கேரட் பயன்கள் மற்றும் தீமைகள் | Carrot Benefits in Tamil
கேரட் அப்படியினாலே நமக்கு தோன்றது கேரட் ஜூஸ், கேரட் பொரியல், கேரட் கேக்,என அப்படித்தான் ஞாபகம் வரும். இந்த கேரட்டில் பொட்டாசியம் ,வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் கே,மினரல் போன்ற அனைத்து சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்த கேரட்டில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. அதனால் கண்களுக்கும், சருமத்திற்கும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
கேரட்டானது பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளதால் மனித கண்களில் புரைவராமல் மற்றும் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது. கேரட்டில் எண்ணற்ற நன்மைகள் உடையது.
கேரட் பயன்கள் – Carrot Benefits in Tamil
தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி குடல் புண்கள் வராமல் தடுக்கும். கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவு பெற முடியும். அதனால் நாம் கேரட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.கேரட் ஆனது சூப் வைத்தும் சாப்பிடலாம், பொறியல் பண்ணி மற்றும் எல்லா காய்கறிகளிலும் கேரட்டை சேர்த்தும் சமைக்கலாம். நாம் கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்.கேரட்டில் கால்சியம் இருப்பதால் குழந்தைகளுக்கு கேரட் மில்க் கேக் செய்து கொடுத்தாள் எளிதில் ஜீரணமாகும்.
கேரட் ஜூஸ் பயன்கள்
வயதாகும் மனிதர்கள் அனைவருக்கும் எலும்பு உறுதி தன்மையை இழக்கும்.அதனால் அவர்கள் தினந்தோறும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை குடித்து வந்தால் எலும்பு உறுதி கிடைக்கும். தினந்தோறும் கேரட் ஜூஸ் குடித்து வருபவர்கள். கேரட் ஆனது உடலில் உள்ள செல்களின் ஆயுள் தன்மை அதிகரிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவர்களின் உடலில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாக செயல்படுகிறது.
கேரட் ஜூஸ் தினமும் குடித்து வருவதால் கண் பார்வை மேம்படும் மற்றும் கண் புரை நோய்கள் தடுக்கப்படும்.இது மட்டும் இல்லாமல் பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காரணமாக சிலருக்கு அதீத வழி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படுகிறது அப்படி அவதிப்படுபவர்கள் கேரட் ஜூஸ் அருந்தினாள் நல்ல நிவாரணம் கிடைக்கும். தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கேரட் ஜூஸ் அருந்துவதும் நல்லது.
கேரட் நன்மைகள்
பொதுவாக உயிர்சத்துக்கள் நிறைந்த கேரட்டை பச்சையாக சாப்பிடுவது நல்லது. கேரட்டை கடித்து சாப்பிடுவதால் உமிழ் நீர் அதிகமாக சுரந்து செரிமானத்தை அதிகரிக்கிறது. பற்களில் கரை உள்ளவர்கள் கேரட்டை பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்களின் கரை மறைந்து விடும் மற்றும் வாயில் உள்ள துர்நாற்றத்தை போக்கும்.
கேரட்டில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்தி விருத்தி அடைய செய்கிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை நீக்குகிறது.
ஒரு கேரட்டை கருவுற்ற பெண்கள் பச்சையாகவோ அல்லது சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், களைப்பு ஏற்படாது. அது மட்டும் அல்லாமல் குழந்தை நல்ல நிறமாகவும், வலுவாகவும் பிறக்கும். ஆண்கள் தினமும் ஒரு கேரட்டை சாப்பிட்டு வருவது நல்லது.
கேரட் ஜூஸ் தீமைகள்
கேரட்டில் அதிகமான சத்துக்கள் அடங்கியுள்ளது. அதனால் நாம் அதை சாப்பிடலாம் இருந்தாலும் அதை அளவோடு சாப்பிட வேண்டும். அப்படி இல்லை என்றால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகள் கேரட் சாப்பிடுவது நல்லதல்ல ஒரு சிலர் உடலுக்கு கேரட் ஒவ்வாமையாக இருக்கும். இதனால் அவர்களுக்கு தோல் அலர்ஜி, படை வீக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகையால் கேரட் சாப்பிட்டால் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக கேரட்டை சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கேரட் சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய், குடல் பிரச்சனைகள், சர்க்கரை குறைவு பாதிப்பு மற்றும் ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கேரட் சாப்பிட்டால் உடலுக்கு அதிகப்படியான பாதிப்பு தரும். இதனால் டாக்டரை அணுகி விட்டு கேரட்டை சாப்பிட வேண்டும்.