மூளைக்கு வேலை தரும் தமிழ் விடுகதைகள் Vidukathai In Tamil With Answer
வணக்கம் நண்பர்களே.!! விடுகதை என்றாலே நமக்கு ஞாபகத்துக்கு வருபவர்கள் பாட்டிதான் அவர்கள்தான் காலம் காலமாக கூறி நம்மளை வளர்த்தார்கள்.இப்போது உள்ள காலத்தில் விஞ்ஞானம் அதிகரித்து இருப்பதால் பாட்டியிடம் போய் விடுகதை கேட்டால் விடுகதை என்றால் என்ன என்று கேட்கும் காலத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
- Advertisement -
தமிழ் விடுகதைகள்
விடுகதைகள் கேட்பது மூலம் மற்றும் விடுகதைகளுக்கு விடை தெரிவிப்பதன் மூலம் நமக்கு அறிவு அதிகமாகிறது.அதனால் விடுகதைகளை கேட்கும் பழக்கத்திற்கு கொண்டு வருவதற்கான சில விடுகதை மற்றும் விடைகளை கீழே கொடுத்துள்ளோம் அதை அதைப் பார்த்து படித்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விடுகதைகளை கேட்டு அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
விடுகதைகள்
விடை
பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
தலைமுடி
சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?
புறா
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
வௌவால்
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
தேள்
பச்சை கீரை பொரிக்க உதவுவது . வழுக்க உவுதவும் . அது என்ன ?
பாசி
மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள்
விடுகதைகள்
விடை
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
வெங்காயம்
வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?
உளுந்து
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
கரும்பு
பணத்தை அள்ளித் தருவதாக கூறி பணத்தை எல்லாம் அள்ளிகொள்ளும் பூதம் அது என்ன ?
லாட்ரி சீட்
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
பூனை
குழந்தை விடுகதைகள்
விடுகதைகள்
விடை
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
விழுது
உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறேன். அவன் யார் ?
கடல் அலை
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
முதுகு
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
பட்டாசு
காற்று வீசும் அழகான மரம் . அது என்ன ?
சாமரம்
10 விடுகதைகள்
விடுகதைகள்
விடை
இருட்டில் கண் சிமிட்டும் ஆனால் நட்சத்திரம் அல்ல. அது என்ன?
மின்மினிப் பூச்சி
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
மூச்சு
உள்ளே இருந்தால் ஓடித்திரியும் வெளியே வெளியே வந்தால் விரைவில் மடியும்?
மீன்
பற்கள் இருக்கும் ஆனால் கடிக்க மாட்டான் அவன் யார்?
சீப்பு
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
பூரி
ஓடுமாம் சாடுமாம் ஒற்றைக் காலில் நிற்குமாம். அது என்ன ?
கதவு
சங்கீத பாட்டுக்காரன் மழையில் கச்சேரியே செய்வான் அவன் யார்?
தவளை
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
காகம்
ஐந்து ஊர்களுக்கு ஒரே மந்தை அது என்ன ?
உள்ளங்கை
காற்றை குடித்து, காற்றில் பறப்பான் அவன் யார்?
பலூன்
பாட்டி விடுகதைகள்
விடுகதைகள்
விடை
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
வெண்டைக்காய்
கால் இல்லாத மான் வேர் இல்லா புல்லை தின்னும் அது என்ன ?
மீன் / கடல் பாசி
எட்டு கால் ஊன்றி இருகால் பட வட்ட குடை பிடித்து வருவான் அவன் யார்?
நண்டு
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
கண்
தாடிக்கார அரசனுக்கு காடெல்லாம் சொந்தம் அவன் யார் ?
சிங்கம்
விடுகதைகள் தமிழில்
விடுகதைகள்
விடை
வயதான ஒருவருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?
பொக்கை
ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?
ஆமை
முன் கால் கையால் இருக்கும். குரங்கல்ல குட்டி வல்லும் இடம் பையாக இருக்கும் அது என்ன ?
கங்காரு
கேடயமுள்ள வீரனுக்கு வாள் இல்லை அவன் யார்?
ஆமை
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
முட்டை
சிறந்த விடுகதைகள்
விடுகதைகள்
விடை
ஆடி ஆடி நடக்கும்அரங்கம் அதிர நடக்கும் அது என்ன ?
யானை
அம்மா படுத்திருக்க மகள் ஒடிதிரிவாள் அது என்ன?
அம்மிகுலவி
ஒற்றைக்கால் வெள்ளைச்சாமி நீரோடையில் மீன் பிடிக்கிறான் அவன் யார்?
கொக்கு
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
அடுப்புக்கரி
அடிக்கடி தாவுவான் அரசியல்வாதி அள்ள அவன் யார் ?
குரங்கு
கடினமான விடுகதைகள்
விடுகதைகள்
விடை
பச்சை நிற அழகிக்கு உதட்டு சாயம் பூசமலே சிவந்த வாய் அவள் யார்?
கிளி
உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
பெயர்
தண்ணீர் இல்லாத தடாகத்தில் தாவு பாயுது கப்பல் அவன் யார் ?
ஒட்டகம்
குடியிருக்க கோட்டை கட்டும் அந்த கோட்டையை உடைத்து வெளியே வரும் அது என்ன?
பட்டாம்பூச்சி
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
இமை
மொக்கையான விடுகதைகள்
விடுகதைகள்
விடை
வெடி வெடித்தும் இடிந்து விழாத கோட்டை அது என்ன ?
இடி வானம்
வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன?
நாய்
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
வாழை
ஊரார் அறிந்த காரம் ஊரை அடக்கும் காரம் அது என்ன ?
அதிகாரம்
வீட்டிலிரு்ப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி அவர்கள் யார்?
பூட்டும், சாவியும்
மேலும் விடுகதைகளுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்