில் உங்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தை வரம் இல்லாமல் இருப்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.
பெரும் வெள்ளம் கனவில் வந்தால்
பெரும் வெள்ளம் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு உடல் ஆரோக்கியத்தில் குறை ஏற்படும். அதனால் உடல் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் அதாவது நேர நேரத்திற்கு சாப்பிடுவது நேரத்திற்கு தூங்குவது மற்றும் உடல் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
மண் கனவில் வந்தால் என்ன பலன் |
ஆற்று வெள்ளம் கனவில் வந்தால்
ஆற்று வெள்ளம் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு ஆரோக்கியத்தில் குறைபாடுகள் எதுவும் இருந்தால் நீங்கி உடல் ஆரோக்கியத்தில் எந்த ஒரு குறையும் இல்லாமல் இருப்பீர்கள்.
வெள்ளத்தில் அடித்து செல்வது போல் கனவில் வந்தால்
வெள்ளத்தில் அடித்து செல்வது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் மனதில் துன்பங்கள் ஏதாவது இருந்தால் நீங்கி மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். நீங்கள் ஏதாவது ஒன்று நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருப்பீர்கள் அது வெற்றிகரமாக நடந்து உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
இளநீர் கனவில் வந்தால் என்ன பலன் |
கன்று குட்டி கனவில் வந்தால் |
வெள்ளை பூக்கள் கனவில் வந்தால் |
கனவில் சில்லறை காசு வந்தால் என்ன பலன் |