ஒரு சிலருக்கு இளமையிலே முடி கொட்டி விடும் அதனால் முடி கொட்டாமல் இருப்பதற்கு பல ரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி தலையில் தடவுவார்கள் அதனால் இப்பொழுது முடி வளரும் ஆனால் குறைந்த காலத்தில் தலை முடிக்கு பாதிப்பு அல்லது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்.முடிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கு எந்தவித பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு இயற்கை முறையில் முடி நன்றாக வருவதற்கு பல வழிகள் இருக்கிறது அது என்னென்ன வழிகள் என்பதை நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
முடி கொட்டுவதை இயற்கை முறையில் தடுப்பது எப்படி
முடி கொட்டுவதை தடுப்பதற்கு பல இயற்கை முறைகள் இருக்கிறது அதில் முதல் முறையாக இரவு தூங்குவதற்கு முன்பு தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் வேப்பந்தலையை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். மறுநாள் அந்த நீரை எடுத்து தலையில் தேய்த்து குளித்து விட்டால் முடி நன்கு வளர்ச்சி பெற்று,தலையில் இருக்கும் பேன்,ஈர் போன்ற பூச்சிகள் இறந்து விடும்.
கிராமப்புறத்தில் எளிதில் கிடைக்கும் கீழாநெல்லி கீரையை பறித்து அதை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து அதன் பிறகு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காட்சி அதை தினந்தோறும் தலைக்கு தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.
நெல்லிக்காயில் அதிக அளவு மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது தினந்தோறும் நாம் சாப்பிடும் உணவுடன் நெல்லிக்காயை சேர்த்து வருவதன் மூலம் முடி நன்றாக வளர்ச்சி பெறும்.உணவுடன் தான் நெல்லிக்காயை சேர்த்து சாப்பிட வேண்டும் என்றெல்லாம் கிடையாது வெறும் நெல்லிக்காய் மட்டும் சாப்பிடலாம்.
பொதுவாக முடியின் அடர்த்தி குறைந்தாலே சின்ன வெங்காயத்தை நம் முடியில் தடவுவது வழக்கமான ஒன்றாகும் அந்த சின்ன வெங்காயத்துடன் கருவேப்பிலை சேர்த்து அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வருவதன் மூலம் முடி நன்றாக வளர்ச்சி பெறும் அது மட்டுமில்லாமல் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
வெறும் நெல்லிக்காயும் சாப்பிடலாம் வெறும் நெல்லிக்காய் சாப்பிட உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நெல்லிக்காயை பவுடராக்கிக் கொண்டு அந்த பவுடரை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி தினந்தோறும் தலைக்கு தடவி வருவதன் மூலம் முடி நன்றாக வளர்றதுடன், கருப்பாகவும் வளரும்.
வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.
கருங்காலி மாலை அணிந்து அசைவம் சாப்பிடலாமா