Homeதமிழ்நாடுநாமக்கலில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தவர்.. கால் தவறி கீழே விழுந்து மரணம்!!

நாமக்கலில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தவர்.. கால் தவறி கீழே விழுந்து மரணம்!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வசந்தபுரத்தை சேர்ந்தவர் தான் சக்திவேல். சக்திவேல் கட்டிட வேலைகளை செய்யும் கொத்தனாராக இருந்து வருகிறார். இவர் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் புதிதாக தண்ணீர் தொட்டி ஒன்றை கட்டி வந்தார். நேற்று முன்தினம் அந்த தண்ணி தொட்டியின் பூச்சி வேலைகளை செய்து கொண்டிருந்தபோது கால் தவறி இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

கால் தவறி கீழே விழுந்த சக்திவேலை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையின் மருத்துவர் சக்திவேலை பரிசோதித்து பார்த்துவிட்டு இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

- Advertisement -

நாமக்கலில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தவர்.. கால் தவறி கீழே விழுந்து மரணம்!!

இந்தத் தகவலை அறிந்த சக்திவேலின் மகன் பாலசுப்பிரமணி நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பாலசுப்ரமணி அளித்த புகாரின் பேரில் நாமக்கல் காவலர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR