தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 12 ராசிகள் |
இந்து சமயத்தில் ஜோதிடத்தை பெரும்பாலானோர் நம்புகின்றனர்.இத்தகைய ஜோதிடத்தில் முதன்மையாக கருதப்படுவது மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளை பற்றி தான்.இந்த 12 ராசிகளுக்கு தனி தனி அடையாளங்களும் குணங்களும் ஒரு சில குறிப்பிடும் முக்கிய தகவல்களும் இருக்கின்றது.
இந்த ராசிகளுக்கென்று நட்சத்திரங்களும் உள்ளது.ஜோதிடத்தில் ராசிகளை ஆண்,பெண் ராசிகள்,நெருப்பு,நிலம்,காற்று,நீர் மற்றும் திசைகளை குறிக்கும் ராசிகள் என்று பலவகை இருக்கின்றது.ஒவ்வொரு ராசியும் 30 பாகை அளவு கொண்டிருக்கிறது.இதனுடைய அடிப்படையில் பூமியில் இருக்கும் ஒவ்வொரு உயிர்களின் குணாதிசியம்,செயல்பாடு,வாழும் விதம் வாழும்,திறன் போன்றவற்றை கொண்டு கணிக்க முடியும்.மேலும் இந்த 12 ராசி பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
Zodiac Signs In Tamil And English
Zodiac signs in Tamil | Zodiac signs in English |
மேஷம் | Aries |
ரிஷபம் | Taurus |
மிதுனம் | Gemini |
கடகம் | Cancer |
சிம்மம் | Leo |
கன்னி | Virgo |
துலாம் | Libra |
விருச்சிகம் | Scorpio |
தனுசு | Sagittarius |
மகரம் | Capricornus |
கும்பம் | Aquarius |
மீனம் | Pisces |
zodiac signs in tamil and english with symbols
மேஷம் – Aries
வீரத்தின் நாயகன் செவ்வாய் பகவானே அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்கள் இயற்கையில் யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தன்மையும் வைராக்கியமும் அதிகம் உள்ளவர்கள்.இவர்கள் எதையும் தைரியத்தோடும் நம்பிக்கையுடனும் செய்து முடிப்பார்கள்.வெற்றி பெறுவது ஒன்றிய இலட்சியமாக கொண்டிருப்பவர்கள்.இவர்கள் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பார்கள்.மூக்கிற்கு மேல் கோபம்தான் இவர்களுக்கு வரும் என்றாலும் அதை எளிதில் கையாளுவார்கள்.இவர்கள் தந்திரசாலிகள் மட்டுமல்ல தைரியசாலைகளும் தான்.
ரிஷபம் – Taurus
ரிஷப ராசிக்காரர்கள் காதல் கிரகம் சுக்கிரனை அதிபதியாக கொண்டவர்கள்.நீங்கள் அழகான தோற்றத்தை கொண்டிருப்பீர்கள்.மிகவும் அமைதியாக இருப்பீர்கள்.ஆடை அணிகலன் அணிவதில் அதிகம் பிரியம் கொண்டவராக இருப்பீர்கள்.இவர்களுடன் நட்பு வட்டம் பெரியதாக வைத்திருப்பீர்கள்.இவர்களுடைய வாழ்க்கை ஏற்றம் இரக்கமாகவோ இருக்கும் இவர்கள் எடுக்கும் முயற்சியில் பின் வாங்க மாட்டார்கள்.
மிதுனம் – Gemini
மிதுன ராசிக்காரர்கள் அறிவின் நாயகன் புதனை அதிபதியாகக் கொண்டவர்கள்.இவர்கள் அதிக அளவு மூலை பலன் உள்ளவர்கள்.உடல் பலத்தை காட்டிலும் இவர்களுக்கு மூளை பலமே உறுதுணையாக இருக்கும்.இந்த ராசிக்காரர்கள் புத்திசாலிகள் மூளை மின்னல் வேகத்தில் இவர்களுக்கு செயல்படும்.இவர்கள் அடுத்தவர்களுக்கு யோசனை சொல்லுவார்கள் ஆனால் இவர்களைப் பற்றி மட்டும் ஒரு நிமிடம் கூட யோசிக்க மாட்டார்கள்.இவர்கள் அதிக புத்திசாலித்தனத்தையும் மிகச் சிறந்த நிர்வாகம் தன்மையும் கொண்டவர்கள்.இவர்கள் ஆன்மீகத்தின் மீது அதிக அளவு நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.
கடகம் – Cancer
கடக ராசி காரர்கள் மனோகாரகன் சந்திரனை ராசியின் அதிபதியாகக் கொண்டவர்கள்.இவர்கள் பேச்சை ஆயுதம் ஆக்கி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்கள்.இவர்கள் வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேற வேண்டும் என்ற ஆவலில் மின்னல் வேகத்தில் செயல்படுவார்கள்.இவர்களுக்கு எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் அதற்காக இவர்கள் வருத்தப்பட மாட்டார்கள்.இந்த ராசிக்காரர்கள் வைராக்கிய மனம் பெற்றவர்கள்.இவர்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள்.இவர்களுக்கு பணபலம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களை சுற்றி ஒரு படைபலம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
சிம்மம் – Leo
சிம்மராசிக்காரர்கள் சூரியனை ராசியின் அதிபதியாக கொண்டவர்கள். இவர்கள் அதிகாரத்தை உபயோகித்து காரியம் சாதிப்பதை விட அன்பை உபயோகித்து காரியத்தை அதிகம் சாதித்து காட்டுவார்கள்.இவர்கள் அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவும் தன்மை கொண்டவர்கள்.இதனால் இவர்கள் அதிகம் கோபப்படுவார்கள் வெளி வட்டாரத்தில் வியக்கும் விதத்தில் செல்வாக்கு பெற்றிருந்தாலும் வீட்டிற்குள் இவர்களுக்கு போராட்டமா தான் இருக்கும்.நிர்வாக திறமையினால் எண்ணற்ற நெஞ்சங்களின் மனதில் நீங்காது இடம் பிடித்து விடுவார்கள்.
கன்னி – Virgo
கன்னி ராசிக்காரர்கள் புதனை ராசியின் அதிபதியாகக் கொண்டவர்கள். இவர்கள் புதுமையாகவும் புத்திசாலியாகவும் பேசுவதில் திறமை பெற்றவர்கள். இவர்கள் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டிருப்பார்கள். இவர்களுடைய வாழ்க்கையை ரகசியங்களை மனதில் வைத்துக் கொள்வார்கள் திருமணம் முடிந்த பிறகு கவனமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. இவர்களுக்கு ஆத்ம பலத்தை விட அறிவு பலம் அதிகமாக இருக்கின்றது.
துலாம் – Libra
துலாம் ராசிக்காரர்கள் சுக்கிரனை ராசியின் அதிபதியாகக் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களை எடை போடுவதில் பல்லவர்கள். இவர்களுக்கு கோவம் உடன்பிறப்பு கொஞ்சம் குறைத்துக் கொண்டால் இவர்கள் போல நல்லவர்கள் யாரும் இருக்க முடியாது. இவர்கள் கைராசிக்காரர்கள் என்பதால் இவர்களை எல்லாவற்றிற்கும் அழைத்துச் செல்வார்கள். வசீகர பார்வையும் கவர்ச்சியான முகத்தோற்றமும் கொண்டிருப்பார்கள். இவர்கள் சமூகத்தில் தனி அந்தஸ்து பெற்று விளங்குவார்கள். மேலும் அனைத்து சுகபோகங்களையும் அனுபவிப்பார்கள்.
விருச்சிகம் – Scorpio
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் ராசிக்கு அதிபதியாகக் கொண்டவர்கள் இவர்கள் இந்த செயலை செய்தாலும் துணிச்சலாக செய்வார்கள். மேலும் இவர்கள் விறுவிறுப்பாக செயல்பட்டு காரியத்தில் வெற்றிகளை குவிக்கும் கூர்மையான புத்தி குணத்தில் இமயமாக இருப்பார்கள். இவர்கள் விருந்தினர்களை உபசரிப்பதில் ஈடு இணையற்றவர்களையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த செயலையும் ஆர்வத்தோடு கற்பனை வளர்த்தாலும் காரியங்களை எளிதில் முடிக்கும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தவறு செய்பவர்களை எந்த உயரத்தை நிலையிலும் இருந்தாலும் தட்டிக் கேட்க தயங்க மாட்டார்கள்.
தனுசு – Sagittarius
தனுசு ராசிக்காரர்கள் குரு பகவானை ராசியின் அதிபதியாக கொண்டவர்கள். இவர்கள் தெய்வ பக்தியோடு மட்டுமில்லாமல் தேசபக்தியும் அதிகம் கொண்டிருப்பவர்கள். இவர்களிடம் வீரமும் வேகமும் அதிகம் இருக்கும். வெளியில் சுதந்திர பறவைகளாக தெரியும் இவர்கள் வீட்டில் ஏதாவது ஒரு வகையில் நிம்மதி இல்லாமல் இருப்பார்கள். கவரிமான் பரம்பரை என்றுதான் இவர்களை சொல்ல வேண்டும்.
மகரம் – Capricornus
மகர ராசிக்காரர்கள் சனிபகவானை ராசியின் அதிபதியாக கொண்டவர்கள். இவர்கள் புன்னகை சிந்து முகத்தோடு போற்றும் இனிமை குணத்தோடு இருப்பார்கள். வைராக்கிய மனம் கொண்டவராக இருப்பார்கள். அது மட்டும் இல்லாமல் இவர்கள் பொறுமைசாலிகளாக விளங்கி வாழ்க்கையில் பல சோதனைகள் ஏற்பட்ட பிறகுதான் சாதனை பெறுவார்கள். இவர்கள் தொழில் அமைக்கும் பொழுது ஜாதக பலன் அறிந்து செயல்பட வேண்டும். இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை அகற்றினால் வாழ்வில் உயர்நிலை அடைவீர்கள்.
கும்பம் – Aquarius
கும்ப ராசிக்காரர்கள் சனியின் ஆதிக்கத்தை பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு தனி முத்திரை பதித்திருப்பார்கள். உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்ற பட்டத்தையும் பெற்று இருப்பார்கள். இவர்கள் தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்க தயங்க மாட்டார்கள். இவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இவர்கள் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் நீங்காத மனக்குறை ஒன்று இருந்து கொண்டே இவர்களுக்கு இருக்கும். தாராள மனப்பான்மை கொண்டவர்கள் தான் இவர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள்.
மீனம் – Pisces
மீன ராசிக்காரர்கள் குருபகவானை ராசியின் அதிபதியாக கொண்டவர்கள். இவர்கள் வாழ்க்கையில் படிப்படியான வளர்ச்சியை கொண்டிருப்பார்கள். இவர்கள் தானம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள். நிதானம் பெற்றிருந்தால் பிறருக்கு நல்ல ஆலோசனை சொல்வார்கள். மனதிற்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதனை உடனடியாக செய்வார்கள். இவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் அதிகம் இருக்கின்றது. இவர்கள் எந்த நிலையிலும் எல்லாரையும் மதிப்பார்கள் எவ்வளவு பெரிய பதவி என்றாலும் இவர்களை த்தானே தேடி வரும் அதுதான் இவர்களின் தனிதன்மை.