யானை கனவில் வந்தால் என்ன பலன் | Yaanai Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது.
கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.நம் வீட்டில் வளர்க்கும் நாய்,மாடு,ஆடு போன்ற விலங்குகள் கனவில் வந்தால் நமக்கு எந்த ஒரு பயமும் இருக்காது.
காட்டு விலங்குகளான சிங்கம்,புலி,யானை போன்ற விலங்குகள் கனவில் வந்தால் நமக்கு கொஞ்சம் பயமாக தான் இருக்கும்.அந்த வகையில் யானை கனவில் வந்தால் என்ன பயன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
யானை கனவில் வந்தால் என்ன பலன்
யானை கனவில் வந்தால் கனவு காண்பவர் திருமணம் ஆகாமல் இருந்தால் விரைவில் அவருக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் ஆகும்.
கூட்டமாக இருக்கும் யானை கனவில் வந்தால்
கூட்டமாக இருக்கும் யானை கனவில் வந்தால் கனவு காண்பதற்கு ஏதேனும் பரம்பரை சொத்துக்கள் இருந்தால் அந்த சொத்து தனக்கு வருவதற்கு பிரச்சனைகள் எதுவும் இருந்தால் அந்த பிரச்சினைகள் எல்லாம் நீங்கி பரம்பரை சொத்தில் உங்களின் பங்கு உங்களுக்கு கிடைக்கும்.
யானைக்கு உணவு அளிப்பது போல் கனவில் வந்தால்
யானைக்கு உணவு அளிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து அதிக அன்பு கிடைக்கும்.
மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
யானை தந்தம் கனவில் வந்தால்
யானை தந்தம் கனவில் வந்தால் கனவு காண்பதற்கு வரவிருக்கும் சந்தோஷம் மற்றும் வெற்றியை இந்த கனவு உணர்த்துகிறது.
யானை மேல் சவாரி செய்வது போல் கனவில் வந்தால்
யானை மேல் சவாரி செய்வது போல் கனவில் வந்தால் கனவு காண்பதற்கு வரவேற்கும் அதிர்ஷ்டம்கிடைக்கும். குடும்பத்தில் மற்றும் தொழில் செய்யும் இடத்தில் நல்ல மரியாதை கிடைக்கும்.
இறந்த யானை கனவில் வந்தால்
இறந்த யானை கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு இது ஒரு கெட்ட கனவாக இருக்கிறது. வரவேற்கும் ஆபத்தை இந்த கனவு உணர்த்துகிறது. மேலும் நீங்கள் தேவையில்லாத செயல்களை செய்து பிறரின் வெறுப்புக்கு ஆளாவீர்கள்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
காளை மாடு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன் |
புலி கனவில் வந்தால் என்ன பலன் |
நாய் கனவில் வந்தால் என்ன பலன் |
சிறுத்தை கனவில் வந்தால் என்ன பலன் |