மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும் ஒவ்வொரு பாதிப்புக்கும் ஒவ்வொரு உணவு முறைகளை நம் கையாண்டு வந்து கொண்டே இருப்போம்.ஒரு சில நோய்களுக்கு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் அறிவுறுத்தலின்படி பல மருந்துகளையும் சாப்பிட்டு வருவோம்.மருந்துகளை சாப்பிட்டும் நமக்கு வந்திருக்கும் நோயின் அளவுகளை கட்டுப்பாட்டுக்குள் தான் வைத்திருக்கும்.
ஆனால் முழுமையாக குணப்படுத்தாது. நமக்கு இயற்கையாக எளிய முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான மருந்துகளை நாமளே செய்து கொள்ளலாம். அந்த வகையில் உங்கள் வீட்டில் பூண்டு மற்றும் தேன் இருந்தால் போதும் செரிமானம் பிரச்சனைகள், உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோயின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும்.
பூண்டு மற்றும் தேனின் மருத்துவ குணங்கள்
பூண்டு மற்றும் தேன் கலவையை சாப்பிடுவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் இருக்கிறது குறிப்பாக சொல்லப் போனால் நம் சாப்பிடும் சாப்பாடு செரிமானம் ஆனால் தான் நம் உடலுக்கு பல சத்துக்கள் செல்லும் அது மட்டுமில்லாமல் செரிமானம் ஆகாமல் இருந்தால் வயிறு பிரச்சனைகள் ஏற்படும் அதனால் பூண்டு மற்றும் தேன் கலவையை சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனைகள் சரியாகிறது.
பெரும்பாலும் மருந்துகள் அதிகம் சாப்பிடுபவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவராக தான் இருப்பார்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மாத்திரை சாப்பிட்டால் கடைசி வரைக்கும் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டும்.அதனால் தேன் மற்றும் பூண்டு கலவையை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவை இது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறது.
ஒரு சிலருக்கு என்னதான் சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் பசி எடுத்துக் கொண்டே இருக்கும். என்னடா இப்பதான் சாப்பிட்டோம் எப்படி நமக்கு பசி எடுத்துக் கொண்டே இருக்கிறது என்று நமக்கு தோணும்.அந்த பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் தேன் மற்றும் பூண்டை சேர்த்து சாப்பிட்டால் பசி உணர்வை குறைப்பது மட்டுமல்லாமல் உடல் எடையும் குறையலாம் .
பூண்டு மற்றும் தேன் கலவையை செய்யும் முறை
பூண்டு நன்கு உரித்து அதன் மீது தேனை ஊற்றி ஒரு வாரத்திற்கு மூடி ஊற வைக்க வேண்டும்.அதன் பிறகு தேன் மற்றும் பூண்டு கலவையை மருத்துவத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.