வவேலுநாச்சியார் வரலாறு தமிழ் | Velu Nachiyar History in Tamil
தமிழகத்தை அதிகம் அரசர்களை ஆண்ட வந்தார்கள் ஆனால் இந்த பட்டியலில் ஒரு வீரமங்கை பற்றி பார்ப்போம்.ராணி வேலுநாச்சியார் என்பவர் சிவகங்கை பகுதியில் அரசியாக இருந்தவர்.இவர் 18 ஆம் நூற்றாண்டில் பெரிதானிய கிழக்கிந்தே கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய பெண் விடுதலைப் போராட்ட தலைவியாக இருந்தார்.இவரை இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனைகளில் ஒருவர் ஆவார்.
வீரமங்கை வேலுநாச்சியார்
வேலு நாச்சியார் முதன் முதலில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார்.இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளையனே வெளியேறு என்று போராடிய ஜான்சி ராணியை இன்றுவரை சொல்லி இருக்கின்றோம்.இவருக்கு முன்னால் வேலுநாச்சியார் தான் ஆங்கிலேயரை வெளியேறு என்று கூறினார்.
ஜான்சிராணி 1830 ஆம் ஆண்டு பிறந்தார்.ஆனால் இவருக்கு முன்னர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் 1730 ஆம் ஆண்டில் வேலுநாச்சியார் பிறந்து வெள்ளையனே வெளியேறு என்று கூறினார்.மேலும் வேலுநாச்சியார் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
வேலுநாச்சியார் ஆசிரியர் குறிப்பு
இயற்பெயர் | வேலுநாச்சியார் |
பிறந்த ஊர் | இராமநாதபுரம் |
பிறந்த நாள் | 03 – 01 – 1730 |
பெற்றோர் | செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி,முத்தாத்தாள் நாச்சியார் |
கணவர் | முத்து வடுகநாதர் |
இறப்பு | 25- 12 – 1796 |
வேலுநாச்சியார் ராமநாதபுரத்தில் பிறந்தார்.இவருடைய தந்தை அரசராக இருந்தார் அப்பொழுது அரசு உரிமைக்கு ஆண் வாரிசு தான் அரசர்கள் எதிர்பார்ப்பார்கள் ஆனால் பிறந்தது பெண் குழந்தை.ஆனால் வேலு நாச்சியாரின் தந்தை பெண் குழந்தை பிறந்து விட்டது என்று மனம் தளரவில்லை.
தன்னுடைய மகளுக்கு குதிரை ஏற்றம் வாழ் வீச்சு சிலம்பம் வளரி போன்ற பயிற்சிகளை கற்று கொடுத்தார்.தன்னைச் சுற்றி 10 போர்களை நிற்க வைத்து கடுமையாக பயிற்சி கொடுத்தார் பயிற்சிகளையும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார் வேலுநாச்சியார்.வேலு நாச்சியாருக்கு தாய்மொழியான தமிழை மட்டும் சொல்லிக் கொடுக்காமல் கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,உருது,சமஸ்கிருதம்,ஆங்கிலம் போன்ற மொழிகளையும் கற்றுக் கொடுத்தார் வேலுநாச்சியாரின் தந்தை.பிறகு வேலுநாச்சியார்க்கு 12 வயதில் திருமணம் செய்து வைத்தார்கள்.
தன்னுடைய மகளுக்கு ஒரு வீரன் தான் மாப்பிள்ளையாக வர வேண்டும் என்று நினைத்தால் வேலுநாச்சியாரின் தந்தை.சிவகங்கை சீமையாலும் முத்துடுகநாதரை தன்னுடைய மகளுக்கு ஏற்ற கணவன் என்று உணர்ந்து அவருக்கு 1746 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார்கள்.முத்து வடுகநாதர்க்கும் வேலு நாச்சியாரின் வீர சேலைகள் மிகவும் பிடித்து விட்டது வேலுநாச்சியாருக்கு பிறகு முத்து வடுகநாதர் கௌரி நாச்சியாரை மறுமணம் செய்தார்.
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு
1780 ஆம் ஆண்டு பொதுமக்களின் வெற்றி முழக்கதோடும் பெரும் வரவேற்போடும் 8 ஆண்டுகள் கழித்து தன்னுடைய மண்ணில் காலடி பதித்தார்.வேலு நாச்சியார் மீண்டும் சிவகங்கைக்கு ஒரு நாச்சியார் அரசி ஆனார்.மருது சகோதரர்கள் அந்த அரசவைக்கு மந்திரியானார்கள் வேலுநாச்சியார் அரசியலமை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.
வேலுநாச்சியார் வரலாறு
வேலு நாச்சியார் திருமணம் செய்த பிறகு சிவகங்கை சீமை காலடி வைத்த பின் நல்ல விதமாக ஆட்சி செய்து வந்தார்கள்.முத்து வடுகநாதர் நேராகவே சென்று தன்னுடைய விவசாய பணிகளை கவனித்துக் கொள்வார்கள்.அவருக்கு உதவி செய்வதற்கு மந்திர தாண்டவராய பிள்ளை மருது சகோதரர்கள் வேலு நாச்சியார் போன்றவர்கள் உதவி புரிவார்கள்.
சிவகங்கை சீமையானது நல்ல சீரும் சிறப்புடன் இருப்பதனை தெரிந்து கொண்டு ஆற்காடு நவாப் முகமது அலி சிவகங்கை சீமைக்கு சிறிய படையினை அனுப்பி கப்பம் கட்டுமாறு ஓழை ஒன்றிணை அனுப்பி வைத்தார்.உடனே முத்து வடுகநாதர் யார் யாருக்கு கப்பம் கட்ட வேண்டும் என்று கேட்டார்?நவாப் யார்?இந்த தேசத்திற்கு மன்னாரா!சல்லி காசு கூட கப்பம் கட்ட முடியாது என்று முத்து வடுகநாதர் கூறிவிட்டார்.
