Watermelon benefits in Tamil | தர்பூசணி பயன்கள்
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் தர்பூசணியில் இருக்கும் பயன்களை பற்றி பார்க்க உள்ளோம்.கோடைகாலத்தில் நமது உடலுக்கு தேவையான குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியும் தருவதற்கு பழ வகைகளை ஜூஸ் ஆக சாப்பிடுவோம்.அந்த வகை பழ வகைகளில் ஒன்று தான் தர்பூசணி.நாம் கோடை காலத்தில் அதிகமாக சாப்பிடும் பழம் தர்பூசணி இந்த பழத்தை சில பக்க விளைவுகள் இருக்கின்றது அது மட்டும் இல்லாமல்.இதனால் ஏற்படக்கூடிய பயன்களை பற்றியும் விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.
தர்பூசணி வகைகள்
- தர்பூசணி விசாலா
- தர்பூசணி கிரண்
- தர்பூசணி நம்தாரி
- தர்பூசணி ஆரோஹி
தர்பூசணி விதை
தர்பூசணி விதையில் கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கும்.நமது உடலுக்கு தேவையான காப்பர்,ஸிங்க்,பொட்டாசியம்,மெக்னீசியம்,இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருக்கிறது.தர்பூசணி விதைகளை வெயிலில் காய வைத்து அதனை வறுத்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றது.
தர்பூசணி பயன்கள்
இதயம் பிரச்சினை
தர்பூசணி பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதனால் மாரடைப்பு வருவதை தடுத்து இதயத்துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது.
வயிற்று வலி
தர்பூசணி பழங்களை துண்டு துண்டுகளாக வெட்டி பதநீரில் போட்டு ஒரு துண்டு ஐஸ் கட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியாகவும் வயிற்று வலியை போக்கவும் உதவியாக இருக்கும்.
சிறுநீர் பிரச்சினை
தர்பூசணி விதையை அரைத்து அதில் கொஞ்சம் வெந்தய நீரை ஊற்றி கொதிக்க வைத்து பிறகு சூடு தணிந்ததும் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.
மாதுளை ஜூஸ் பயன்கள் | Mathulai Juice Benefits in Tamil |
சரும பாதுகாப்பு
தர்பூசணி பழச்சாறுடன் எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.அது மட்டும் இல்லாமல் தர்பூசணி பழச்சாறுடன் பால் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி மற்றும் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.
ஆஸ்துமா பிரச்சனை
தர்பூசணி பழத்தில் அதிகம் வைட்டமின் சி இருக்கிறது.எனவே தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா பிரச்சனை விரைவில் குணமடையும்.
ஆண்மை குறைபாடு
தர்பூசணி பழத்தில் சிட்ருலின் சத்து அதிகம் இருப்பதனால் ஆண்மை குறைபாட்டை தடுக்க உதவியாக இருக்கிறது.தர்பூசணி பழத்தில் வெள்ளையாக இருக்கும் பகுதியை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாட்டை தடுக்க உதவியாக இருக்கும்.
தர்பூசணியில் இருக்கும் சத்துக்கள்
- வைட்டமின் ஏ
- வைட்டமின் பி1
- வைட்டமின் பி2
- வைட்டமின் சி
- வைட்டமின் பி6
- பொட்டாசியம்
- மெக்னீசியம்
- தாது உப்புக்கள்
- பீட்டா கரோட்டின்
தர்பூசணி தீமைகள்
தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிட்டால் நீர்ச்சத்து மட்டுமில்லாமல் வயிற்று வலியை ஏற்படுத்தக் கூடும்.தர்பூசணி பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதனால் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது.அது மட்டும் இல்லாமல் செரிமான ஆற்றலை குறைத்து அஜீரண கோளாறையும் ஏற்படுத்துகிறது.
மது அதிகம் அருந்துபவர்கள் தர்பூசணி பழத்தை சாப்பிட்டால் கல்லீரல் பிரச்சனை ஏற்படும்.தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிட்டால் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யும்.
இதையும் படிக்கலாமே..
அத்திப்பழம் பயன்கள் | Athipalam Benefits Tamil |
பாலக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil |
வாழை மரத்தின் பயன்கள் | Banana Tree Benefits in Tamil |