Homeமருத்துவம்உடல் எடையை குறைக்க வேண்டுமா?.உங்கள் வீட்டில் வெந்தயம் இருக்கிறதா?

உடல் எடையை குறைக்க வேண்டுமா?.உங்கள் வீட்டில் வெந்தயம் இருக்கிறதா?

உடம்பு சரியில்லை என்றாலே நாம் மருத்துவமனைக்கு செல்வதே தான் வழக்கமாக வைத்துள்ளோம். ஒரு சில நோய்களை நம் வீட்டில் சரி செய்து கொள்ளலாம் அது போன்ற நோய்களுக்கு நாம் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்ப்போம். நம் வீட்டில் சமையலுக்காக பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் இருக்கிறது. நாம் சமையலுக்காக பயன்படுத்தும் வெந்தயத்தை சாப்பிட்டால் அல்லது உணவில் வெந்தயத்தை சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் இருக்கிறது. ஒவ்வொன்றாக என்ன என்று பார்க்கலாம்.

வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

- Advertisement -

வெந்தயம் சாப்பிடுவது மூலம் பல நன்மைகள் இருக்கிறது குறிப்பாக சொல்லப் போனால் பெண்களுக்கு தான் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வலிகளை போக்குவதற்கு வெந்தயத்தை நீரில் ஊற வைத்து நீருடன் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகள் குறையும்.

இப்போதுள்ள காலத்தில் நிறைய பேத்திற்கு இருக்கும் பிரச்சனை உடல் எடை அதிகரிப்பது தான் அந்த உடல் எடையை எப்படி குறைக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்து வருவோம்.தினமும் வெந்தயத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்களை குறைப்பதோடு உடல் எடையும் குறைக்கும்.அது மட்டும் இல்லாமல் மாரடைப்பு அதாவது இதய நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

உணவு என்பது அனைத்து மனிதர்களுக்கும் அவசியமான ஒன்றாக உணவு இல்லை என்றால் உயிர் வாழ முடியாது அதனால் அனைவரும் உணவு சாப்பிடுவோம் அப்படி சாப்பிடும் உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் உடல் ஆரோக்கியத்திற்கு குறைபாடு ஏற்படும் அதனால் வெந்தயத்தை நீருடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனைகள் சரியாகிவிடும்.

பெண்களோ ஆண்களோ உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் கொடுப்பார்களோ இல்லையோ உடல் தேகம் அழகாக இருக்க வேண்டும் தலைமுடி நன்றாக இருக்க வேண்டும் என்று தான் யோசிப்பார்கள் அதற்காக பல ரசாயனம் கவர்ந்த பொருட்களை பயன்படுத்துவார்கள் இனிமேல் சர்மம் அழகாக தெரிவதற்கு எந்த ஒரு ரசாயன பொருட்களையும் பயன்படுத்த தேவையில்லை.வெந்தயத்தை ஊற வைத்து தினமும் சாப்பிடுவதன் மூலம் சருமம் அழகு ஆவது மட்டுமில்லாமல் தலைமுடி வளர்ச்சியாக இருக்கும்.

- Advertisement -
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR