நம் முன்னோர்களாம் உணவு சமைப்பதற்கு நல்லெண்ணெய் கடலென என இயற்கையாக கிடைக்கும் எண்ணெய்களை நாம் பயன்படுத்தி உணவுகளை சமைத்து சாப்பிட்டார்கள். நல்லெண்ணெய் கடலை எண்ணெய் விலை உயர்வாக இருப்பதால் பாமாயில் பயன்படுத்தி வருகிறோம் இன்னும் சில பேர் நல்லெண்ணெய் கடலெண்ணெய் என்கிற பெயரில் கடையில் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
கடையில் வாங்கும் நல்லெண்ணெய் கடலை எண்ணெய் முழுவதுமாக இயற்கையான முறையில் செய்யப்பட்டதா என்பது நமக்கு தெரியாது. பெரும்பாலும் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் கடலை எண்ணெயை பயன்படுத்துகிறார்கள். கடலை எண்ணெய் வாசனைக்காக பயன்படுத்துகிறது ஆனால் நல்லெண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
நல்லெண்ணையின் நன்மைகள்
நல்லெண்ணெயில் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தருவதற்கு பல ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. எள் மூலம் எடுக்கப்பட்ட சுத்தமான நல்லெண்ணையை பயன்படுத்தி சமைத்த உணவை சாப்பிடுவதன் மூலம் முடி அடர்த்தியாகவும் ,கருமையாகவும் மற்றும் விரைவில் நரைமுடி வராமல் இருக்கவும் உதவுகிறது.
நல்லெண்ணையை பெரும்பாலும் மூட்டு வலி இருப்பவர்கள் தான் பயன்படுத்துவார்கள் வலி இருக்கும் இடத்தில் சுத்தமாக எடுக்கப்படும் நல்லெண்ணையை தடவுவதன் மூலம் மூட்டு வலி,கை வலி,கால் வலி போன்ற வலிகள் படிப்படியாக குறைந்து விடும்.
நல்லெண்ணெயால் சமைக்கும் உணவுகளை சாப்பிடுவது மூலம் ரத்த அழுத்தம் குறைவதோடு மன அழுத்தமும் குறைகிறது.
வாயில் புண் இருப்பவர்கள் அல்லது வாய்க்கு எந்த ஒரு ஆரோக்கிய குறைபாடு வராமல் இருப்பதற்கு தினந்தோறும் நல்லெண்ணையின் மூலம் வாய் கொப்பளித்தால் வாய் புண் மற்றும் வாயில் இருக்கும் நஞ்சுகள் அழிந்து விடும்.
பெரும்பாலும் விழாக்கள் எதுவும் வரும் பொழுது நல்லெண்ணெயில் தேய்த்து நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் உடம்பு குளிர்ச்சியாகும். உடம்புக்கு குளிர்ச்சி ஆவது மட்டுமல்லாமல் சர்மம் பொலிவு பெறும்.
நல்லெண்ணெயால் சமைக்கப்படும் உணவுகளை சாப்பிடும் பொழுது சர்க்கரை நோயால் எந்த ஒரு ஆபத்தும் உடலுக்கு வராமல் தடுக்கிறது அது மட்டும் இல்லாமல் புற்றுநோய் வராமல் இருப்பதற்கு உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு நல்லெண்ணெய் உதவுகிறது.
வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.