மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள் இருந்து வரும். ஒரு சிலர் உடல் எடை அதிகமாக இருப்பதால் அந்த உடல் எடையை குறைப்பதற்கு பல முயற்சிகளை எடுத்திருப்பார்கள்.அப்படியும் உடல் எடை குறையாமல் இருந்திருக்கும்.இன்னும் ஒரு சிலருக்கு முகத்தில் முகப்பரு வரும் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் பல ரசாயனம் சார்ந்த மருந்துகளை பயன்படுத்தி வந்தும் முகப்பரு போகாமலே இருக்கும்.
உடல் எடை மற்றும் முகப்பரு பிரச்சனைகளால் பல நாள் அவதிப்பட்டு வருபவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க சப்ஜா விதையை பயன்படுத்தினால் மட்டும் போதும். சப்ஜா விதையில் ஏராளமான மருத்துவ பயன்கள் இருக்கிறது.
சப்ஜா விதையின் மருத்துவ பயன்கள்
உடல் எடை அதிகரித்து இருப்பவர்கள் எப்படி உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்துக்கொண்டு இருப்பார்கள். எந்த முயற்சி எடுத்தாலும் ஒரு சிலருக்கு உடல் எடை குறையாமல் இருக்கும்.உடல் எடை குறைப்பதற்கு சப்ஜா விதையை சிறிதளவு எடுத்து இரவு தூங்குவதற்கு முன்பாக தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும் மறுநாள் காலையில் ஊற வைத்த தண்ணீரை எடுத்து சூடு படுத்தி அதில் சிறிதளவு எலுமிச்சம் சாரை கலந்து குடிக்கவும். இந்த முறையில் சப்ஜா விதையை பயன்படுத்தினால் பசி எடுப்பதை குறைக்கிறது அதனால் உங்களுக்கு உடல் எடை குறையும்.
ஒரு சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் இருந்து வரும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் தினமும் வெறும் வயிற்றில் சுடு தண்ணீரில் சிறிதளவு சப்ஜா விதையை கலந்து குடித்து வருவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் குறைகிறது.
உடல் வலுவாக இருந்தால் தான் மனமும் வலுவாக இருக்கும். உடல் வலுவாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் எலும்பு வலுவாக இருக்க வேண்டும். எலும்பு வலுப்பெறுவதற்கு சப்ஜா விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு வலுப்பெறுவதுடன் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
மழைக்காலம் வந்து விட்டாலே சளி பிரச்சனை கூடவே வந்துவிடும் ஒரு சிலருக்கு சளி வந்தால் தலைவலி,மூக்கடைப்பு,நெஞ்சு சளி போன்றவைகள் கூடவே வந்து விடும். தலைபாரம்,சளி பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு சப்ஜா இலையை கொதிக்கின்ற நீரில் போட்டு குடித்து வரவும். சளி,தலைபாரம் படிப்படியாக குறைந்து விடும்.
முகத்தை அழகாக வைத்துக் கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டி வருவார்கள் குறிப்பாக சொல்லப்போனால் பெண்கள் தான் முகத்தை அழகாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவார்கள். ஒரு சில காரணங்களால் முகத்தில் முகப்பருவு ஏற்பட்டுவிடும் அதை போக்குவதற்கு பல வகையான மருந்துகளை பயன்படுத்தி இருப்பீர்கள் ஆனால் அப்பொழுதும் அந்த முகப்பரு நீங்காமல் இருந்திருக்கும். முகப்பரு போவதற்கு சப்ஜா இலையின் சாரை முகப்பருவின் மீது தேய்த்து வந்தால் முகப்பேர் நீங்கி பழையபடி உங்கள் சர்மம் பொலிவாக இருக்கும் அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே முகப்பரு வந்த இடத்தில் தழும்பு ஏற்பட்டிருந்தால் அங்கேயும் இதை தடவினால் முகப்பருவின் தழும்பு நீங்கிவிடும்.
ஒரு சிலருக்கு அதிகமாக பசி எடுக்கும். எந்த அளவுக்கு பசி எடுக்குமோ அந்த அளவுக்கு செரிமான பிரச்சனைகளும் இருந்து வரும். இந்த சியா விதியை சாப்பிடுவதன் மூலம் அதிக அளவு பசி எடுப்பதை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் செரிமான பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.