விஜய் என்பவர் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.இவர் 10 திரைப்படங்களுக்குப் பிறகு தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.இவர் தற்பொழுது தமிழ் சினிமா துறையில் முதன்மையான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.இவரை விஜயின் ரசிகர்கள் அனைவரும் தளபதி என்று கூறுவார்கள்.இவருக்கு அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.இவர் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஆவார்.முதன்முதலில் இவருடைய தந்தை இயக்கிய திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார்.
தற்பொழுது தளபதி விஜய் அவர்கள் மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் இணைந்து நடித்து முடித்து இருக்கும் திரைப்படம் லியோ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.இந்தத் திரைப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படும் தீவிரமாக நடந்து வருகின்றது.
இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் சமீபத்தில் வெளியாகி கடும் விமர்சனத்தை பெற்று வந்தது.மேலும் விரைவில் லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சை மிக பிரம்மாண்டமாக மதுரையில் நடத்த திரைப்பட குழு திட்டமிட்டு இருக்கின்றது.ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் தெரியவந்திருக்கிறது.
லியோ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68 ஆவது படத்தை விஜய் நடிக்க இருக்கின்றார் இந்த திரைப்படம் அரசியல் கதைகளத்தோடு உருவாகவதாக கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த திரைப்படத்திற்கு பிறகு விஜய் 3 வருடங்களுக்கு திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்று செய்திகள் வந்திருக்கிறது.மேலும் இவர் முழு அரசியல் பணியில் இறங்க போவதாக தகவல்கள் கசிந்து உள்ளது.இவர் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க போவதாக ரசிகர்கள் அனைவரும் கூறப்பட்டு வருகின்றனர்.
விஜய் மாஸ்டர் பிளான் போட்டு தான் அரசியல் களத்தில் இறங்க இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.விஜய் 3 வருடங்கள் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுவது.திரை உலக வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
தளபதி விஜய் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை கொடுப்பதாலோ தலைவர்கள் பிறந்த நாளை அனுசரிப்பதாலோ பிறந்தநாளில் ரசிகர்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்வதால் மட்டுமே அரசியலில் இறங்கி வெற்றி பெற முடியாது.தீவிர அரசியலில் களப்பணிகளில் இறங்க வேண்டும் என்று பலர் விமர்சனங்கள் விஜயின் மேல் எழுந்து வருகின்றது.இதற்கு பதிலடி கொடுத்த விஜய் திரைப்பட பணிகள் அனைத்தையும் துறந்து தீவிர அரசியலில் விஜய் கவனம் செலுத்த உள்ளதாக ரசிகர்கள் கூறப்பட்டு வருகின்றனர்.