படை தளபதி வந்த பத்தாம் நாள் முகமது அலியிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.பாளையக்காரர்களில் நீங்களும் புலி தேவன் தான் கப்பம் கட்ட மறுக்கிறீர்கள்.கப்பம் கட்டாத புலி தேவன் நாட்டை விட்டு துரத்தினதை அறிவீர்கள் அல்லவா உடனே கப்பம் கட்டுங்கள்.இல்லையென்றால் சிவகங்கையில் நீங்கள் ஆட்சி செய்ய முடியாது.கடிதத்தை படித்தவுடன் முத்து வடுக நாதருக்கு மிகவும் கோபம் வந்தது.
அப்பொழுது வேலுநாச்சியாருக்கு பெண் குழந்தை பிறந்தது.வேலுநாச்சியார் மகளுடன் கொல்லங்குடியில் தங்கியிருந்தார்.1772 ஆம் ஆண்டு நியாபகம் சிவகங்கை மீது போர் தொடுத்தனர்.முத்து வடுகநாதரும் தம் படையினரோடு போரினை எதிர்த்து வடுகநாதரின் வாழ் சுழற்சிக்கு முன் நவாப் படையினரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை வெறுத்த இழப்புகளோடு பின் வாங்கினார்கள்.நவாப் மற்றும் கும்பினி படையினர் அடிபட்ட நவாப் மீண்டும் நம்மளை தீண்டாமல் இருக்க மாட்டார்கள் என்று மருது சகோதரர்கள் உணர்ந்து கடுமையாக பயிற்சியை எடுக்க உத்தரவு விட்டார்கள்.
மிஸ்டர் பான்ஸோர் சிவகங்கை கைப்பற்ற வேண்டும்.முத்து வடுகநாதரை கைது செய்ய வேண்டும்.அவரை நேரடியாக தாக்கி வெற்றி பெற முடியாது என்ற எண்ணத்தில் முகமது அலி தன்னுடைய ஒற்றர்களை அவருடைய செயல்பாடுகளை கண்காணித்து சரியான நேரத்தில் அவரை தாக்கி சிவகங்கை சீமையை கைப்பற்ற வேண்டும் என்று எண்ணினார்.
1772 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி முகமது அலி மகன் உம்தத் உல் உம்ரா தளபதி ஜோசப் ஸ்மித் தலைமையில் சிவகங்கை நோக்கி படையுடன் சென்றார்கள்.இன்னொரு கும்பினி தளபதி பான்ஸோர் தன்னுடைய படையுடன் சிவகங்கையை நோக்கி சென்றார்கள்.ஆனால் முகமது அலியின் மகன் சிவகங்கை விட்டு சோழபுரத்தை கைப்பற்ற சென்றார்கள்.மற்றவர்கள் சிவகங்கை நோக்கி சென்றார்கள்.
1772 ஆம் ஆண்டு நள்ளிரவு பூஜையில் கலந்து கொண்டு காளையார் கோவிலில் காளீஸ்வரரை தரிசித்து தன்னுடைய இளய மனைவி கௌரி நாச்சியாருடன் முத்து வடுகநாதர் கோவிலில் தங்கி இருந்தார்.கோவிலுக்கு வெளியே சிறுப்படை இருந்தது.திடீரென்று கோவிலை சுற்றி வளைத்த தளபதி பான்ஸோர் பெரும்படை இருந்தது.நேரில் மோத தைரியம் இல்லாமல் நட்ட நடு ராத்திரியில் இறைவனுக்கு பூஜை செய்யும் பொழுது வந்து தாக்குதல் செய்தனர்.தடுமாறிய முத்து வடுகநாதர் கும்பினி படையோடு மோதினார்.
பான்ஸோர் பீரங்கியுடன் வந்திருந்தால் அதன் முன் வாழ்வுச் தோற்று விட்டது கடும் போரில் பல வெள்ளைய தலைகளை பரிதா முத்துவடுகநாதர் அந்த போரில் மனைவியுடன் வீர மரணம் அடைந்து விட்டார்.
வேலுநாச்சி இருக்கு 50 வயது ஆனதால் தன்னுடைய மகளை சிவகங்கை சீமைக்கு அரசி ஆக்கினார்.மருது சகோதரர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.மக்களுக்கு சேவையில் தன்னை முழுவதும் வேலுநாச்சியார் அர்ப்பணித்து விட்டார்.நாட்டில் விவசாயம் பெறுகிறது பல ஊர்களை சாலைகளை அமைத்து கொடுத்தார் வணிக வளர்ச்சி சிறப்பாக இருந்தது பழைய கோவில் கோபுரத்தினை அழகாக உயர்த்து காட்டினார்.கோவிலுக்கு தேவையான தேரினை மரத்திலேயே காணிக்கையாக கொடுத்தார்.
வேலு நாச்சியாரின் இறப்பு
மக்கள் மனதில் எப்பொழுதும் நீங்காது நிலைத்து நிற்கும் வேலு நாச்சியார் 23-12-1796 ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு பிரிந்தார்.இந்திய வரலாற்றில் கணவன் இறந்ததுடன் கட்டை ஏறாமல் தன்னுடைய கணவனை கொன்றவனை நான் கொல்லாமல் சாக மாட்டேன் என்று சவால் விட்டவர் வேலுநாச்சியார்.இந்திய சுதந்திரப் போராட்ட களத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முறையாக போர் செய்து வீரப் பெண்மணி இவர் மட்டுமே பல பெண்களுக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய வீரப் பெண்மணி வேலுநாச்சியார் ஆவார்.