இப்போது உள்ள காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகளில் ரசாயனம் கலந்து இருப்பதால் பல நோய்கள் நமக்கு வந்து விடுகிறது. சர்க்கரை நோய் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போதெல்லாம் இருக்கிறது. சர்க்கரை நோய் இல்லாதவர்களை பார்ப்பது தான் அரிதான விஷயம். அப்படி பார்த்துவிட்டால் அவர்களுக்கு கோயில் கட்டிதான் கும்பிட வேண்டும் சர்க்கரை நோய் என்பது அனைவருக்கும் இப்போதெல்லாம் வந்துவிடுகிறது.சக்கரை நோய் என்றால் யாருக்கோ ஒருவருக்கு தான் இருக்கும் ஆனால் இப்பொழுது அனைவருக்கும் இருக்கிறது.
சர்க்கரை நோய் வந்தால் மருத்துவரிடம் சென்று மருத்துவரின் அறிவுறுத்தல் படி மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது உணவு பழக்கவழக்கங்களை மாற்றி சாப்பிடுவது போன்ற செயற்பாடுகளை காலம் வரை செய்து கொண்டுதான் இருக்க வேண்டும்.மருந்துகள் இல்லாமல் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பல இயற்கை வழிகள் இருக்கிறது.
நாவல் பழம் என்றால் அனைவருக்கும் தெரியும் அந்த நாவல் பழத்தில் இருக்கும் கொட்டையின் மூலமாக சர்க்கரையின் அளவை குறைக்க முடியும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? இது உண்மைதான் நாவல் பழம் பறித்து அதில் உள்ள கொட்டையை சுடு தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு பின்னர் வெயிலில் உலர்த்தி அதை அரைத்து பவுடராக்கிக் கொள்ளவும்.
அதை தினந்தோறும் பயன்படுத்தி வந்தால் சர்க்கரை அளவு குறையும் என்று சொல்லப்படுகிறது.அது மட்டும் இல்லாமல் நாவல் பழத்தின் விதையை பொடி ஆக்கி சாப்பிடுவதன் மூலம் கிட்னியில் இருக்கும் கல்லை கரைக்க உதவுவையாக இருக்கிறது நாவல் பழத்தில் அதிக அளவு இரும்பு சத்துகள் உள்ளது. ரத்தம் அதிகரிக்க மற்றும் ரத்தம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த இது உதவியாக இருக்கிறது.
வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.