விளக்கெண்ணெய் முடி பயன்கள் | Vilakkennai Benefits in Tamil
ஒரு பொண்ணுக்கும் முடி நாவே ரொம்ப பிடிக்கும் அதிலும் முடி அழகாகவும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வேண்டுமென ரொம்ப ஆசை இருக்கும். ஆனால் இப்ப இருக்க சுற்றுச்சூழலில் முடியின் ஆரோக்கியம் ரொம்பவே பாதிக்கப்படுகிறது. இதனால் தலையில் பொடுகு தொல்லை முடி உதிர்வு முடி வெடிப்பு போன்றவை முடி வளர்ச்சியை தடை செய்கிறது.
அது மட்டும் இன்றி ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள் இல்லாததால் நம் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தி விட்டது. அதனால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. அதனால் விளக்கெண்ணெய் கொண்டு முடியை பராமரித்தால் நன்கு பலன் கிடைக்கும்.
விளக்கெண்ணெயில் விட்டமின் ஈ ஓமகா6 ஃ பேட்டி ஆசிட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. ஆதலால் இந்த விளக்கெண்ணையை வாரம் இரண்டு முறை தலைக்கு தேய்த்து குளித்து வரவேண்டும்.
விளக்கெண்ணெய் முடியின் வளர்ச்சியே அதிகரிக்கும்
நம் முடிக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்கும் விளக்கெண்ணெய் கொண்டு மூடியே பராமரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் அதிகம். இதனால் விளக்கெண்ணெயை கொண்டு முடி பராமரித்தால் அது முடியின் வளர்ச்சியை தூண்டும் அதற்கு வெதுவெதுப்பாக விளக்கை எண்ணையே சூடு ஏற்றி அதனை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து தலை குளித்து வரவேண்டும்.
விளக்கெண்ணெய் பொடுகை தடுக்க
பொடுகு தொல்லை இருந்தால் விளக்கெண்ணெயுடன் ஆலிவேரா ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும் இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால் பொடுகு தொல்லை தீர்க்கும்.
விளக்கெண்ணெய் முடி வறட்சியை தடுக்கும்
உங்களுக்கு முடி அதிகம் வறட்சியாக இருந்தால் வாரம் இரண்டு முறையாவது விளக்கெண்ணை மசாஜ் குளியல் எடுக்க வேண்டும். இதனால் முடியின் வரட்சி தடுக்கப்படுவதோடு அடர்த்தியாகவும் மென்மையாகவும் வளரும்.