நாமக்கல் அண்ணா நகரை சேர்ந்த விஸ்வா என்பவர் வெல்டிங் தொழிலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது இந்நிலையில் நேற்று முன்தினம் விஷ்வா தனது நண்பர்களுடன் வண்டியில் கொல்லி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.அப்பொழுது 70 வது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி ஒன்று எதிர்பாராத விதமாக விஷ்வா மீது மோதியது லாரி மோதிய விஷ்வா தூக்கி எறியப்பட்டார்.
எதிர்பாராத விதமாக விசுவா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவருடன் சென்ற நண்பருக்கு எந்த ஒரு காயமும் ஏற்படாமல் உயிர் தப்பினார். விபத்து அறிந்து கொல்லிமலை வாழவந்தி நாடு காவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஷ்வாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து காவலர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தபோது லாரி ஒட்டியவர் கொல்லிமலை இளங்கியம்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்று தெரியவந்தது காவலர் அருண்குமாரை தேடி வருகின்றனர்.