Homeதமிழ்27 தமிழ் விடுகதைகள் | Vidukathai in Tamil

27 தமிழ் விடுகதைகள் | Vidukathai in Tamil

27 தமிழ் விடுகதைகள் | Vidukathai in Tamil

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் அனைவருக்கும் பிடித்த‌ விடுகதைகள் பற்றி பார்க்க இருக்கிறோம்.ஒரு வரியில் ஒரு பொருளை எதிர்மறையாக விவரித்து சொல்லும் ஒரு புதிரே விடுகதை ஆகும்.இந்த விடுகதை புதிரில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றது.

- Advertisement -

நாம் அந்த காலத்தில் வாழ்ந்த தாத்தா பாட்டியிடம் கதைகள் கேட்பது கற்பனை வளரும் கதைகள் என்று பலவிதமான கதைகளை கூறுவார்கள்.அதில் ஒன்றுதான் விடுகதையும்.இது நமது அறிவாற்றலை வளர்ப்பது கூர்ந்து சிந்திக்கும் மனப்பான்மையை வளர்க்க உதவியாக இருக்கின்றது.இதனால் நமது மனம் ஒருங்கிணைப்பு கிடைக்கும்.அனைத்தையும் புரிந்து செய்யும் ஆற்றலும் கிடைக்கும்.மேலும்  விடுகதை மற்றும் அதற்கான விடைகளை சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.

Vidukathai In Tamil With Answer

விடுகதை விடை
சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்? புறா
வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன? உளுந்து
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன? முதுகு
இருட்டில் கண் சிமிட்டும் ஆனால் நட்சத்திரம் அல்ல. அது என்ன? மின்மினிப் பூச்சி
சங்கீத பாட்டுக்காரன் மழையில் கச்சேரியே செய்வான் அவன் யார்? தவளை
எட்டு கால் ஊன்றி இருகால் பட வட்ட குடை பிடித்து வருவான் அவன் யார்? நண்டு
கேடயமுள்ள வீரனுக்கு வாள் இல்லை அவன் யார்? ஆமை
ஒற்றைக்கால் வெள்ளைச்சாமி நீரோடையில் மீன் பிடிக்கிறான் அவன் யார்? கொக்கு
குடியிருக்க கோட்டை கட்டும் அந்த கோட்டையை உடைத்து வெளியே வரும் அது என்ன? பட்டாம்பூச்சி

 

மூளைக்கு வேலை தரும் தமிழ் விடுகதைகள் | Vidukathai In Tamil With Answer
விடுகதைகள் Comedy Vidukathai In Tamil With Answer
விடுகதை விடை
வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன? நாய்
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன? பாய்
கழற்றிய சட்டையை மறுபடியும் போட மாட்டான் அவன் யார்? பாம்பு
ஒருவனுக்கு உணவளித்தால் ஊரையே கூட்டுவான் அவன் யார்? காகம்
ஆலமரம் தூங்க அவனியெல்லம் தூங்க, ஶ்ரீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்? இதயம்
ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம் அது என்ன? தேன்கூடு
படுத்து தூங்கினால் கண் முன் ஆடும், அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும் அது என்ன? கனவு
கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரை வர வலைப்பான் அவன் யார்? வெங்காயம்
ஓர் அரண்மனையில் 32 காவலர்கள் அது என்ன? பற்கள்

 

- Advertisement -

vidukathai in tamil

 

- Advertisement -
Mokka Vidukathai In Tamil
விடுகதை விடை
கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண். இது என்ன? மஞ்சள் கிழங்கு
நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணி யில்லை இவர் யார்? சிலந்தி
பூ பூப்பது கண்ணுக்கு தெரியும், காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. இது என்ன? வேர்க்கடலை
அதட்டுவான் அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வர மாட்டான் அவன் யார்? நாக்கு
அடிகளை வாங்கி நம்மை ஆட வைப்பான் அவன் யார்? பறை
திட்டி திட்டி தீயில் போட்டாலும் அள்ளி அள்ளி அனலில் போட்டாலும் வாரி வாரி வாசம் தருவான் மனம் குளிர நறுமணம் தருவான் அவன் யார்?
சாம்பிராணி
அச்சில்லா சக்கரம் அசைந்தாடும் சக்கரம் அணிந்தால் அழகாகும் பெண்ணின் கரம் அது என்ன?
வளையல்
ஒன்றினுள் அடைக்க முடியும் ஆனால் அல்ல முடியாது,உணர முடியும்,ஆனால் உருவம் இல்லாதது.அது யார்? காற்று
ஒரு கால் மனிதனுக்கு உடலெல்லாம் கைகள்.அவன் யார்?
மரம்

 

இதையும் படிக்கலாமே..

Comedy Vidukathai In Tamil | தமிழ் நகைச்சுவை விடுகதைகள்
Mokka Jokes in Tamil | தமிழ் ஜோக்ஸ் | Kadi jokes in Tamil
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR